இங்க அரட்டை அடிக்கலாம் - 2

இனி இங்க கூடுவோமா?

போன கேள்வில இருந்து இங்க வந்த அடிக்கறதுல உங்க பேரு சரியா அடிச்சுருக்கேனானு தெரியல :-(

முதல்ல உங்க கேள்விக்கு தான் பதில், இப்படி எத்தன பேருங்க கிளம்பி இருக்கீங்க??? :-( இங்க ஆள் ஆளுக்கு எடையை குறைப்பது எப்படினு தலையை குடைஞ்சிட்டு இருக்கோம், நீங்க வந்து சர்வ சாதாரணமா குண்டாகணும்னு சொல்லி ஸ்டொமக் பர்னிங் பண்ணறீங்க..

என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்தியும் இப்படி தான், 48 கிலோவோ என்னவோ தான் இருப்பா. பிஸ்தா, முந்திரி, பாதாம், நெய், ஐஸ்க்ரீம், சாக்லேட் இன்னும் என்னலாம் கொழுப்பு ஐட்டமோ எல்லாத்தையும் சாப்பிடறேன், இடத்தை விட்டு அசையாம உக்காந்துருக்கேன், அப்போ கூட ஏன் குண்டே ஆக மாட்டேங்கறேன்னு புலம்புவா.. எனக்கு பேசாம என் உடம்புல இருந்து கொஞ்சத்தை வெட்டி குடுத்துடலாமானு இருக்கும்னா பாருங்க.. :-)

சில பேருக்கு உடல் வாகே அப்படி இருக்கும், குண்டாகாம இருக்கறது ஒரு வரம்னு நினைச்சு, நல்லா சாப்பிட்டு, நல்ல உடற்பயிற்சியும் பண்ணுங்க. ஒல்லியா இருக்கோம்னு உடற்பயிற்சி பண்ணாம சாப்பிடறது ஆரோக்கியம் இல்லைனு தான் நினைக்கிறேன். தேவா மேடம் உங்களுக்கு பதில் சொல்லுவாங்க தெளிவா.

பாபு மாமா (மத்தவங்கள்லாம் பாபு அண்ணானு கூப்பிடறாங்களே அவரே தான்) சொன்ன மாதிரி பெயர்பதிவு செஞ்சாலே குட்டைல விழுந்தாச்சு :-) நான் அமேரிக்க ஜானதிபதி ஆன உடனே உங்களை வெளியுறவு துறைக்கு போட்டுடறேன், ஓகேவா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நீங்களும் அரசியல்ல குதிக்கலாம், அதான் விடாம ஒபனிங் செர்மனி & க்ளோசிங் செர்மனி பண்ணறீங்களே! :-) உங்களுக்கும் காதுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல? ஒழுங்கா எல்லாரும் குத்தற மாதிரி குத்திட்டு போயிருக்கலாம், இப்போ பாருங்க கல்ஃப் நியூஸ்ல வந்துருச்சாம்!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நீங்களும் அரசியல்ல குதிக்கலாம், அதான் விடாம ஒபனிங் செர்மனி & க்ளோசிங் செர்மனி பண்ணறீங்களே! :-) உங்களுக்கும் காதுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல? ஒழுங்கா எல்லாரும் குத்தற மாதிரி குத்திட்டு போயிருக்கலாம், இப்போ பாருங்க கல்ஃப் நியூஸ்ல வந்துருச்சாம்!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

திரிஷா, அசின்??? ஆண்டவா, ஏன் என்னை இப்படி படுத்தற.. :-( 5'3" உயரம், 60 கிலோ உருவம். கறுப்பு ஸ்ட்ரெயிட் முடி, பொதுவா இடுப்பு வரை இருக்கும், இந்தியன் ஃபேர் ஸ்கின், (நைஜீரியாவில் நான் தான் வெளுப்புனு வைரமுத்து சொன்னாப்புல இங்க நான் தான் கறுப்பு) பழுப்பு கண், கொஞ்சம் சப்பை ஆனா நேர் மூக்கு, பல் வரிசை மட்டும் ஒழுங்கா இருக்கும். இதான் என் கணவர் கொடுத்த டிஸ்க்ரிப்ஷன் :-) அதோட கொஞ்சம் கருவளையத்தையும் சேர்த்து கற்பனை பண்ணிக்கோங்க, அந்த முகரை (நீங்க திட்டறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்) தான் ஹேமா ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஆ.. அங்க போய் படிச்சிட்டு இங்க வந்து பதில் அடிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு! போதாக்குறைக்கு அங்க இருக்கறதுக்கு தான் இங்க பதில் சொல்றேன்னு எத்தனை பேருக்கு புரியும்?? அதனால அங்கேயே மீதி பதில் சொல்றேன், இதுக்கு ஒரு சரியான தீர்வு கண்டுபிடிக்கும்படி தளிகா & ஜெயந்திக்காவை கேட்டு கொள்கிறேன். :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா என் பெயர் பிரதீபா கணவர் பெயர் பாலா.நான் அசைவம் சாப்பிடுவதில்லை.என் கணவர் சொல்வார் icecream,chocklate எதுவும் சாப்பிடுவதில்லை அப்புறம் எப்படி குண்டாக முடியும்
என்று.எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது.குழந்தை இல்லை.என் friends எல்லோரும் திட்டுகிறார்கள் முதலில் உடம்பை தேற்று அதற்கு பிறகு எல்லாம் தன்னால் நடக்கும் என்று சொல்கிறார்கள்.அதனால் தான் கேட்டேன் எப்படி உடம்பை தேற்றுவது என்று.

நீங்க ஏதோ வருத்தத்தில இருக்கற மாதிரி இருக்கு, நான் பேசினது ஏதும் ஹர்ட் பண்ணிடுச்சா? அப்படினா மன்னிச்சுடுங்க. குழந்தை பிறக்கறதுக்கும் ஒல்லியா இருக்கறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன? நான் அப்படி ஏதும் கேள்வி பட்டது இல்லியே. ஏதாவது சத்து குறைபாடு இருந்தா தான் சரி செய்யணும், நீங்க நல்லா சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. அதையும் மீறி ஒல்லியா இருந்தீங்கன்னா அதை பத்தி கவலை பட தேவை இல்லனு தான் நினைக்கிறேன். என் கசின் ஒருத்திக்கு கல்யாணம் இந்த மாசம்னு சொல்லிருந்தேன், அவளும் உங்க எடை தான் இருப்பா. ஆனா நல்ல ஆரோக்கியமா தான் இருக்கா. சில பேருக்கு உடல் வாகு அப்படி, என் கணவருக்கும் கூட அப்படி தான். அதுக்குள்ள எல்லாரும் ஏன் குண்டாககலை, நல்லா சமைக்கறது இல்லியா நீனு கேக்கறாங்க.. அது அவங்க முட்டாள்தனம்னு விட்டுடுவேன். 27 வருஷமா குண்டாகாதவர் நான் வந்து 7 மாசத்தில் ஆகிடுவாரா? ஆனா அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். அது போல தான் இதுவும். குழந்தை பிறப்பதில் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்பதே சிறந்தது. அதாவது, நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்தும் 2 வருடமாக உருவாகவில்ல எனில். அப்படி அல்லாமல், குண்டான பிற்பாடு முயற்சி செய்யலாம் என்று இருக்கிறீர்கள் என்றால், அது தேவையில்லை என நினைக்கிறேன். அனுபவம் உள்ளவர்கள் யாரும் உங்களுக்கு இன்னும் தெளிவா பதில் சொல்லுவாங்க பாருங்க.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எந்த வருத்தமும் இல்ல ஹேமா.doctorகிட்ட எல்லா testம் செய்தாகிவிட்டாது.எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.நாங்கள் 2 வருடமாக try பண்ணிகொண்டுதான் இருக்கிறோம் ஹேமா

எந்த பிரச்சனையும் இல்லனு சொல்லிட்டாங்கன்னா கவலையை விடுங்க, மனசை சந்தோஷமா வெச்சுக்கிட்டாலே போதும்னு சொல்லுவாங்களே.. அதான் உண்மையா இருக்கணும். கடவுள் எப்போ தரணும்னு நினைக்கிறாரோ அப்போ தருவார் உங்க பரிசை! :-) அது வரை பொறுமையா இருங்க. பிரச்சனை உள்ளவர்கள், ரொம்ப வயதான பிறகும் கூட குழந்தை பெற்று கொள்ள கூடிய அளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அப்படி ஏதும் இல்லாமல், உங்களுக்கு 2 வருடம் தானே ஆகிருக்கு, இன்னும் நிறைய நேரம் இருக்கு, சந்தோஷமா காத்திருங்க.

எனக்கு ஒரு சந்தேகம், ஒரு தம்பதிக்கு எந்த பிரச்சனை/குறைபாடும் இல்லை, அப்போது அவர்கள் நினைத்த உடன் குழந்தை உருவாகாமல் இருப்பதன் காரணம் என்ன? விஞ்ஞானரீதியா கேட்கிறேன். கோடானுகோடி விந்து இருக்கும்னு சொல்றாங்களே, அப்போவும் நேரம் எடுப்பதன் காரணம் என்ன??

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை?
நாங்களெல்லாம் உடம்ப குறைக்கிறதை பத்தி யோசித்துகிட்டு இருக்கோம்....நீங்க குண்டாகனும்னு சொல்றீங்க..ஒல்லியா இருக்கறதுக்கும் ஆரோக்கியத்திற்கும் சம்பந்தமே இல்லை.சந்தோஷமா இருங்க...

take care

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்