இயற்கையான முறையில் அழகினை பாதுகாக்க

முகத்திற்கு ::-

எண்ணெய் பசை போக :-

இரண்டு வகையான முறைகள் உள்ளன

1. கோடைகால முறை ::

1 லிட்டர் தண்ணீரில் 2 ஸ்பூன் வெட்டிவேர் பவுடரை கலந்து ஐஸ் ட்ரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். பின் மெல்லிய துணியில் வெட்டிவேர் ஐஸ் க்யூபை கட்டி பருவில் ஒத்தடம் தர முகப்பரு குறைந்து முகம் பொலிவு பெரும்.

2. குளிர் கால முறை ::

முதலில் 1லிட்டர் நீரை கொதிக்கவிடவும். அதனுடன் 2 ஸ்பூன் வெட்டிவேர் பவுடரை கலந்து ஆவி பிடிக்கவும்.

மற்றமுறைகள்:-

* எண்ணைய் பசை சருமம் உள்ளவர்கள் ஆப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி முகத்தில் தடவி வருவதால் முகத்தில் உள்ள எண்ணைய் பசை குறையும்.

* அரிசிமாவில் சிறிது மஞ்சள்பொடியும் ,பன்னீரையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பூசி வந்தால் ஒரே மாதத்தில் முகம் வசீகரமாகி விடும். கழுத்து கருப்புப்பட்டையும் மறையும்.

முகப்பரு பேக் :-

வேப்பிலைப்பவுடர் -- 10 கிராம்
நெல்லிப்பவுடர் -- 10கிராம்
சம்பங்கி விதைப்பவுடர் -- 5 கிராம்
கடுக்காய் பவுடர் -- 5 கிராம்
சந்தன பவுடர் -- 5 கிராம்
படிகாரம் பவுடர் -- 10 கிராம்
வெட்டிவேர் பவுடர் -- 15 கிராம்
துளசி பவுடர் -- 10 கிராம்

இவற்றை எல்லாம் வெந்நீரில் கலந்து பரு உள்ளவர்களும், முகத்தில் எண்ணைய் பசை உள்ளவர்களும் தினமும் தடவி வர பருக்கள் வராமலும், பரு உள்ளவர்கள் தழும்புகள் வராமலும் தவிர்க்கலாம்.

முகப்பரு, கரும்புள்ளிகள் மறைய :-

* வெட்டிவேர், வேப்பிலைக் கொழுந்து , புதினா(2 இலைகள்), கடுக்காய் துண்டு இவற்றை தண்ணீர் விட்டு நைசாக அரைத்து பூசி வர முகப்பரு, கரும்புள்ளிகள் காணாமல் மறைந்துவிடும்.

* 5 நிமிடம் வெறும் சுடுநீரில் ஆவிபிடித்தபின் , நைசாக அரைத்த கொத்தமல்லி தழையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். ஒரு வாரம் தொடர்ந்து காலை, மாலை என இரு வேளை செய்து வந்தால் சரியாகி விடும்.

* புதினா இலையை கசக்கி அதனுடன் ஓட்ஸை கலந்து முகப்பரு மீது 20 நிமிடம் வைத்து ,பின் வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.

* மஞ்சள்தூள், சந்தனதூள், வேப்பங்கொழுந்தில் தண்ணீர் சேர்க்காமல் சாறு எடுத்து முகத்தில் தடவ பரு நீங்கும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க :-

* வெள்ளரி சாற்றை பாலுடன் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள் அழுக்குகள் நீங்கும்.

முகம் பொலிவடைய :-

* வறண்ட சருமம் இருந்தால் மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

* எலுமிச்சை சாறுடன் சந்தனம் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் முகம் பொலிவு பெரும்.

* அரிசிமாவை தயிருடன் கலந்து முகத்தில் தடவிவர முகம் பொலிவு பெரும்.

மிருதுவான சருமம் பெற :-

* பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.சருமம் மிருதுவாகும். (இதை முழங்கால்,முழங்கைகளிலும் தடவி பயன் பெறலாம்)

வெயிலினால் ஏற்பட்ட கருமை குறைய :-

* ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இதனை பாலுடன் கலந்து சருமத்தில் தடவி 25 நிமிடம் கழித்து கழுவவும்.ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர சரியாகும்.

முகம் சிவப்பாக :-

* சிறிது க்ளிசரின், சிறிது தக்காளி பேஸ்ட், சிறிது தேன் மூன்றையும் கலந்து பூசினால் முகம் சிவப்பாகும்.

மேடு பள்ளமாய் முகம் இருந்தால் :-

* பரு வந்து போன பிறகு சிலருக்கு முகம் மேடு பள்ளமாய் மாறிவிடும். இதை சரி செய்ய சந்தன எண்ணைய் மற்றும் சந்தன கூழை முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பிறகு தேய்த்து கழுவலாம். தினமும் செய்து வர வெகு சீக்கரம் பலன் கிடைக்கும்.

முகத்தில் தேவையில்லாத ரோமம் நீக்க:-

* நீண்ட மஞ்சள், குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து போட்டு நைசாக அரைத்து முகத்தில் தடவிவர சரியாகும்.

கண்::-

கரு வளையம் போக :-

* இட்லி மாவை கண்ணுக்குகீழ் பூசி 15 நிமிடம் கழித்து ரோஸ்வாட்டரில் கழுவிவிடவும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும்.

* உருளைக்கிழங்கு சாறை தினமும் கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் நீங்கும்.

மூக்கு ::-

ஃப்ளாக் டாட்ஸ் தீர :-

* ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து இதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவவும். ஃப்ளாக் டாட்ஸ் உள்ள இடத்தில் சற்று நன்றாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும். 15 நிமிடம் அப்படியே இருக்கவும்.
ஆப்பிள், மாதுளை பழத்தை பேஸ்ட் செய்து ஃப்ளாக் டாட்ஸ் உள்ள் இடத்தில் நன்றாக போடவும். (முகம் முழுவதும் கூட போடலாம்). இப்படியே அரை மணி நேரம் கழித்து குளிர்ந்தநீரில் (ஃப்ரிஜ் தண்ணீர் இல்லை) முகம் கழுவவும்.
வாரம் ஒரு முறை செய்ய நல்ல மாற்றம் தரும்.

உதடு ::-

உதடு சிவப்பாக:-

* தினமும் க்ளிசரின் அல்லது கொத்தமல்லி சாறை தடவினால் நாளடைவில் சிவப்பாகும்.
* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் விளக்கெண்ணைய் அல்லது கிளிசரின் தடவிவர சரியாகும்.

சின்ன சீரகத்தை அரைத்து ஒவொரு நாள் இரவிலும் முகத்தில் தடவி வர முகப்பரு மறைந்து விடும்.
சுபா உங்களது அனைத்து குறிப்புகளும் அருமை, எனது அக்காவின் பெயரும் சுபா தான் அவளும் என்னைப்போல் ஒரு அழகுக்கலை நிபுனர் தான்

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

ஹாய் சுபா மேடம், அசத்தீடீங்க..எனக்கு USஇல் கிடைகும் பொருட்களை வைத்து சொல்லுங்கலேன். எனது கண்ணத்தில் பிம்பில்ஸ் வந்து சென்ற அடையாலங்கல், நீண்ட நாளாக ரெட் கலரில் உள்ளது. அது போக்க என்ன செய்ய வேண்டும். நான் californiaவில் இருக்கிரேன்.
சிந்து உங்களுக்கு தெரிந்திருந்தாலும் சொல்லுங்கலேன்.

நன்றி

மேலும் சில பதிவுகள்