தக்காளி சொதி

தேதி: August 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவை உறுப்பினரான திருமதி. ரோஸ்மேரி அவர்கள் இந்த சுவையான எளிதான தக்காளி சொதியை நேயர்கள் அனைவருக்காகவும் செய்து காட்டியுள்ளார். செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்.

 

தக்காளி - 2
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 6
உப்பு - தேவையான அளவு


 

தேங்காயைத் துருவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நன்கு பழுத்த தக்காளியாக எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை அலசி, குக்கரில் போட்டு வேகவைக்கவும். ஒன்று அல்லது இரண்டு விசில் வரும் வரை வேக வைத்தால் போதுமானது.
வேக வைத்து எடுத்த தக்காளியை மேல் தோல் நீக்கவும். பின்னர் அவற்றை கைகளால் நன்றாக பிசைந்து விழுதாக்கிக் கொள்ளவும்.
தக்காளி கரைசலில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, மஞ்சள், உப்பு மற்றும் கீறிய மிளகாய் சேர்க்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகை போட்டு வெடிக்கவிட்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் கரைத்து வைத்திருக்கும் தக்காளி தேங்காய் கலவையில் சேர்க்கவும். இப்போது அந்த கலவையை பாத்திரத்துடன் அடுப்பில் வைத்து லேசாக கொதிக்கவிடவும். அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம்.
சற்றே கொதித்தவுடன் இறக்கிவிடவும். இப்போது சுவையான எளிய முறை தக்காளி சொதி ரெடி. இதை இடியாப்பத்துடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதில் படத்தில் 2 பொருட்கள் அதிகமாக இருக்கிரதே??மஞ்சள் தூளும்,மிளகுமென்று நினைக்கிரேன்..இதை சேர்க்க மறந்து விட்டீர்களா?இல்லை இது எழுதியது மட்டும் தான் சேர்க்கவேன்டுமா?இன்றெ செய்துவிடலாம் என்று இருக்கிரேன்..அதான் கேட்டேன்

Hi Thalika
மஞ்சள் சேர்த்திருக்கிறேன்.நீங்கள் கடுகை மிளகு என நினைக்கிறீர்கள்.

yess u r right rose...therez no kadugu and manjal in ingredients..so i got a doubght whether itz milagu(pepper) or milagaai..now itz clear..thank you

ஹலோ ரோஸ்,நான் இன்று தக்காளி சொதி செய்தேன்.சுவையாக இருந்தது.நன்றி.தக்காளியை குக்கரில் வேகவைப்பதற்கு பதிலாக நான்காக வெட்டி சிறிது தண்ணீர் விட்டு மைக்ரோ ஹையில் 3 நிமிடம் வைத்தேன்.தக்காளி நன்கு வெந்து தோலையும் ஈசியாக எடுக்க முடிந்தது.குக்கர் கழுவும் வேலை இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தக்காளி மட்டுமில்லை,கவி, அவனில் நிறைய ஈஸியாக செய்யலாம்.கறிவேப்பிலை,கொத்தமல்லீலை,வெந்தயக்கீரை
போன்ற கீரை வகைகளை ஈரமில்லாமல்,துடைத்துவிட்டு, கண்ணாடி ப்ளேட்டில் வைத்து 3 நிமிடங்கள் வைத்தால், பசுமை மாறாமல், நன்றாக வறுபட்டு இருக்கும். பொடி வகைகள் செய்யும்போதும்,பருப்புகளை வறுப்பதும் ரொம்ப சுலபம்,
அன்புடன் விமலா.