நன்றாக உறங்க

எனக்கு 2 பையன்கள். வயது(3.6 years , 2years). இருவரும் இரவில் நன்றாக தூங்குவதில்லை . இடையில் விழித்து அழுவார்கள்(2,3 முறை) . அப்போது பால் பாட்டிலில் பால் கொடுத்தால்தான் தூங்குவார்கள். இல்லையென்றால் அழுகை ஓயாது. இந்த பழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருக்கு. ஆனால் பகலில் கப்-ல தான் குடிப்பார்கள்.இந்த பழக்கத்தை மாற்ற, தயவுசெய்து தகுந்த வழியை கூறவும் . நன்றி .

ஹலோ arangs எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் குழந்தைகள் நலமா? அவர்களின் பெயர் என்ன? இரவில் குழந்தைகளை உறங்க வைப்பதே ஒரு கலைதான். அதிலும் இந்த வயதுகளில் அவர்களை இரவில் உறங்க வைத்து காலையில் எழுப்புவது என்பது நல்ல பயிற்சி இல்லாவிடில் சற்று சிரமம் தான். ஆனாலும் அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துரைப்பது ஓரளவிற்கு பலனளிக்கலாம் என்று நினைக்கின்றேன்.குழந்தைகளுக்கு கட்டாயமாக குறைந்தது பத்து மணி நேரமாவது தொடர்ந்த இரவுத் தூக்கம் அவசியம் என்பதால் அவர்களின் உறக்கம் கலையாமல் இருக்க பல வழிகளைப் பெற்றோர்கள் கையாளுவது தான் சிறந்தது.உதாரணமாக:

1.குழந்தைகளுக்கு இரவுச் சாப்பாடு நன்கு கெட்டியான ஆகாரமாக கொடுக்கவும்.

2.குழந்தைகளை பகலில் அதிக நேரம் உறங்க விட வேண்டாம்.அதே நேரத்தில் பகலில் நன்கு ஆக்டிவ்வாக இருக்கும் படி விளையாட அனுமதியுங்கள்.

3.படுக்கப் போகும் முன்பு வெது வெதுப்பான நீரில் குளிக்க வைத்து உறங்கச் செய்யுங்கள்.

4.படுக்கையில் நூறு சதவீதம் பருத்தியிலான உடுப்புகளை உடுத்தி படுக்க விடுங்கள்.

5.குழந்தைகளின் அறையில் நல்ல காற்றோட்டம் உள்ளவையாக இருக்கின்றதா என்று உறுதிச் செய்துக் கொள்ளுங்கள்.

6.மின் விசிறி எழுப்பும் ஓசை, நீர் அருவி போன்ற ஓசை எழுப்பும் water fountain,அல்லது மியூசிக் போன்று அறையில் ஏதாவது மெல்லிய ஓசை வரும் படியாக இருந்தால் குழந்தைகளுக்கு உறக்கம் சுலபமாக கலையாது.

7.குழந்தைகளை தனியாகப் படுக்க வைக்கும் பழக்கம் இருந்தால் அவர்களை உங்கள் படுக்கையில் உறங்க வைத்து பழக்க முயற்சிக்கலாம்.அல்லது கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் அறையில் நீங்கள் உறங்கி அவர்களுக்கு நன்கு உறங்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தலாம்.

8.கொஞ்ச நாட்களுக்கு அவர்களுக்கு பிடித்தவாறே பாலை குப்பியில் ஊற்றி படுக்கப் போவதற்கு முன்பு குடிக்க வைத்து உறங்கச் செய்யுங்கள்.முதலில் தாங்கள் அவர்களின் இரவு நித்திரையை மட்டும் கவனமெடுத்துக் கொள்ளுங்கள்.நாளடைவில் குப்பியில் பால் குடிப்பதை மறந்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

9.குழந்தைகள் உறங்கப் போகும் முன்பு தொலைக்காட்சி பார்த்துவிட்டு நேரிடையாக உறங்கச் சென்றால் அவர்களின் உறக்கம் பாதிக்கபடலாம். ஆகவே அதை தவிர்த்து அம்மா, அல்லது அப்பா கூறும் கதையைக் கேட்டுக் கொண்டே அல்லது கேட்டப் பிறகு தூங்கச் செய்யுங்கள்.

10.நடு இரவில் பாலை குடித்தால் பற்களில் சொத்தை பல் உண்டாகும் என்று எடுத்துரையுங்கள்.

11.இரவில் எழுந்தால் பாலுக்கு பதில் தண்ணீர் அருந்தும் படி பழக்கப்படுத்துங்கள்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் செயல் படுத்தி பார்த்த பிறகும் குழந்தைகளால் அந்தப் பழக்கத்தை மறக்க முடியவில்லை என்றால் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை கேட்பது தான் நல்லது என்பேன் ஒகே. நன்றி.

ரொம்ப நாளக்கி அப்புறம் மீன்டும் உங்கள் பதிவை பார்ப்பதற்க்கு மகிழ்ச்சியக உள்ளது. எப்படி இருக்கிங்க மனோகரி மேடம்?

ரொம்ப நன்றி மேடம் . உங்கள் அறிவுரைகளை பின்பற்றி பிறகு பலனை சொல்கிறேன். என் பெரிய பையன் பெயர் மஹாநிதி . சின்ன பையன் பெயர் ஹரிசுதன் . அறுசுவையில் இதுவரை சமையல் பகுதி மட்டும்தான் படித்திருக்கிறேன் . 3 நாட்களாகதான் மன்றம் பகுதியை படித்தேன் . ரொம்ப சந்தோஷமாக இருக்கு (தமிழில் உரையாடல் உள்ளது). நன்றி.

ஹலோ niths நீங்க எப்படி இருக்கீங்க?உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் அன்பு இருக்கும் வரை எனது சுகத்திற்கு பஞ்சமில்லை, நான் நன்றாக இருக்கின்றேன் உங்கள் விசாரிப்பை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி. இனி அறுசுவையிலிருந்து இதுப் போன்ற அதிக இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி மீண்டும் சந்திப்போம்.

டியர் aranganayaki, உங்கள் குழந்தைகளின் பெயர்கள் மிகவும் அழகாக இருக்கின்றது. நான் கூறிய அலோசனைகளை மனத்தில் வைத்துக் கொண்டு தங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல் படுத்தி பாருங்கள், நிச்சயம் பலன் கிடைக்கும். குழந்தைகளை எந்தளவிற்கு நெருக்கத்தில் வைத்திருக்கின்றோமோ அந்தளவிற்கு அவர்களை வளர்ப்பதிலும் பிரச்சனைகள் குறைவாக தான் இருக்கும் ஒகே நன்றி.

டியர் மனோஹரி,
எங்க போனீங்க...நீங்க வந்ததுல சந்தோஷம்....நல்ல இருக்கீங்கன்னு சொன்னீங்க...பிசினெஸ் எப்படி போகுது..என்ன பிசினெஸ் செய்ரீங்க?யாரும் சமைக்கலாம் ல குறிப்பு குடுங்க...உங்க குறிப்பு பாத்து ரொம்ப நாளாகுது

ஹலோ தளிகா ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களுடன் உரையாடுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எப்படி இருக்கீங்க? நான் எங்கும் போகவில்லை, உங்களுடன் தான் இருக்கின்றேன். கடந்த வாரம் கூட வந்தேன் ஆனால் எங்கு நுழைவது என்று தெரியாமல் திரும்பி விட்டேன். உங்கள் அழகான அன்பு செல்லத்தை போட்டோவில் பார்த்தேன். குழந்தைக்கு இப்பொழுது வயதென்ன? நான் செய்யும் பிஸினஸில் எனக்கு முன் அனுபவமில்லாததால் அதைப் பற்றி இப்பொழுது பெரிதாகப் பேச வேண்டாம் என்று இருக்கின்றேன். சமயம் வரும் போது நான் கட்டாயம் உங்களிடம் கூறுவேன். அதில் எனது அனுபவம், வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்று எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வேன் ஆகவே என்னைத் தவறாக நினைக்க வேண்டாம் சரியா. நேரம் கிடைக்கும் பொழுது சமையற் குறிப்பு படங்களை அனுப்புகின்றேன். நன்றி மீண்டும் சந்திப்போம்.

best of luck for your business madam.share ur experience when you find time with us .

ஹலோ புவனேஸ்வரி எப்படி இருக்கீங்க? வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி. நிச்சயமாக எனது தொழில் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கின்றேன் ஒகே நன்றி.

Manohari Madam,

ALL THE BEST. YOU WILL GET SUCCESS IN EVERYTHING.

Janaki.

மேலும் சில பதிவுகள்