உப்பு கண்டம் சமைப்பது எப்படி?

நான் சென்ற மாதம் இந்தியா சென்ற பொழுது என் பாட்டி ஆட்டு இறைச்சியில் செய்த உப்பு கண்டம் கொடுத்து அனுப்பினார். அதை லேசாக தட்டி எண்ணையில் இளம் சூட்டில் வறுக்கச் சொன்னார். முதல் முறை அதை வறுக்கும் போது எண்ணை சூடு அதிகம் ஆனதால் கருகி விட்டது. இரண்டாவது முறை எண்ணை சூடு அதிகம் இல்லாமல் வறுத்தேன். ஆனால் அது சரியாக வேக வில்லை. உப்பு கண்டத்தை எப்படி சரியாக சமைப்பது என்று யாராவது சொன்னால் மிக உதவியாக இருக்கும். நன்றி

டியர் சுபைனா ராம்குமார்
உப்பு கண்டத்தை எண்ணையை மிதமாக சூடாக்கி அதில் போடவும் மிதமான சூடாக இருந்தால்தான் அது வேகும் இல்லை என்றால் உடன் கருகிவுடும் மிதமான தீயிலிட்டு பொன்னிறமாக மாறியதும் எடுத்துவிடுங்கள்,இந்த முறை நானும் எடுத்து வந்து செய்தேன் நன்றாக இருந்தது!

மிஸஸ்.ராம்,
உப்புக் கண்டத்தை லேசாக வறுத்து நன்க கழுகி மிக்ஸியில் ஒரு ட்ரைபிளேடு கொண்டு இரண்டு சுற்று சுற்றினால் பூப்பூவாய் உதிர்ந்து விடும்.இதனை அடுப்பில் மிதமான சூட்டில் எண்ணெய் காய வைத்து உப்புகண்டத்தைப் போட்டு வறுக்கவும்.காரத்துக்கு மிளகாய்த் தூள் சேர்க்கலாம்.நாங்கள் இதனுடன் இரண்டு முட்டையையும் உடைத்து ஊற்றிக் கிளறுவோம்.அதிக நேரமும், அடுப்பு அதிகமான சூடும் இருந்தால் உப்புக் கண்டவறுவல் சுவை குறைந்து விடும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்