தேதி: August 31, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வேக வைத்த முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 tsp
கடுகு - 1/2 tsp
உளுந்து- 1/4 tsp
கடலை பருப்பு - 1/4 tsp
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு, எண்ணை – தேவையான அளவு
வாணலியில் எண்ணை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் இரண்டாக வெட்டிய முட்டைகளை போட்டு கிளறி மசாலா நன்கு முட்டையில் கலந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது முட்டை மசாலா தயார். இது பருப்பு மற்றும் தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.
விரும்பினால் சிறிது கரம் மசாலா அல்லது கறி மசாலா சேர்க்கலாம்.