கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

வேற யாரு, என் ஊட்டுகாரருதேன். அட்மின் அண்ணே எங்க ஃபேமிலி ஃபோட்டோ (கணவர் வீடு) பாத்தீங்கன்னா என்ன செவப்புன்னு சொல்வீக. ஆனா நான் மாநிறம்தான். அப்ப மத்தவங்கள்ளாம் எப்படி இருப்பாங்கன்னு பாத்துக்கோங்க. கலர வச்சு என் ஊட்டுக்காரரை நான் வேணாமின்னு சொல்லியிருந்தா ஒரு அற்புதமான மனிதரை நான் சந்திக்காமலேயே போயிருப்பேன்.
என் முத பையன் பொறக்கரச்சே எல்லாரும் அவங்க வீட்டு கலர காமிச்சே என்ன குங்குமப்பூ சாப்பிடு, சிவப்பு மண்(??!!) சாப்பிடுன்னு ஒரே அட்வைஸ். நானும் புத்தி கெட்டு போயி(அப்ப சின்ன வயசு வேற) குங்குமப்பூ சாப்பிட்டேன். என் பையன் அப்படியே அவன் அப்பாவ உரிச்சு வச்சு பொறெந்தபோதுதான் எனக்கு நெத்தியில அடிக்கிற மாதிறி உறச்சுது. அப்புறம் உங்களப்போல எல்லாம் கடந்து பண்பட்ட பிறகு பொறந்த 2வது பொண்ணுக்கு அந்த மாதிரி மடத்தனம் எதுவும் பன்னல. ஆனாலும் அவ பொறந்த பிறகு அந்த ஆயில் தடவு, இந்த மாவு போடுன்னு எல்லாம் சொன்ன போது நான் அவ இப்பயே ரொம்ப அழகாத்தானே இருக்கான்னு சொல்வேன்.
இப்பவும் எங்க வீட்டுல நாந்தேன் செவப்பு(?!!).ஆனா கலரப்பத்தி நாங்க கவலையே பட மாட்டோம்.

(அட்மின் நீங்க 'நல்ல கலரு' உள்ளவங்க மட்டும் எழுதுங்கன்னு சொன்னீங்க. நான் என் மனசுக்கு பட்டத எழுதிட்டேன். அதனால சம்பந்தம் இல்லாம நான் எழுதிட்டேன்னு எனக்கு உளறல் ராணி பட்டம் குடுக்காதீங்க:-))

எங்க வீட்டிலயும் என்ன்னைய எல்லோரும் கும்குமப்பூ சாப்பிடச்சொன்னாங்க. என்னோட டாக்டரும் நிறைய அட்வைஸ் பண்ணாங்க. ஆனா எனக்கு பாலே பிடிக்காது. பழமும் பிடிக்காது. ஒன்னுமே சாப்பிடல. எந்த கலர்னா என்ன இருக்குன்னு. ஆனா என் பொண்ணு சிவப்பா பொறந்தா. இப்பொ ஒரு வருஷமா அவ கலரு கம்மி ஆயிட்டே வந்து இப்பொ கருப்பா ஆயிட்டா(ஒரு சில மாத்திரைங்க சாப்பிட வேண்டி இருந்ததால இருக்கலாம்). நான் வெரும் johnsons soap உபயோகிப்பேன். Johnsons lotion போடுவேன். வேற எதுவும் யூஸ் பண்ணதில்ல. இப்பொ சில மாதமா ரொம்ப ஃபீல் பண்றேன். என்னோட பக்கத்து வீட்டுல இருக்கவங்க, என் பொண்ணை பாத்து, பாரு நீ ப்ளாக், நான் வயிட், சொல்ல, என் பொண்ணு வயிட்னா நல்லதுன்னு நினச்சு, எப்ப பாத்தாலும் நான் வயிட் மம்மினு சொல்லிட்டே இருக்கா. அவளுக்கு என்ன சொன்னாலும் புரிய மாட்டேங்குது. எனக்கு பயமா இருக்கு. அவங்க கிட்ட எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன். கேட்கவே மாட்டேங்கறாங்க. இவங்க தான் இப்படின்னா, மத்த neighbours-ம் இவள பாத்த உடானே "என்ன இவ்ளோ கருப்பாயிட்டு போறா"ன்னு இவமுன்னாலேயே சொல்றாங்க. இவளுக்கு இப்பவே காம்ப்லெக்ஸ் வந்துடுச்சு. கருப்பா இருந்தாலும் என் பொண்ணு அழகு இங்க யார்கிட்டயும் இல்ல. இத அவங்களே சொல்றாங்க. ஆனா இதனால இன்னொரு ப்ராப்லெம் இருக்கு, மொதல்ல அவள சரி பண்ணுன்னு என்னோட ஆத்துக்காரர் சொல்றார். இந்த ஊர்ல ப்லாக், வயிட்ன்னு சொன்னா ரேஸ் ப்ராப்லெம்ஸ் வரும்னு. ஒன்னும் புரியாம இருக்கேன். அப்படி என்னங்க இருக்கு இந்த கலர்-லன்னு தான் தோணுது.

அப்புறம் தான் எனக்கு புரிஞ்சது. நான் நல்ல கலர்(அட்மின் சொன்னாப்போல) தான். அதனால பல அட்வான்டேஜஸ் இருந்திருக்கு என்னோட லைஃப்ல. எல்லா டீச்சர்க்கு என்னைய ரொம்ப பிடிக்கும். நான் என்ன வாலு தனம் பண்ணாலும், பெரிசா யார்கிட்டயும் திட்டு வாங்க மாட்டேன். என்னோட கல்யாணம் கூட என்னோட கலர்னால உடனே முடிவடஞ்சிடுச்சு(வரதட்சணை வாங்காம)இப்படி இன்னும் நிறைய.

என்னோட கண்டுபிடிப்பு:-
=====================
1. ஆண்கள் வெள்ளையா இருந்தா பொண்ணும் வெள்ளையா இருக்கணும் தான் தேடறாங்க.
2. ஆண்கள் கருப்பா இருந்தாலும் பொண்ணும் வெள்ளையா இருக்கணும் தான் தேடறாங்க.
3. பெண்கள் வெள்ளையா இருந்தா சீக்கிரமா கல்யாணம் முடிவாயிடும்.
4. பெண்கள் வெள்ளையா இருந்தா வரதட்சணை கூட தேவையில்லை.
5. பெண்கள் வெள்ளையா இருந்தா அப்பா அம்மாவுக்கு, எப்படியும் நம்ம பொண்ணு வெல போயிடுவான்னு ஒரு நினப்பு.
6. ஆண்கள் கருப்பா இருந்தா ஐய்யோ வரதட்சணை ரொம்ப எதிர்ப்பாக்க முடியாதேன்ன்னு வருத்தம்.
7. பொண்ணு கருப்பா இருந்து சரியா படிக்கலைன்னா அவ வெல போகமாட்டா.
8. பொண்ணு வெள்ளையா இருந்தூ படிப்பு குறைவா இருந்தாக்கூட கலர வெச்சு அவளூக்கு படிச்ச மாப்பிள்ளை கிடைப்பார்.
9. வெள்ளையா இருக்கற மருமகளுக்கு கிடைக்கிற மதிப்பு, கருப்பான மருமகளுக்கு(ஒரே வீட்டில் இருந்தால்) புகுந்த வீட்டில் கிடைப்பதில்லை.

இன்னமும் நிறைய இருக்கு.

ஏங்க அட்லீஸ்ட் நம்ம ஜெனரேஷன்லயாவது நாம திருந்தலாங்க. இதனால நம்ம பிள்ளைங்க நல்லவங்களா இருப்பாங்க. கலர் மட்டும் ஒருத்தரை நல்லவரா மாத்தாது. நாம நாளைக்கே நம்ம குழந்தைங்களுக்கு மாப்பிள்ளையோ பொண்ணோ பாக்கறப்போ கருப்பு வெள்ளன்னு பாக்காம கல்யாணம் பண்ணோம்னா இந்த ப்ராப்லெம் முடுவுக்கு வரலாம்.[எனக்கென்னமோ மாமியார்-மருமகள் சண்டை முடிவுக்கு வந்தாலும் வரும், இந்த "கருப்பு வெள்ளை" ப்ரெச்சனை முடிவுக்கு வருமான்னு தோணல???!!!]

வெள்ளையா இருக்கறவங்க தான் மனுஷங்களா என்ன? எனனைய பொருத்தவரை சிரிக்க தெரிஞ்சவங்க தான் மனுஷங்க. என்னோட வீட்டுக்காரங்க கருப்பு தான். ஆனா எனக்கு அவரு ரொம்ப அழகு தான். என் பொண்ணும் அவரப்போல அழகு. ரெண்டு பேருக்கும் ப்ளஸே அவங்க சிரிப்பு தான். அதனால சிரிக்க சொல்லிகுடுங்க. சிரிக்கும் குழந்தைபொறக்கனும்னு நினச்சுக்கோங்க. உங்க வீடே சொர்க்கம் போல இருக்கும் வாழ்நாள் தோறும். அடுத்த வீட்டு குழந்தைங்க என்ன கலர்னாலும் அதை வமர்ச்சிக்காதீங்க. உங்கள யாருக்குமே பிடிக்காது. உங்கள தவிர.:)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஒவரா எழுதி இருந்தா அழுச்சிருங்க. என்னமோ கோவம் அதான் மண்டையில இருந்ததை இறக்கிட்டேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஐயா, நான் தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் இல்லை தான்...ஆனால் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று பல்கலைக்கழகத்திலேயே (மதுரை காமராசர் பல்கலைகழகம்) ஆறாவது மாணவியாகத் தேறியவள்.அத்துடன் இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றவள். நானே என்று குறிப்பிட்டதற்கு இது தான் காரணம். இதில தப்பு ஒண்ணும் இல்லியே????
கறுப்பர் என்றால் நீக்ரோ இனத்தவர் என்று படித்த ஞாபகம்....இதில் கறுப்பு நிறத்தைத் தானே குறிக்கிறது? இந்த விவாதம் அவசியமில்லைதான்...ஆர்வக்கோளாறு தான் காரணம்

இத்தனை தகுதிகள் இருக்கிறதா தங்களுக்கு!!! நீங்க நானே போட்டதில் தப்பே இல்லை. நான்ன்ன்ன்ன்னேஏஏஏ கூட போடலாம். (உண்மையில் நான் அம்மா என்று குறிப்பிட்டது உங்களை அல்ல. தமிழ் பண்டித் பெண்ணோ என்ற அர்த்தத்தில் கிண்டலாக கேட்டேன். நீங்களே பண்டித் என்பது ஆச்சரியமான ஒன்று. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு இந்த 'சந்தி'யில் கொஞ்சம் பாடம் எடுங்களேன்:-))

அதுசரி, தமிழை 12 வது வரை ஒரு பாடமாக படிச்ச என் போன்ற அரைகுறைகளுக்கு இதில் குழப்பம் வருவது சகஜம். ஆனால், தாங்கள் இதற்கு சரியான விடையைக் கொடுக்கலாமே. கருப்பு என்பதுதான் சரி என்று இராம.கி போன்ற தமிழ் (நன்கு)அறிந்தவர்கள் சொல்கின்றார்கள். கூகிளில் "கருப்பு கறுப்பு" என்று ஒரு தேடுதல் நடத்துங்களேன்.

நானும் அதே தான் சொல்வேன்..கல்லிவல்லி கலர்....கருப்பாகவோ வெள்ளையாகவோ குழந்தை பிறக்கனும்னு அம்மாவுக்கு ஆசை இருந்தா அதில் தப்பே இல்ல...அந்த ஆன்டவனை வேன்டிக்குங்க..ஆன சாப்பிடரதயோ வேர எதுலயும் மாற்றம் செஞ்சு வேன்டிய நிறத்தை பெற முடியாது....அதெல்லாம் நாம நினச்சு கன்டிப்பா கிடைக்கது...எல்லாம் ஜெனெடிக் மேக் அப்பை பொருத்து அமையும்.
குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு வேனா தோலை ஆரோகியமாக்கவும்,பளபளப்பாகவும்செய்யலாமே தவிர வெள்ளையாக்க முடியாது...
எனக்கு நிறம் எல்லாம் ப்ரச்சனையே இல்ல..ஆனா முகத்துக்கு கொஞ்சம் லட்சனம் வேனும்னு ஆசப் படுவேன்..(தப்பா?).....வெள்ளையா இருந்து லட்சனமே இல்லாதவங்களும் நிறைய்ய இருக்காங்க..கறுப்பா இருந்து லட்சனமா இருக்கரவங்க நிறைய்ய பேர் இருக்காங்க.....நம்ம ஊர்காரங்க தான் அழகு..இதை எல்லாத்தயும் விட முக்கியம் ஆரோகியம்
எனக்கு தெரிஞ்ச ஒரு குழந்தை பிறந்தது பூ மாதிரி..அப்படி ஒரு அழகு,சிகப்பும் தான்.....6 மாதம் முடிஞ்சு வேர உணவு கொடுக்கத் தொடன்கியவுடன் தான் தெரிஞ்சது அந்த குழந்தைக்கி எக்சீமா இருக்குன்னு....ஒரு சாதம் வயித்துகுள்ள போனலும் குழந்தை சொரிஞ்சு சொரிஞ்சு முகத்தில் வெரும் காயமும் ரத்தமுமாக இருக்கும்....இப்ப 3 வயதிருக்கும் இதுனாள் வரை பாலைத் தவிர குழந்தைக்கு வேரு எதையும் கொடுக்க முடிந்ததில்லை...அம்மா எனக்கு ஒரே ஒரு இட்லி கொடும்மான்னு குழந்தை கெஞ்சும்...அப்பலாம் நான் யோசிப்பேன்..அழகா குழந்தைய தன்துட்டு மத்தவங்க சொல்ராங்ளேன்னு வருத்தப்பட்ட என்னை கடவுள் சும்மா விடமாடார்ன்னு...
சுபா சொன்ன குறிப்புகள் நல்ல குறிப்புகள்...அது நமக்கும் குழந்தையின் ஆரோகியமான தோலுக்கும் நல்லது...போதுங்க..ரொம்ப பேசரேன்

ஹர்ஷினி
நீங்க "என்னோட கண்டுபிடிப்பு" அப்படினு போட்டு இருக்குற அத்தனை பாயிண்ட்லயும் உண்மை இருக்கு. எனக்கு தெரிஞ்சு நெறய பேர் பொண்ணு பாக்கும் போது போடும் முதல் கண்டிசனே பொண்ணு நல்ல கலரா இருக்கணும் அப்படின்றதுதான். இப்பல்லாம் பொண்ணு பாக்குற விஷயத்துல நெற்ய பேர் குணத்தை பாக்குறதே கெடயாது. கலரத்தான் பாக்குறாங்க.
// வெள்ளையா இருக்கற மருமகளுக்கு கிடைக்கிற மதிப்பு, கருப்பான மருமகளுக்கு(ஒரே வீட்டில் இருந்தால்) புகுந்த வீட்டில் கிடைப்பதில்லை.//

இதுவும் 100% உண்மை.
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு நெறய பேர் வெளிய சொல்லுவாங்க. ஆனா அவங்களுக்குன்னு வரும் போது அது மறந்திரும் போல. கருப்பு வெள்ளை இந்த பிரச்சனையில பசங்க பாதிக்கப்படுறாங்களோ இல்லையோ கல்யாண விஷயத்துல பொண்ணுங்க ரொம்ப பாதிக்கப்படுறாங்க.

அன்புடன்
ரீஹா :-)

ரீஹா ஆளையே கானோம்?

ஹர்ஷினி என் பொண்ணு பிறந்தப்ப சிவப்பு தான்...பிறந்து 2 மாதத்திற்க்கு நான் கொஞ்சமா j&jபாடி வாஷ் மட்டும் போடுவேன்..அதுகப்ரம் j&j soap போடத் தொடங்கினேன்..அப்ரம் பொண்ணு மெல்ல மெல்ல மாநிறத்துக்கு வந்துட்டா...நானும் கண்டுக்கவே இல்ல.அப்ரம் என் தோழி தான் இது j&j soap நாலயா இருக்கும் நீ அதை நிருத்திட்டு almond oil massage & kadalai maavu போடுன்னா..முதல்ல நம்பாம நான் பாட்டுக்கு வாஷியில் இருந்தேன்..சரி சும்மா சொல்லிட்டே இருக்காளேன்னு ஒரு 2 மாசத்துக்கு போட்டேன். என் பொண்ணு பழய கலர்க்கு வந்துட்டா..அப்ரம் himalayas soap தான் உபயோகிக்கிரேன்..அது சோப்னால தானான்னு டெஸ்ட் பன்ன பொண்ணுக்கு திரும்பவும் 10 மாசம் இருக்கும்போது j&j soap போட்டேன்.திரும்பவும் கருத்துட்டே வந்தா...அப்ப கன்ஃபேர்ம் பன்னிட்டேன்..இனி அப்டி ஏதும் சந்தேகம் இருந்தா அதை நிறுத்தி பாருங்க
கருப்பு நிறத்தை வெள்ளையாக்க முடியாது தான்..ஆனா வேறு காரனத்தில கறுப்பாயிட்டா அதை மாத்த கண்டிப்பா ட்ரை பண்லாம்

ஜலதோஷம் எப்டி இருக்கு பாப்பாக்கு & உங்களுக்கு. கொஞ்சம் பிசி. அவ்ளோதான். உங்க அரட்டை எல்லாம் மொத்தமா படிச்சாச்சு. பட்டம்லாம் குடுத்திருக்காங்க. ட்ரீட் கெடயாதா. நீங்க வரஞ்ச போட்டோ லிங்க் அ பாத்தேன். அதுல நீங்க வரஞ்ச போட்டோ இல்லையே. திரும்ப தரமுடியுமா.

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்