கர்ப்பமாக இருப்பவர்களுக்கு

உங்கள் மருத்துவமனையில் cord blood banking செய்யமுடியுமா என்று கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளூங்கள்....cord blood என்பது குழந்தை பிறந்த பிறகு umbilical cord இல் இருந்து எடுக்கப் படும் ரத்தம்....அதை பாதுகாப்பாக சேமித்து வைப்பதால் பிற்காலத்தில் உங்களது குழந்தையின் உயிரையே காப்பாற்ற வாய்ப்பு கிடைக்கலாம்...வீனாக குப்பையில் கொட்டும் ரத்ததில் இன்று மருத்துவ உலகமே வியந்து போகும் அளவு ஒரு சில நோய்களை( leukemia, sickle cell disease, and metabolic disorders)குணமாக்கும் சக்தி உள்ளது....தயவு செய்து உங்கK மருத்துவ மனையில் அதனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..இது குழந்தை பிறப்பிற்க்கு எந்த ஒரு விதத்திலும் தடையாகாது..அம்மவிற்கோ குழந்தைக்கோ துளியும் வலியில்லாததிது....

எனக்கும் தளிகா சொன்னதுதான் சரின்னு படுது.நிறைய கீரை பழங்கள்னு சாப்பிடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி.

அம்மு.

என் மாமி நல்ல கலர். சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே. அந்த கலர். மாமா நல்ல கறுப்பு. கர்ப்பமாக இருந்த போது என் மாமி நிறைய குங்குமப்பூ சாப்பிட்டார்கள். ஆனால் பையன் பிறந்தான் கறுறுறுறுறுப்பாக. அவனுக்கு கண்ணன் என்று பெயர் வைத்தார்கள். எனவே படையப்பா பாடலில் வந்தது போல் 'நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை'. அதற்கு செலவழிக்கும் பணத்தில் நல்ல பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

அன்புடன்
ஜெயந்தி

கர்ப கால ஆலோசனைகள் தாருங்கள் அன்பு சகோதரி........

அம்மு.

குங்குமப்பூவில் இரும்பு சத்து இருக்கிறது யென நினைக்கிறேன்

இப்ப அம்முக்குட்டியா இருக்குர நீங்க..இப்பவே மன்றம் » உடல் ஆரோக்கியம் » கர்ப்பிணி பெண்கள் » க்கு போனா அக்காமார்கள் நல்ல அறிவுரை எல்லாம் சொல்லீருப்பாங்க....அதத்தவிர உங்களுக்கு என்ன உதவியோ சந்தேகமோ இருந்தால் தயங்காமல் கேக்கவும்

தளிகா:-)

100 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டால் (சாப்பிட முடியுமா?!) கிடைக்கும் இரும்புச் சத்து எவ்வளவு தெரியுமா? 11.1 மில்லி கிராம். அதாவது சாப்பிடும் குங்குமப்பூ அளவில் 0.011% தான் இரும்புச் சத்து. அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். இரும்புச்சத்தினை பொறுத்தவரையில் இது அதிகம்தான். பேரீட்சையில் இருக்கும் அளவைவிட இது அதிகம். ஆனால், 100 கிராம் பேரீட்சையை எளிதாக சாப்பிட முடியும். இது கடினம். 100 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டால் வாந்தி, பேதி என பிரச்சனைகள் நிச்சயம் வரும். வேறு பலன்கள் பெரிதாக இல்லை. அவ்வளவு விலை கொடுத்து பிரச்சனைகளை வாங்க வேண்டாம்.

இதற்கு பதிலாக கீரை, அவரை என்று சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவராக இருந்தால், ஈரல் நிறைய சாப்பிடுங்கள். (இரும்புச் சத்து தேவைப்படுவோர்.)

அட்மினண்ணா லிவெர்னு ஒரு மெயில் அனுப்பிருக்கேன்...அதைப் பார்க்கவும்

மேல இருக்குர தலைப்பை மஞ்சளா மாத்தினாலாவது திருந்துவீங்களானா கலரை மாத்தினீங்க?

இந்த ட்ரெயின்ல எமெர்ஜென்சிக்கு செயின் இருக்குமெ அதுபோல அறுசுவைல ஏதாவது இருந்தா நல்லாருக்கும்....உங்களை அவசரமா கூப்பிடனும்னா அதை புடிச்சு இழுக்கலாம்ல..நேரமின்மைக்கிடையில் நீங்களும் எல்லா பதிவையும் அலச வேன்டிய அவசியம் இல்ல.

நன்றி சகோதரி. நீங்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியதை இங்கேயே போட்டு இருக்கலாம். சகோதரி அவர்கள் ஈரலில் விட்டமின் ஏ அதிகம். அது பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து ஆராய வேண்டும்.

ஆனால், நான் மேலே சொன்ன கருத்து கர்ப்பஸ்திரீகளை மனதில் வைத்து சொல்லவில்லை. பொதுவாக இரும்புச்சத்து தேவைப்படுவோருக்கு என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை இந்த இடத்தில் போட்டதால் கர்ப்பிணிகளுக்கு என்றுதான் அர்த்தமாகின்றது. கர்ப்பிணிகள் ஈரல் சாப்பிடலாமா கூடாதா என்பது எனக்குத் தெரியவில்லை. கேட்டறிந்து சொல்கின்றேன். அதுவரை நான் சொன்னேன் என்பதற்காக யாரும் சாப்பிட்டுவிடாதீர்கள்:-)

மேலும் சில பதிவுகள்