அலோ வேரா ஜெல்

அலோ வேரா ஜெல்லை எதற்கு எல்லாம் பயன்படுத்தலாம்? எப்படி எனவும் விளக்க முடியுமா??

அன்புடன்,
ஹேமா.

ஹேமா..எப்படி இருக்கீங்க??இனி சன்டே நீங்கெல்லாம் அதிகம வரமாடீங்க....aloevera வை தோலுக்கு,முடிக்கு,உடலுக்கு, ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க....அதில் தோலுக்கு கொஞ்சம் ஜெல் apply பன்னி 20 நிமிடம் கழிச்சு கழிவிடலாம்...முடிக்கு எப்படின்னு தெரீல....சிலர் கற்றாழையின் pulp ஐ எடுத்து அப்படியே சாபிடுவாங்க...நம்ம நாட்டு கிராமங்கள்ள அத கறி சமச்சு சாப்பிடுவாங்கலாம்...ஒரு 110 வயது தாத்தா அவருடைய ஆரோகியதிற்கு ரகசியம் அதான்ன்னு சொன்னத புக்ல படிசிருக்கேன்.....இதுல எது எல்லாம் உன்மைன்னு எனக்கு சொல்ல தெரீல...ஆனா அது தீக்காயம்,சிராய்வு,eczema,inflammation அதுக்கெல்லாம் நல்ல மருந்துன்னு எனக்கு தெரியும்..என்னுடைய அம்மா ஒரு முற கீழ விழுன்து இடுப்புல நல்ல அடி...1 மாசத்துக்கு கட்டில விட்டு எழவே முடியாதுன்னு எல்லாரும் சொன்னாங்க..அப்ப எங்க சொந்தத்தில் ஒருவர் கட்றாழையின் pulp சூடாக்கி அதனை துனியில் கட்டி சூடாக ஒத்தடம் கொடுத்ததுதான்...என் அம்மா 1 வாரத்தில் எழுன்து நடந்தார்..அப்ப அம்ம சொன்னது தான் அது நல்ல வலி நிவாரனின்னு

நான் நல்லா இருக்கேன், நீங்களும் அப்படி தானே? :-) நான் உங்க பதிலோட தலைப்பை பார்த்து பயந்துட்டேன், 110 வயசாகிடுமான்னு..

சண்டே என்பதால் வராம எல்லாம் இல்ல, இன்னிக்கு மட்டும் தான் கணவர் வீட்டில் இருப்பார்னு ஓவரா ஓடி ஆடிட்டேன். பயங்கர டயர்டா இருக்கு, அதான் எல்லா பதிலும் மெதுவா சொல்லலாம்னு.. அவசர கேள்வியை மட்டும் இங்கே போட்டேன் ;-)

என் முகத்துல புதுசா நிறைய பருக்கள் வர ஆரம்பிச்சுருக்கு.. ஒரு மாசமா இருக்கு, மாய்ச்சரைசர் போட்டாலும் போகலை, ட்ரையா வெச்சாலும் குறையல.. எண்ணைய் சாப்பாடு இல்ல, நிறைய காய்-பழம் சாப்பிடறேன், தண்ணீர் குடிக்கறேன், தலையை சுத்தமா வெச்சுக்கறேன்.. இன்னும் என்ன பண்ணணும்னு புரியல!

இப்போ முகத்துல அலோ வேரா தடவலாமா கூடாதா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

தளிகா, உங்களோட நிறைய பதிவுகளுக்கு நான் தான் தலைப்பு கொடுக்க வேண்டியதா இருக்கு. கொஞ்சம் அலுப்பு பார்க்காமல் தலைப்புன்னு வர்ற எடத்துல எதாவது டைப் பண்ணுங்களேன். இல்லேன்னா சமீபத்திய கருத்துக்கள்ல அந்த பதிவுக்கான லிங்க் வராது.

அப்புறம் எல்லோருக்குமான ஒரு வேண்டுகோள், தலைப்புல எது வேணும்னாலும் கொடுக்கலாம். அதற்காக, டியர் ஹேமா, ஹாய் மாலினி, ஹலோ அனிதா.. இப்படியேத்தான் கொடுக்கணும் என்பது கட்டாயம் இல்ல. கொஞ்சம் டைப் பண்ற டாபிக்குக்கு தகுந்த மாதிரி எதாவது ஒரு தலைப்பு கொடுக்கலாம். அது ஒரு குறிப்பிட்ட நபருக்காக கொடுக்கிற பதிலாக இருந்தாலும், அவர் பெயரை உள்ளே விளக்கம் கொடுக்கும் இடத்தில் மேலே "ஹாய் .........." என்று கொடுத்து ஆரம்பிக்கலாம். எப்போதும் தலைப்பிலேயே கொடுக்க வேண்டாம்.

தலைப்பு கருத்து சம்பந்தமாக இருக்கும்போது, தேடுதலில் எளிதாக கிடைக்கும். இன்னும் பல விசயங்களில் அது பயன்படும். (வழக்கம்போல் சங்கு ஊதிவிட்டேன்.)

ஓஹோ அப்ப அது நம்ம அட்மின் வேலையா.ஆமா ஹேமா நான் தலைப்பே போடுரது இல்ல..ஒரு நிமிஷம் அதிகம் எடுத்தா போட்டுரலாம் தான்..ஆன அதுக்கு சோம்பேரித்தனம்..இனி சரியா போட்டுர்ரேன்..இப்ப அட்மினுக்கு இத எப்பவோ எழுதனும்னு நெனசேன்..ஆனா நேரம் கெடக்கல....எங்க கெமிஸ்ட்ரி மிஸ்க்கும் உங்களுக்கும் இன்னொரு ஒற்றுமை இருக்கு..அவங்கலும் கல்யானம் பன்னிக்கல..ஆன வயசு ஒரு 55 இருக்கும்..அப்ரம் மீசை இருந்தும் இப்படி தோனுச்சான்னு கேட்டீங்கலே...எங்க மிஸ் நல்ல பெரிய்ய மூக்குத்தி போட்டிருப்பாங்க..அதனால மூக்குத்தி இஸ் ஈகுவல் டூ மீசை

இவ்வளவு சொல்லியும் திருப்பி ஹலோ அட்மின்னு சொல்றாளேனு பாக்கறீங்களா? என்ன பண்ணுறது இப்போ தான் கார்ல கணவர் "ப்ரேக்கை போடு ப்ரேக்கை போடு"னு எவ்வளவோ சொல்லியும் ப்ரேக்னு நினைச்சு ஆக்சிலரேட்டரை அமுத்திட்டு வந்தேன். என்ன ஆகிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.. நீங்க சொன்னா மட்டும் உடனே கேட்டுடுவேனா? அதனால நீங்க கவலை படாதீங்க, இனிமே நான் வர்றதே நிறைய குறைஞ்சிடும்.. வெட்டி பேச்சும் தானா குறைஞ்சிடும். மனசு சரி ஆனதுக்கு அப்புறம் வந்து எல்லாரையும் சந்திக்கிறேன்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹேமா என்னாச்சு??ஏதும் அடிபட்டுதா இல்ல அவர் திட்டினாரா??ஹேமா வராம அறுசுவை எப்படி சுவாரசியமா போகும்??இதுக்கு போய் சங்கடபடலாமா?வண்டி ஓட்ட கத்துகிட்ட எல்லாருக்கும் இப்படி ஏதாவதொரு ஒரு அனுபவம் கண்டிப்ப இருக்கும்...அத விட்டு தள்ளிட்டு இங்க வா ஹேமா

என்ன ஆச்சு!பார்த்து போக வேண்டாமா?எதுவும் அடி பட்டதா?அதாவது, கணவருக்கு!!!:)
ஓ.கே ஓகே அமைதி,அமைதி!இதுக்குப் போய் மனசு விடலாமா?நீங்க வாங்க இங்கே!நம்ம ஜோதியில் கலந்தால் எல்லாம் சரியாகி விடும்.உங்களின் கலகலப்பில்தான் நான் என் மகளைப் பார்க்கிறேன்.சரியா?

தோழர், தோழியர் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஹேமா, மனசு லேசா ஆகணும்னா மன்றத்துக்கு வந்துதான் ஆகணும்.

16ம் தேதி தான் மன்றத்துக்கு வருவேன்.
நன்றி
ஜெ

என்னாச்சுங்க ஹேமா?

// என்ன பண்ணுறது இப்போ தான் கார்ல கணவர் "ப்ரேக்கை போடு ப்ரேக்கை போடு"னு எவ்வளவோ சொல்லியும் ப்ரேக்னு நினைச்சு ஆக்சிலரேட்டரை அமுத்திட்டு வந்தேன். //

என்னமோ ஹாரனை அமுத்திட்டு வந்த மாதிரி சொல்லியிருக்கீங்க.. அமுத்திட்டு வந்துட்டீங்களா? அப்படின்னா நல்லபடியா இருக்கீங்கன்னுதானே அர்த்தம். ஒண்ணும் பிரச்சனையில்லையே?

// என்ன ஆகிருக்கும்னு உங்களுக்கே தெரியும்.. //

தெரியலயே.. கெஸ் பண்ண முடியலை. நின்னுகிட்டு இருந்த காருன்னா ஒண்ணும் ஆகியிருக்காது. வேகமா டிராபிக்ல போய்கிட்ட இருந்த காருன்னா நீங்க இப்படி இந்த பதிவை போட்டிருக்க முடியாது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில மெதுவா ஓட்டக் கத்துக்கிட்டு இருந்தீங்கன்னா வண்டிக்கு மாத்திரம் எதாவது லைட்டா டேமேஜ் ஆகியிருக்கும். அதுக்குள்ள உங்க கணவர் ப்ரேக்கை அழுத்தியிருப்பாரு. என்ன நடந்ததுன்னு நீங்களே சொல்லிடுங்க.

// நீங்க சொன்னா மட்டும் உடனே கேட்டுடுவேனா? //

ப்ரேக்குனு நினைச்சி ஆக்சிலரேட்டரை அ(ழு/மு)த்தினதா சொன்னீங்க.. இப்ப இப்படி கேட்டீங்கன்னா என்ன அர்த்தம். அப்ப சொன்னதை செய்யக்கூடாதுன்னு வேணும்னேதான் அழுத்தினீங்களா?

// அதனால நீங்க கவலை படாதீங்க, இனிமே நான் வர்றதே நிறைய குறைஞ்சிடும்.. வெட்டி பேச்சும் தானா குறைஞ்சிடும். //

இதெல்லாம் குறைஞ்சாத்தான் கவலைப்படுவேன்.

// மனசு சரி ஆனதுக்கு அப்புறம் வந்து எல்லாரையும் சந்திக்கிறேன்.. //

இதோட நான்காவது முறையா மனசு சரியில்லாததை மன்றத்துல சொல்றீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு அபூர்வ சகோதரர்கள்ல அப்பு கோமாளி மாஸ்க்கை போட்டுட்டு அழுகிற சீன் நினைவுக்கு வருது. முன்னாடியே கேக்கலாம்னு நினைச்சேன். எதாவது பர்சனல் ப்ராப்ளமா இருந்து, கேட்டால் நீங்க தப்பா நினைச்சீப்பீங்களோன்னு கேட்க தயக்கம். எல்லாருக்குமே இதே தயக்கம்தான். அதனாலத்தான் யாருமே எதுவும் கேட்கலை. ரொம்ப ஜாலியா பேசி எல்லாரையும் புன்னகைக்க வைக்கிற நீங்க, மனசுல எதையோ சுமையா தூக்கிக்கிட்டு கஷ்டப்படுற மாதிரி தெரியுது. வெளியில் சொல்லக்கூடிய பிரச்சனையாக இருந்தால் தெரியப்படுத்தவும்.

இங்கே உங்கள் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல நல்ல அனுபவசாலிகள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆறுதல் வார்த்தைகள் சொல்ல அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று ஆயிரம் உறவுகள் இருக்கின்றன. பாரத்தை இறக்கிவைக்கலாமே.. சுமப்பதற்கு அல்லது பகிர்ந்துகொள்வதற்கு நாங்கள் இருக்கின்றோம்.

அட்மின் சொன்ன அதே டவுட் எனக்கும் வந்துது..முக்கியமா ஹேமாவோட கருவளையம்..நானும் சரி தனியா குடும்பத்தை விட்டு வந்து எல்லரும் படுர கஷ்டம் தான் போக போக சரியாஇடும்னு நெனச்சேன்...நான கேட்டு நோஸ் கட் வாங்க வேன்டாம்னு நெனச்சேன்..ஹேமாக்கு அட்மின் சொன்ன மாதிரி எங்களிடம் சொல்லகூடிய ப்ரச்சனைய இருந்தா சொல்லலாம்...எனக்கு இங்கே வந்து ஒரு வருடம் வரை எப்படியெல்லாம் என்னை சமாதானப் படுதினாலும் என்னால் அம்மவையும்,அப்பவையும்,தங்கையையும் மறக்கவே முடியல..என் குழந்தை வந்த பிறகு தான் அதை மறந்தேன்...இப்பவும் ஊருக்கு போய்ட்டு வந்தா அப்ரம் கொஞ்ச நாளைக்கி அழுகதான்.....அது தான்ன ஹேமா வேர எதுலயாவது மனசை திசை திருப்பலாம்..வேலைக்கி போலாம் இல்ல பக்கதுல யாரையாவது friend புடிச்சு அறுக்கலாம்...சரிசரி விஷயம் தெரியாம நானா கற்பன பண்ணகூடாது...ஹேமாவின் பதிவுக்காக இங்க நிறைய பேர் காத்திருக்கோம்

http://s119.photobucket.com/albums/o123/thalika/?action=view&current=swaadhandhiram.jpg

மேலும் சில பதிவுகள்