அறுசுவை டீமின் ஜாலி டூர்

<b><font color="#000090"> அறுசுவை டீமின் ஜாலி டூர் </font></b>

<font color="#000066">நம்ம அறுசுவை மெம்பரெல்லாம் எங்கேயாவது டூர் போனா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். டூர் ஆர்கனைசர் யார்? வேற யார் நம்ம அட்மின் தான். அவர் கிராமத்தை சுத்திக்காட்ட நம்மையெல்லாம் அழைச்சுட்டு போறார். இனி நம்ம டூர் எப்படி இருந்ததுன்னு பார்ப்போம். </font>

(இவ்வுரையாடலில் வரும் பெயர்கள் அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. பெயர்கள் மட்டுமே உண்மை, மற்றவை யாவும்... ஹி..ஹி..ஹீ)

மாலினி சுரேஷ்: அட்மின்,உங்க ஊரில் புளி இருக்குமா? பாக்கலாமா?

அட்மின்: நிறைய மரம் இருக்கு. பறிச்சுக் கூட எடுத்துட்டு வரலாம்

மாலினி சுரேஷ்: புளியை எப்படி பறிக்க முடியும்? மரத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

திவ்யா: அட்மின், அவங்க இப்ப புலியைப் பத்தி சொல்றாங்க. மாலினி, நீங்க Tiger பத்திதானே கேக்கறீங்க?

மாலினி: ஆமாம். ஏன் அட்மினுக்கு நான் கேட்டது புரியல? தமிழ் அவ்வளவா தெரியாதோ?

(ஹேமா, நீங்க இப்ப அட்மின் அவ்வ்வ்வ்வ்னு சொல்ற மாதிரி அடிக்க சொல்றீங்க. புரியுது)

அட்மின்: அவ்வ்வ்வ்வ்வ்வ்

தளிகா: எங்க நம்ம மனோஹரி மேடத்தை காணோம்?

மனோஹரி: யாருமே கேள்வி கேக்கல. அதான் நான் பேசவே இல்லை.

ஜெயந்தி: இப்படி கேள்வி கீள்வின்னு கேட்டுட்டு இருந்தால் புறப்பட நேரமாயிடும்.

தளிகா: கேள்வி தெரியும். அதென்ன கீள்வி? யாராவது சொல்லுங்க. நிஜமாவே அர்த்தம் தெரியாது.

ஹேமா: அது ஒண்ணுமில்லை. சும்மா பேச்சுக்கு எதுகை மோனையா பேசனும்னு சொல்றாங்க.

தளிகா: எதுகை மோனையா? அப்படின்னா?

ஹேமா: இத்தனை நாள் எனக்கு ஆட்டோ அனுப்பிடுவாங்களோன்னு கேட்பேன். இப்ப நானே உங்களுக்கு அனுப்பிட வேண்டியதுதான்.

சுபா: எதுகை மோனையா? என்னை விட்டுட்டீங்க. நான் சொல்றேன்..

நாமெல்லாம் போகப்போறோம் டூரு
அழைச்சுட்டுப் போறது யாரு
குடிக்க வேணும் மோரு
ரோட்டில் இருக்கு தாரு

வாணி: அசத்துறீங்க சுபா. நான் சரியாதானே தமிழில் பேசறேன்?

அம்பிகா: அட நீங்க வேற, இருக்கற நிலைமைக்கு உங்களுக்கு லேடி திருவள்ளுவர் பட்டமே தரலாம்.

திடீரென்று பெல்சியா ராஜனைப் பார்த்துவிட்டு அவரைப் போலவே அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள்.

பெல்சியா ராஜன்: என்னாச்சு? ஏன் எல்லாரும் கையை தூக்கறீங்க

அனைவரும்: நீங்க ஏதோ எக்சர்சைஸ் செஞ்சீங்களே. அதை நாங்களும் பண்றோம். நிச்சயம் வெயிட் குறைஞ்சுடுமில்ல.

பெல்சியா ராஜன்: அடப்பாவிங்களா. நான் சோம்பல் முறிச்சேன்.

ரோஸ்மேரி: அட்மின், என்ன பேசவே இல்ல? என்ன யோசனை?

அட்மின்: மனதிற்குள் (எப்படி சமாளிக்கப் போறேன்னுதான். இந்த ஹேமா பொண்ணு டூருக்கு வருதுன்னு யாருமே சொல்லலியே. இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ) இன்னும் ஏன் யாரும் புறப்பட மாட்டேங்கறீங்க. பேசிட்டே இருந்தா லேட்டாயிடும்.

ஹேமா: வந்துட்டாரு கைப்புள்ள. எனக்கு காலேஜிலேயே நேரத்துக்கு கிளாஸ் போறது பிடிக்காது. லேட்டா ஆனா என்ன, உங்க கிராமம் அதே இடத்தில் தானே இருக்கும். பறந்து போயிடாதே.

அட்மின்: (இன்னும் ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன்.)??

இந்திரா: இன்னைக்கு என் முகத்தில் ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கு

தேவா: அதுக்கு துண்ணுத்தி பச்சை இலை சாறு தடவினால் சரியாயிடும்

ஹேமா: வந்துட்டாங்க இயற்கை வாழ் விஞ்ஞானி. ஆமாம் இதையெல்லாம் எப்பவாவது நீங்க யூஸ் பண்ணியிருக்கீங்களா?

தேவா: என் முகத்தில் எதாவது அலர்ஜி இருக்கா? அப்புறம் எப்படி நான் யூஸ் பண்ணியிருப்பேன்.

தளிகா: அப்ப எங்களை வெச்சு சோதனையா?

தேவா: என் பாட்டி சொன்னது இதெல்லாம்.

ஹேமா: அது நிஜமாவே பாட்டியா. இல்லை இதெல்லாம் முகத்தில் போட்டதால் பாட்டியாயிடுச்சா?

வாணி: சரி. டாபிக்கை மாத்துவோம். தேவா, என் பசங்களை வீட்டில் விட்டுட்டு வந்திருக்கேன். அதையே நினைச்சுட்டு இருக்கேன்.

தேவா: நானும்தான்.

ஜெயந்தி: டூர் வந்துட்டு குழந்தை குட்டினு(குட்டினா என்னன்னு கேக்காத,தளிகா) பேசி கவலைப் பட வேணாம். யாரும் அவங்க பசங்க பத்தி பேசக்கூடாது

வாணி: தேவா, உங்க பையன் எப்படி இருக்கான்

தேவா: உங்க பசங்க எப்படி இருக்காங்க வாணி?

ஹேமா: என்ன நக்கலா? இப்படி மாத்தி கேட்டுக்கிட்டா எங்களுக்கு தெரியாதா? ரஸியா ஏன் வரல.

தளிகா: அவங்க லீவுக்கு ஊருக்கு போயிருக்காங்க.

பாயிஜாகாதர்: ஊருன்னதும்தான் நினைவுக்கு வருது., நீங்க காயல்பட்டினமா?

அஸ்மா: அப்ப நீங்களும் காயல்பட்டினமா?

ஹேமா: போதும். ஏற்கனவே இப்படி கேட்டே ஒரு பதிவை நிரப்பியாச்சு. நாங்களும் எங்க ஊர் ஆளுங்களை தேடறோம். தேடறோம். தேடிட்டே இருக்கோம். எப்படி உங்க ஊர்க்காரங்க மட்டும் இத்தனை பேர் சந்திச்சுக்கறீங்கன்னு புரியல.

அட்மின்: மணி இப்பவே 11 ஆயிடுச்சு. இன்னும் புறப்படாம வெட்டி கதை பேசிட்டு இருக்கீங்க.

ஹேமா: அடப்பாருடா, யார் எதை சொல்றதுன்னு விவஸ்தையே இல்லை. இவர் ஊருக்கு சுத்திப் பாக்க போறதே வெட்டிதான்.

அட்மின் இனி சமாளிக்க முடியாதுன்னு ஓட ஆரம்பிக்க..

பத்மா(அறுசுவை டீம்): பாபுகிட்ட அப்பவே சொன்னோம். இது bad idea வேண்டாம்னு. ஒருத்தி தொல்லையை சமாளிக்க பயந்துதான் கல்யாணம் வேணாம்னு இருக்கீங்க. இதில் இத்தனை பேரின் தொல்லையும் தாக்கு பிடிக்க முடியுமான்னு அப்பவே கேட்டோம். பாபுவை இப்ப எங்க போய் தேடறது?

பாப்பி(அறுசுவை டீம்): பாபு இப்ப திருவாரூரில் இருக்காராம். இங்க ஆரம்பிச்ச ஓட்டம் அங்கதான் நின்னிருக்கு. பாபுகூடதான் போனில் பேசிட்டு இருக்கேன். நீ வழக்கம்போல் ராங்க் டர்ன் அடிக்காமல் ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு.

ஐயயோ இப்படி என்ன பாடம் படிக்க விடாம படுத்தறீங்களே தேவா? இதுக்கு தான் நாளைக்கு ஆஃப்னு நேத்து சொன்னீங்களா?? கலக்கிட்டீங்க போங்க.. விவிசி னா விழுந்து விழுந்து சிரிச்சேன். ஒரு நாள் ஆஃப் கிடைச்சதுக்கே இப்படினா, வேலையை விட்டா??? இப்பவே கண்ண கட்டுதே..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

டிபிக்கலி, ஒவ்வொருத்தரும் என்னன்ன பேசுவோமோ அதையே போட்டுருக்கீங்க: என் டயலாக் தவிர மத்ததுல பிடிச்சது- காயல்பட்டிணம் தான்!! தொடர்ந்து எழுதுங்க, அப்படியே எங்க வயித்து வலிக்கு ஏதாவது வழியும் சொல்லுங்க..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

டியர் தேவா,

என்னால இதுக்குமேல சிரிக்க முடியல. ஒரே வயிற்று வலி. எல்லோரும் இத படிச்ச பிறகு இருக்கு உங்களுக்கு.

அப்படியே வயிற்று வலிக்கும் இயற்கை வைத்தியத்தை சொல்லிடுங்க. ஒரு காமெடி டிராமா பாத்த மாதிரி இருக்கு.

தேவா, என்னால நிஜமாவே முடியல.. கிட்ட தட்ட 5-6 தடவை படிச்சிட்டேன், இன்னும் விவிசி தான். எங்க பக்கத்து வீட்டுக்காரி 911க்கு ஃபோன் பண்ணிடுவாளோன்னு பயமா இருக்கு இருந்தாலும் சிரிக்காம இருக்க முடியல.. இன்னும் 2 நாளைக்கு இப்படி தான் இருப்பேன் போல..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

தேவா

உங்கள் கற்பனை சக்தி சூப்பர் ......
விட்டா அருசுவை டீமை வச்சு ஒரு மெகா சீரியலே எடுப்பீங்க போல இருக்கு....
ரசிக்கும் படியாக இருந்தது.
எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிடே இருங்க :)

அனிதா

hi

டியர் தேவா,
இப்பொழுது இவ்வள்வு குரும்பு பன்னும் நிங்கள் நிச்சயம் சின்ன வயதில் வாலாகதான் இருந்திருப்பிர்கள்.உங்களின் கற்பனை சுபெர்.

தேவா மேடம்
எப்படி இருக்கீங்க
இந்த 2 மாத இடைவெளியில் அருசுவையை எல்லோரும் ஒரு வழி பண்ணிக்கொண்டுள்ளீர்கள் பாபு அண்ணா சொன்னார் நீங்கள் அருசுவையைக்கு வரும்போது புதுமையாக இருக்கும் என்று முற்றிலும் சரியாகதான் இருக்கிறது உங்கள் கற்ப்பனை உறையாடல் படித்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை இப்படி ஒரு அரட்டைக்கு பாபு அண்ணா ஏற்ப்பாடு செய்வதாக சொன்னார் எல்லோரும் வெவ்வேரு திசையில்... ஏனோ முடியவில்லை
பாபு அண்ணா நீங்கள் சொன்னது போல் ஏற்ப்பாடு செய்திருந்தால் இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்குமோ,தாங்கள் வாங்கிதந்த ஸ்வீட் சூப்பர் தங்களுடைய அன்புப்பரிசுக்கு ஆயிரம் நன்றி!அப்புறம் பத்மா,(இன்னொருவர் பெயர் சொல்லுங்களேன்)இருவரையும் நான் மிகவும் விசாரித்ததாக சொல்லுங்கள்(அண்ணா என் பைய்யன் தங்களை எடுத்த போட்டோக்கள் சில ரொம்பவும் காமெடியாக இருக்கிறது)

இன்னும் சிரிச்சுக்டே இருக்கிறேன்.தேவா நீங்க இவ்வளவு வாலா???இந்த பக்கம் வர வேண்டானு இருந்தா விட மாட்டேங்றீங்களே??

//நீங்க ஏதோ எக்சர்சைஸ் செஞ்சீங்களே. அதை நாங்களும் பண்றோம். நிச்சயம் வெயிட் குறைஞ்சுடுமில்ல//

எப்படி எப்படி இப்படிலாம்?? கண்ணுலலாம் தண்ணி, சிரிச்சு சிரிச்சு.. நான் பாட்டுக்கு உக்காந்து ப்ரோக்ராம் அடிச்சிட்டு இருந்தேன், இப்படி பண்ணிட்டீங்களே தேவா??

ஆமா ரோஸ்மேரி ஏன் இந்த பக்கம் வர வேண்டாம்னு இருந்தீங்க?!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

//அது நிஜமாவே பாட்டியா. இல்லை இதெல்லாம் முகத்தில் போட்டதால் பாட்டியாயிடுச்சா?//

இதுக்கு முழு பதிவையுமே நீ கோட் பண்ணிடலாம்னு சொல்றது கேட்குது, இருந்தாலும் என்ன பண்ண? வாழ்க இயற்கை வாழ் விஞ்ஞானி தேவா!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்