காலிஃப்ளவர் சப்ஜி

தேதி: August 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவை உறுப்பினரான திருமதி. ரோஸ்மேரி அவர்கள் இந்த சுவையான காலிஃப்ளவர் சப்ஜியை, நேயர்கள் அனைவருக்காகவும் செய்து காட்டியுள்ளார். செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

காலிபிளவர் - 400 கிராம்
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிமசாலா பொடி - அரைத்தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
தேங்காய் - 6 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
இஞ்சி பூண்டு தட்டியது - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்து வைக்கவும். தேங்காயையும் முந்திரி பருப்பயும் தண்ணீர்விட்டு அரைத்து கொள்ளவும். காலிஃபிளவரை பூப்பூவாக எடுத்து உப்புத்தண்ணீரில் போடவும்.
முதலில் வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சோம்பு பட்டை கிராம்பு போட்டு பொரிய விடவும்.
அதன்பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் தட்டிய இஞ்சி பூண்டை சேர்க்கவும்.
பிறகு கறி மசாலாவையும், மிளகாய் தூளையும் சேர்க்கவும். சிறிது வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கூழை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வதங்கியதும் காலிஃபிளவரையும் பட்டாணியையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
தேங்காய் விழுது சேர்த்த பின்னர், லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். சுவையான காலிஃப்ளவர் சப்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காஷ்மீரி மிளகாய்த்தூள் என்றால் என்ன ?
சாதாரன மிளகாய்தூளுக்கும் இதற்க்கும் எதாவது வித்யாசம் இருக்கா ??

அனிதா

hi

காஷ்மீரி மிளகாய் தூள் என்பது சாதாரண மிளகாய்தூளைவிட காரம் குறைவாகவும் அதிக சிவப்பு நிறமுடன் இருப்பதால் இதை நான் பல சமையல்களில் பயன்படுத்துவேன்.இதற்கு பதில் சாதாரண மிளகாய் தூள்யும் பயன்படுத்தலாம்

மிக்க நன்றி ரோஸ்,

என்னிடம் சாதரன மிளகாய் தூள் தான் உள்ளது. அதற்காக தான் கேட்டேன்.
செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

அனிதா

hi

geetha
காலிபிழவர் சப்ஜி ரும்ப ருசியாக இருன்தது.இதுதான் முதல் முதலாக டெய்ப் செய்திருக்கிரேன்.ரும்ப நன்ட்ரி

geetha

காலிபிளவர் சப்ஜி! நேற்று இரவு செய்தேன் சுப்பர் டேஸ்ட் both

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..