விளம்பரம்- ஜாலி டூர் & கையில் கறைகள்

சரி சரி, அலோ வேரா ஜெல்லை கதற கதற கும்மி அடிச்சாச்சு.. அதனால் "அறுசுவை இணையதளம்" தலைப்புல தேவா கூட்டிட்டு போயிருக்கற "ஜாலி டூர்" பார்க்க வாங்க.. அங்க என்னத்த இருக்குனு யாரும் மிஸ் பண்ணிட கூடாது பாருங்க, அதுக்கு தான் இது. அழகு குறிப்புகள் பக்கம் வராதவர் யாரு :-)

அப்புறம், காய் கறி நறுக்கும் போது கைகளில் ஏற்படும் கறையை போக்குவது எப்படி? க்ளவுஸ் போட்டு கொண்டால் வழுக்குகிற மாதிரி இருக்கு.. எப்படி பட்ட க்ளவுஸ் வாங்க வேண்டும்??

அன்புடன்,
ஹேமா.

ஹேமா அலோ வேரா ஜெல்லை எல்லாம் எப்பவோ மறந்தாச்சு. இப்ப தேவாவின் ஜாலி டூர்தான் அடி கும்மிக்கிட்டு போவுது. நானே 5,6 தடவை படிச்சிட்டேன்.

ஹேமா, நீங்க இப்படி சிரிச்சுட்டு இருப்பீங்கன்னு எதிர்பார்க்கல. உங்களைவிடவா நான் ஜோக் அடிக்கப் போறேன். நீங்க சொல்றமாதிரிதான் எழுதியிருக்கேன். இப்ப உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். உங்க ஜோக்கை எத்தனை பேர் ரசிக்கிறாங்கன்னு.

நான் கறை படியும் காய்கறியை நறுக்கும்போது கை முழுக்க எண்ணெய் தடவிப்பேன். அவ்வளவு வழுக்காது. கறையே படியாது. கிளவுஸிலேயே Palm சைடில் கொஞ்சம் சொர சொரப்பாக உள்ள(Grip) கிளவுஸ் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்