சென்ற வார மன்றம்

<table width="98%">
<tr align="center">
<td>
<img src="files/pictures/last_week.jpg" alt="last week" />
</td>
</tr>
<tr>
<td>
<b>
கடந்த வாரம் (26.08.2007 - 01.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

முன்குறிப்பு: இது முதல் வாரம் என்பதால், இந்த வாரத்திற்கான சிறந்த பதிவுகளை அறுசுவை அலுவலக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். வரும் வாரங்களில் ஒவ்வொரு வாரத்திற்கும் அறுசுவை உறுப்பினர் எவரேனும் ஒருவரைக் கொண்டு தேர்வு செய்யவிருக்கின்றோம்.</b>
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>அதிக பதிவுகள் கொடுத்து இந்த வார அறுசுவை அரசி பட்டத்தினை பெறுபவர் - திருமதி. தளிகா (70 பதிவுகள்)</b></font>

அடுத்த இடங்களில்

2. ஹர்ஷினி - 50
3. பாப்பு கார்த்திக் - 29
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர், திருமதி. அம்பிகா.
தலைப்பு "தீவிரவாதத்தை தீவிரமா எதிர்ப்போம்."</b></font>

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மற்ற தலைப்புகள்

இருக்கும் இடம் சொர்க்கம்
உருகவைக்க ஒரு பாட்டு
நேர்மையான பொய்
தேன்+கொள்ளு=50 கேஜி தாஜ்மஹால்
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. ஜானகி அவர்கள்.</b></font>

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/5019#comment-6406" target="_blank">http://www.arusuvai.com/tamil/forum/no/5019#comment-6406</a>

இந்த பதிவில் நகைச்சுவை இல்லை. ஆனால், ஒரு சீரியஸ்ஸான டாபிக்கின் நடுவில் மிகவும் கூலாக அதனை வெளியிட்டு அத்தனை பேரையும் அவரை அறியாமல் சிரிக்க வைத்துவிட்டார்.
<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
<font color="006060"><b>அழகுக்குறிப்புகள் பகுதியில் "முகப் பொலிவிற்கு" என்று இவர் இட்ட பதிவினை இந்த வாரத்தின் பயனுள்ள பதிவாக தேர்வு செய்கின்றோம். அதனை வெளியிட்ட சிந்து அவர்களுக்கு நன்றி.

<a href="http://www.arusuvai.com/tamil/forum/no/5022#comment-6323" target="_blank">http://www.arusuvai.com/tamil/forum/no/5022#comment-6323</a>

சிரிக்க வைத்த தலைப்பு - யார்டப்ப கதை விடுரீங்க? உபயம் : திருமதி. தளிகா

அடுத்தடுத்த வாரங்களில் கீழ்கண்ட பட்டங்களையும் கொண்டு வரலாமா என்று யோசிக்கின்றோம்.

சிறந்த ஆலோசனை - ஐடியா ராணி
சீரியஸ்ஸான பதிவு - கறார் ராணி
புலம்பித் தீர்ப்பவர் - புலம்பல் ராணி
சம்பந்தமே இல்லாமல் பதிவு கொடுப்பவர்களுக்கு - உளறல் ராணி
ஆங்கிலத்தில் அதிகம் பதிந்தால் - அலட்டல் ராணி

</b></font>
<br />
</td>
</tr>
<tr>
<td>
&nbsp;
</td>
</tr>
<tr>
<td>
இறுதியாக: "எல்லாப் பட்டங்களிலும் ராணி என்று சேர்த்து நீங்கள் பெண்குலத்தை மட்டும் குறிவைத்திருப்பது வருத்தத்துக்குரியது.நன்றி." என்று திருமதி. மனோகரி அவர்கள் கண்டனக்குரல் எழுப்புவதற்கு முன்னரே விளக்கம் கொடுத்துவிடுகின்றேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் எவற்றையேனும் கொடுத்தவர் ஆணாக இருந்தால், ராணி ராஜாவாகிவிடுவார்.
</td>
</tr>
</table>

மன்றத்தை மேலும் சுவராசியமாக்கிய அட்மினுக்கு நன்றி.

ஹை, இது நல்லா இருக்கே.
ஆனா என்னைய பாத்து காப்பி அடிச்சிட்டீங்களா. என்கிட்ட அனுமதி கேட்காமலேயே. இட் ஈஸ் ஓகே.
ஆனாலும் இது ரொம்ப நல்லா இருக்கு. வெரி குட். வர்ட்டா:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அட்மின் அவர்களே,

நகைச்சுவை ராணி பட்டத்திற்கு நன்றி. பட்டமளிப்பு விழா எங்கு, எப்பொழுது என்று சொன்னால் வருவதற்கு வசதியாக இருக்கும்.

ஜானகி

வாவ் திஸ் இஸ் வெரி குட்.
ஐ அம் ரியலி அப்ரிஸியேட் மிஸ்டர். அட்மின்

பட்டத்திற்க்கு மிக்க நன்றி ஐயா:-D

அட அட அடா! எத்தனை ராணிகள் :))
அதிலும் தளிகாவுக்கு "அறுசுவை அரசி" பட்டம் கொடுத்தமைக்கு எங்களின் பாரட்டுக்கள்!
யாரெங்கே,(கை தட்டும் சப்தம்)அட்மினுக்கும் ஒரு பட்டம் தயாரிக்க உத்தரவு இடுங்கள்.

தாளிகாவுக்கு ஜே ஜே!!
ஹர்சினிக்கும்,பாப்புக்கும் ஜே!ஜே!!ஜே!!!

ஹேமா படிச்சு முடிக்கிர வரக்கும் தான் இந்த ஆட்டமெல்லாம் ..ஹேமா வந்துட்டா அப்ரம் பட்டமெல்ல்லாம் ஹேமாவுக்குத் தான் ...அப்ரம் நாமெல்லாம் பலூன்ல ஊசி குத்தின மாதிரி கானாம் போய்ருவோம்..இந்த ஹேமா வோட பேச்சே வித்யாசமான கற்பனை வளத்தோட இருக்கும்ல?யோசிச்சு யோசிச்சு லூஸ் மாதிரி சிரிப்போம்ல?

சுபா, நீங்க என்ன பட்டத்துக்கு இப்பவே அடி போடுறீங்கன்னு நல்லா தெரியுது...:-)

ஆனா, அந்த ஒரு பட்டம் மட்டும் பெருமையான பட்டம் கிடையாது.

விமலா, நம் வள்ளல் அட்மினுக்கு "அல்லி ராணிகளை மெச்சிய கில்லி ராஜா" என்ற பட்டம் வழங்கலாம்னு நினைக்கிறேன்...நல்லாருக்கா?

அய்யோ ஏன் என்னை இப்படி சிரிக்க வெக்குரீங்கப்பா...நான் தூங்க போலாம்னு இருந்தேன்..பேரை படிச்சுட்டு சிரிச்சதுல தூக்கமே போச்சு

மேலும் சில பதிவுகள்