கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

எல்லோருக்கும் வணக்கம்

நான் இந்த மன்றத்திற்க்கு புதிது. எனக்கு கொஞ்சம் அட்வைஸ் தேவை. நான் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறேன். என் குழந்தை நல்ல சிகப்பு கலராக பிறக்க என்ன செய்ய வேண்டும். நான் கலராக இருப்பேன், ஆனால் என் கணவர் கொஞ்சம் மாநிறம். இது இரண்டாவது, இந்த குழந்தையாவது என் கலர் போல நிறமாக இருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. யாராவது தயவு செய்து அட்வைஸ் பன்னுங்கள் .
மிக்க நன்றி.
ராஜி

கிருஷ்ண ஜெயந்தி அன்று வந்திருக்கும் கேள்வி. என்ன இது. அட போம்மா. நல்ல படியா குழந்தை பிறக்கணும். கருப்பாவது, சிகப்பாவது. இதுக்கு ஆலோசனை சொல்ல எனக்கு இஷ்டம் இல்லை.

இருந்தாலும் உங்களுக்கு நார்மல் டெலிவரியில் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

சாப்பிடுபவை:

காலையில் எழுந்து பல் தேய்த்த பிறகு ஆப்பிள் ஒன்றும் ஆரஞ்சு ஒன்றும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
ஒரு நாளைக்கு 50 கிராம் கேரட் கடித்தோ / ஜூஸாகவோ சாப்பிடலாம் (சுகர் உண்டு எனில் தவிர்க்கவும்.)

சாப்பிடக்கூடாதவை:

எந்த உணவுப் பொருளும் சூடாக சாப்பிடக்கூடாது.
பீட்ரூட் குறைத்து சாப்பிடவும்.
கருப்பு திராட்சையை அறவே தவிர்க்கவும்.

மேலும் தெரிந்தால் அப்போ அப்போ சொல்கிறேன்

இந்த கலரு சம்பந்தமா கொஞ்சம் சீரியஸ்ஸான விவாதம் தேவைன்னு தோணுது. அது என்னமோ நல்ல கலரு, நல்ல கலருன்னு சொல்றாங்களே.. அது என்ன கலருங்க? பொண்ணு நல்ல கலரு, பையன் கலரு கம்மி.. பிள்ளை நல்ல கலரா பொறக்கணும்.. உங்க கேஸ்ட்ல பொண்ணுங்க எல்லாம் நல்ல கலரா இருப்பாங்களே..

எங்கே போனாலும் அதிகம் காதில் விழுகின்ற வார்த்தைகள்.. நானும் அந்த 'நல்ல கலரில்' இருந்திருந்தால் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பேனோ என்னவோ?!

வீட்டில் மூன்றில் கருப்பாய் பிறந்துவிட்ட ஒன்றே ஒன்று என்பதாலும், நான் என்னை உணராத போதே என்மீது பூசப்பட்ட இந்த வர்ணத்தினால் பள்ளிப்பருவம் முதல் நான் சந்தித்து வந்த பிரச்சனைகளும், அதனால் உண்டான மன உளைச்சல்களும், தாழ்வுமனப்பான்மை எண்ணங்களும் பக்குவம் இல்லாத வயதில் என்னை பாதித்தது நிச்சயம் உண்மை. இதற்காக நான் அழுத நாட்களை இன்று நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

மனம் பக்குவம் அடைந்த பிறகு தூக்கி வீசி எறிந்தாலும், உண்டாக்கிய வடுக்களும், ஓரத்தில் உறங்கும் உண்மையும் இறக்கும் வரை இருக்கும். பார்த்த முதல் பையன் சற்றே மாநிறம் என்பதால், சிவத்த பொண்ணுக்கு பொருத்தம் இல்லையென்று வெறுத்த குடும்பத்தார், வீட்டில் கரிக்கட்டையாய் ஒரு பிள்ளை இருப்பதும், நாளை அந்தப் பிள்ளையும் சலிக்கப்படும் என்ற உண்மையையும் உணராதது ஆச்சரியமாய் இல்லை. இது யதார்த்தம். தனக்கென்று வரும்போதுதான் எல்லா நியாயங்களும்.

நான் கருப்பு என்று வருத்தப்படுவதாக எண்ணிக் கொண்டு, கவலைப்படாதீர்கள்.. அறிவியல் ரீதியாக கருப்பு நிறம்தான் நல்ல நிறம்.. அமெரிக்காவில் இந்தியர் அனைவரும் கருப்பு.. ராமர் கருப்பு, கிருஷ்ணர் கருப்பு, நம்ம ரஜினியும் கருப்பு என்று ஆறுதல் வார்த்தைகளை அள்ளி வீச வேண்டாம். இன்று என் பக்குவம் எல்லாவற்றையும் கடந்தது. என்னை நினைத்து வருத்தப்படுபவன் அல்ல நான்.

கருப்பு என்று நான் வருந்துவதாக தெரிவித்தால் இங்கே விழும் அத்தனை பதிவுகளும் நான் மேலே சொன்ன ராமர், ரஜினி உதாரணங்களுடன், கருப்புதான் உலகிலேயே சிறந்த நிறம் என்று சத்தியம் செய்யும். தயவுசெய்து அது வேண்டாம். நாம் இங்கே யதார்த்தை மட்டும் பேசுவோம். என்னிடம் இப்படி பேசிய பலர், தனது பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ, தனக்கோ பொருத்தம் பார்க்கும்போது முதலில் பார்த்தது வர்ணப் பொருத்தம்தான். தொலைபேசியில் பெண் கொஞ்சம் மாநிறம் என்று சொன்னவுடனே, வேண்டாம் என்று பெண் பார்க்கவே செல்லாதவர்களையும் நான் பார்த்திருக்கின்றேன். நிச்சயம் அவர்களை நான் குறை கூறவில்லை. நான் மேலே சொன்ன யதார்த்தம் அதுதான். இப்போது நான் தெரிந்து கொள்ள விரும்பும் விசயம் இதுதான்..

ஆறுதலுக்காக ஆயிரம் வார்த்தைகள் பேசலாம். எல்லாக் கலரும் நல்ல கலரே.. கலரில் என்ன இருக்கின்றது என்ற வசனங்களையெல்லாம் விட்டுவிட்டு, மனதை தொட்டு கொஞ்சம் உண்மையை மட்டும் இங்கே சொல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் (மனிதரில்) கருப்பு என்ற வண்ணத்தை நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டது உண்டா? வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்வது வேறு. பையனோ பெண்ணோ.. கருப்பாக இருக்கின்றான்/றாள் என்று ஒதுக்கும் உலகில் சிவப்பு என்று யாரையாவது என்றாவது நீங்கள் ஒதுக்கியது உண்டா? சிவப்பை தேடி அலையும் இந்த உலகில் கருப்பை தேடி உங்களில் ஒருவராவது அலைந்தது உண்டா? பிறக்கும் பிள்ளை சிவப்பாய் இருக்கவேண்டும் என்று குங்குமப்பூ சாப்பிடும் உங்களில் யாரேனும் கருப்பாய் பிறக்க வேண்டும் என்று ஏதேனும் விபூதிப்பூ சாப்பிட்டது உண்டா?

நான் ஏற்கனவே கூறியதுபோல் ஆறுதல் வார்த்தைகள் தேடி இந்த பதிவை கொடுக்கவில்லை. யதார்த்தத்தில் இருந்து மாறுபட்ட யாரேனும் சிலர் (ஒருவர்?) இருக்கின்றாரா என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இதனைக் கேட்கின்றேன். உண்மையான எண்ணங்களை மட்டும் தைரியமாக எடுத்துரையுங்கள்.

அன்புள்ள அண்ணா,

ரொம்ப நன்றி.
ரொம்ப நல்ல வார்த்தைகள்.
இது முழுக்க முழுக்க உண்மை (கதை அல்ல நிஜம்)

நீங்க ஆங்கிலப்படம் பார்ப்பவரா? இல்லை என்றாலும் எனக்காக பாருங்கள். wild wild west , men in black I, men in balack II , i robort, independence day அதன் ஹீரோ will smith த்தை போல கருப்பு மாப்பிள்ளை தான் வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் என் கணவர் மிகவும் சிவப்பு நான் மாநிறம் . திருமணத்தில் விமர்சிக்கப்பட்டது பொண்ணு மாநிறம் தான்னு என்ன சொல்ல "விதி".
கருப்பு கேட்டா சிவப்பு ! சிவப்பு கேட்டா கருப்போ?

எழுதுங்கள் தோழிகளே உங்கள் அனுபவங்களை!!

//நீங்க ஆங்கிலப்படம் பார்ப்பவரா? இல்லை என்றாலும் எனக்காக பாருங்கள்.//

என்னிடம் இருக்கும் ஆங்கிலப் படங்களின் எண்ணிக்கை 700 ஐத் தாண்டும்:-) நீங்கள் சொல்லாமல் விட்ட Will Smith படங்கள் இன்னும் சிலவற்றை பார்த்திருக்கின்றேன். I am Legend DVD க்காக காத்திருக்கின்றேன்.

இருந்தாலும் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.. Will Smith மாதிரியா?? பாதி அமெரிக்காவே அவருக்காக அலைஞ்சுகிட்டு இருக்கு.. அப்புறம் அவர் கருப்புன்னு யாரு சொன்னது? உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? எல்லா நீக்ரோஸ்ம் கருப்பு கிடையாது. நான் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் ப்ளேயர்ஸ்கூட இருந்திருக்கிறேன். எனது கையை பக்கத்தில் வைத்து பார்த்தால் தெரியும் அவர்கள் என்ன கலர் என்று. அது ஒரு மாதிரி கலவை நிறம். மினுமினுப்பா இருக்கும்.

போனப் பதிவுல சொல்லாம விட்ட விசயம்.. நான் பதிலை மாநிறமா, கருப்பா இருக்கிறவங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கலை. "நல்ல கலரா" இருக்கிறவங்க பதில் சொல்லுங்க..

அப்புறம் சுபா, எங்கேர்ந்துங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரி டிப்ஸை எல்லாம்.. சிகப்பு (ஆரஞ்சு) கலர்ல உள்ள பழங்களையெல்லாம் சாப்பிட்டா குழந்தை கலரா (என்ன கலர்?) பொறக்குமா? அப்படியே வாழைப்பழம், அன்னாசி, சப்போர்ட்டா, பச்சை திராட்சைன்னு சாப்பிடச் சொல்லுங்க. குழந்தை கலரா இல்ல.. கலர்கலரா பொறக்கும்..

கலர் என்னங்க கலர்...எங்க ஊர்ல,கறுப்புதான் கட்டிவைரம் என்றும்,கறுப்புக்கு நகை போட்டா கண் குளிரப் பார்க்கலாம்ன்னும் சொல்லுவாங்க...
அது மட்டுமில்ல,கறுப்பே அழகு,காந்தலே ருசின்னு நம்ம அறுசுவைக்கு ஏத்த ஒரு பழமொழி கூட இருக்கே...

ஏன் சுபா,சூடு ஏறினால் கறுத்துப்போக வயிற்றுப்பிள்ளை என்ன அப்பளமா? வடாமா? அப்படின்னா துபாய்ல இருக்கிற நீங்களும் நானும் நெல்சன் மண்டேலா,லாரா மாதிரியில்ல மாறியிருக்கணும்...
வேற ஒண்ணுமில்ல, வீட்டுக்குறிப்பு எழுதின ஞாபகம்ன்னு நினைக்கிறேன்

அட்மின் அண்ணே, கருப்பா?கறுப்பா?...கருப்புன்னா நம்ம ஊர் கோயில்ல கொடுவா மீசையும் அறுவா கையுமா இருப்பாரே அவர் தானே? நானே கொஞ்சம் குழம்பித்தான் போனேன்.
குற்றம் கண்டுபிடித்தே.....என்று நீங்க ஏதோ முணுமுணுக்கறது கேட்குது. நான் போயிடுறேன்....

எப்பவோ எனது தமிழ் ஆசிரியரை கேட்டது நினைவிற்கு வருகின்றது. அவர் கூறியது கருப்பு. பின்னாளில் இரண்டுமே சரி என்று படித்தேன். ஒரு ஆசிரியர் கறுப்பு என்பது பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்றார். (உ.ம்: கறுப்பாடு, கருங்குரங்கு) அப்புறம் இந்த "பொறுத்து"கூட கொஞ்சம் குழப்பமான வார்த்தைதான். இதன்பொருட்டு, என்னைப் பொறுத்தமட்டில்.. இப்படி.

நண்பர் ஹரி கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்றால், கருப்பு என்பது நிறத்தைக் குறிக்கும். கறுப்பு என்பது குணத்தைக் குறிக்கும். (கருமை நிறக் கண்ணன். உள்ளம் கறுத்தவன். )

நிறையப் பேர் எது வேணும்னாலும் போட்டுக்கோங்கன்னு சொல்றாங்க. நம்ம ஜெயந்தி அக்கா என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

அதுசரி, அது என்ன "<b>நானே</b> கொஞ்சம் குழம்பித்தான் போனேன்..?!!" அம்மா தமிழ் பல்கலைகழகத்திலே பேராசிரியரோ?

மேலும் சில பதிவுகள்