About babies first Teething

Dear Friends,

I have a doubt.....Is there any good or bad things of teething upper of lower first......some of them are telling if upper teeth comes first it is a good sign....some of them are telling if lower teeth comes first it is a good sign.....which one is true and why? Please help me to clear the doubt....

மீனா,

அப்படி எதுவும் இல்லங்க. எப்படி பல்லு வந்தாலும் குழந்தை அழகா தான் இருக்கும்.

கீழ் பல்லு வந்தா நல்லதுன்னு சொல்றது இதனால வேணா இருக்கும்(ஒரு யூகம் தான்). கீழ் தாடை தான் சாப்பிடும் போது அல்லது மற்ற நேரங்களில் மேலே கீழே என்று செல்லும். அதனால பல்லு குத்தாதோ என்னவோ? ஒரு லாஜிக்-கும் புரியலைங்க. யாரவாது சொன்னா நானும் தெருஞ்சுப்பேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மீனா, இந்த மாதிரி நான் ஏதாவது சொன்னா, என் பையன் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாது என்பான்.

பெண்ணுக்கு காலில் இரண்டாவது விரல் கால் கட்டை விரலை விட நீளமாக இருந்தால் அந்தப்பெண்ணின் கணவன் அவளுக்கு அடங்கி நடப்பான் என்று சொல்வார்கள். அப்படி நடக்காத கணவர்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

சந்தேகமே வேண்டாம். எந்தப்பல் வந்தாலும் நல்லதுதான்.
அவளது அரிசிப்பல்லையும் அழகு சிரிப்பையும் ரசியுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி

ஹாய் மீனா,
மேல் பல் முதலில் வந்தால் , அவங்க பேச்சுதான் மேலே(மதிப்பு) இருக்கும்ன்னு சொல்வாங்க . அதெல்லாம் சும்மா. harshini சொன்னதுதான் சரி .
என் பெரிய பையனுக்கு கீழ் பல்தான் முதலில் வந்தது . எந்த பிரச்சனையும் இல்லை. சின்ன பையனுக்கு மேல் பல்தான் முதலில் வந்தது. அடிக்கடி கீழே விழுந்து உதட்டில் ரத்தம் இல்லாமல் இருக்கமாட்டான் . அதனால் கீழ் பல் வருவதுதான் குழந்தைக்கு ஆரோக்கியம்.

மேலும் சில பதிவுகள்