குழந்தையின் உணவு

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கோ 6 மாதங்களுக்கோ பின்னரே திட உணவு கொடுப்பது ஆரோகியமானது.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கே எழுதுகிரேன்
6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது இனி ஒரு வேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றாமல் போகிறது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை,ஆரோகியம் கொன்டு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்னு சொல்வார்கள்....
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா தேவையில்லை பசும்பாலே போதும்..பசும்பாலை 1 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேன்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க அவசியம் இல்லை..முழு பாலாக மட்டும் குழந்தைக்கு குடிக்கக் கொடுக்க மட்டுமே ஃபார்முலா கொடுக்க வேன்டும் மற்ற படி திட உணவுக்கு சிறந்தது பசும்பால்
முதன்முதலாக உணவைக் குழந்தைக்கு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் ஆக்கி(ஆப்பம் மாவு பதத்திற்க்கு) கொடுக்கலாம்..பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ உடைத்து விட்டு கொடுக்க வேன்டும்..குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.பிறகு ஒரு வருடம் முடிவதற்க்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு அப்படியே சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட பழக்க வேன்டும்.

திட உணவாக கொடுக்கத் துவங்கும்பொழுது குழந்தைக்கு பழக்க ஏற்றது மசித்த பழ வகைகள்
பனானா - பழத்தை நன்கு கட்டியில்லாமல் ஃபோர்கால் உடைத்து பால் கலந்து கொடுக்கலாம்..1/4 பாக பழத்தை மட்டும் முதல் நாளில் கொடுத்து பின் மெல்ல தினமும் 1 பழமாக கொடுக்கலாம்
ஆப்பில் - ஆப்பிலை இட்லி தட்டில் வேகவைத்து உடைத்து பாலுடன் கலந்தோ இல்லை அப்படியே கொடுக்கலாம்..சில குழந்தைகளுக்கு ஆப்பில் உண்டு பன்னி விடும்...அந்த குழந்தைகளுக்கு ஆப்பிலை தவிர்த்து விட்டு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுக்கலாம்
பின் சீசனுக்கு ஏற்றவாரு பியர்ஸ் பழத்தை ஆப்பில் போலவே வேகவைத்து கொடுக்கலாம்
சப்போட்டாவை குழந்தை விரும்பி சாப்பிடும்..நல்ல சத்துள்ள பழவகை அது..அதனையும் உடைத்துக் கொடுக்கலாம்...constipation க்கு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களை கொடுத்துப் பழகி 2 வாரத்திற்க்குப் பின் தான் காய்கறிகளைக் கொடுக்க வேன்டும்...
காய்கறிகளை நன்கு வேக வைத்து வடிகட்டிக் கொடுக்க வேன்டும். குழந்தைக்கு 7 மாதம் வடிகட்டித் தான் கொடுக்க வேன்டும்.7 மாதத்திற்க்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிரதென்றால் பிறகு மெல்ல அளவை அதிகரித்துக் கொள்ளலாம்
அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள்,கேரட்,pumpkin போன்றவை மிக நல்லது
காய்கறிகளை கொடுக்கும்பொழுது குழந்தைக்கு உப்பு சேர்க்க அவசியம் இல்லை..அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது..
கீரையில் ச்பினாஷ் கீரையில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது..ஆனால் அது உடலில் absorb செய்ய அவசியமானது vit c..
காய்கறிகளில் தக்காளியிலும்,காளிஃப்லவரிலும் vit c உள்ளது..அதனால் spinach சமைக்கும்பொழுது அதனுடன் tomato,cauliflower யும் சேர்த்து சமைத்தால் நல்லது
மல்டிவிடமின் ட்ராப்ஸை கொடுப்பதானால் உணவிற்குப் பின் தினமும் ஒரு முறை கொடுப்பது நல்லது

இதர உணவுகள்
காய்கறிகள் கொடுத்து ஒரு வாரத்திற்குப் பின் மற்ற கூழ் வகைகளைக் கொடுப்பது நல்லது.
ரெடிமேட் உணவுகளை விட வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே சிறந்தது

வேக வைத்த சாதத்தை உடைத்து கஞ்சி போல கொடுக்கலாம்.இட்லி,தோசை சாம்பார் கொடுக்கலாம்

ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம்,

சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம்

சூஜி கோதுமையை தன்னீரில் ஊறவைத்து கைய்யால் கசக்கி அதன் பாலெடுத்து பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்கலாம்

காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக் காய்ப் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்

குழந்தைக்கு 6 மாதத்திற்க்குப் பிறகு தயிர் கொடுக்கலாம்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை 6 மாததிற்குப் பிறகு கொடுக்கலாம்...11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம்
வேக வைத்த காய்கறி,பருப்புடன் சாதமும் நெய்யும் கலந்து உடைத்துக் கொடுக்கலாம்
மீன் ,ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்க்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம்.பின் மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம்
குழந்தையின் உணவில் இனிப்பு சேர்த்துவது நல்லதல்ல...அப்படி சேர்த்துவதானால் வெல்லத்தை சேர்ப்பது நல்லது அதில் இரும்புசத்து உள்ளதால்

உப்பும் முதல் 7 மாதங்களுக்கு தேவையே இல்லை..அப்படியே சேர்த்துவதானால் மிகக் குறைந்த அளவே சேர்க்க வேன்டும்
1 வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேன்டும்..1 வயது வரை மிளகாயை அறவே போடாமல் இருப்பது நல்லது..அதற்க்கு பதில் மிளகையோ(pepper) கேப்சிகத்தையோ சிறிது சேர்க்கலாம்
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும் 4 நாள் கழித்து தான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும்....அந்த நாலு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொன்டதா இல்லையா என்று தெரிய வரும்...
சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிப்ஷன் ஆகும் அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.

Thanks thalika
saranyamohan

saranyamohan

Thanks thalika
saranyamohan

saranyamohan

Jaleela Kamal

ஹலோ சரண்யா
குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் தான் காது வலிகும் முதலில் சளிக்கு மருந்து கொடுக்கவும்,
காதுக்கு பின் புறம், காதை சுற்றி இதமாக தைலம் தடவுங்கள். காதின் உள் எதுவும் போட வேண்டாம் டாக்டர் எதாவது கொடுத்தால் மட்டும் தான் போடனும் காதில் சிறிய ஜவ் ஆகையால் காதி கை வக்கவேண்டாம்.
ஜலீலா

Jaleelakamal

நீங்கள் தந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மிக்க நன்றி

நீங்கள் தந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மிக்க நன்றி

சில்ஜா இது எனக்கு என் கிராண் மா சொன்னது இது அவங்க பட்ட அனுபவம், ஐந்து ஆண் குழந்தை, நாலு பெண் குழந்தை அவர்களுக்கு.
குழந்தை அழும் போது எதற்கு என்று தெரியாமலும், காதில்க் கண்டதை போட்டு குடைந்ததாலும் நாலு குழந்தை இறந்து விட்டது கடைசியில் காது வலி ஒரு குழந்தைக்கு அவர்களுக்கு அவங்க நாங்க கேட்கிறோமோ இல்லை இத மாதிரி ஏதாவது புத்தி மதி சொல்லி கொண்டே இருப்பார்கள்.
நான் அவங்க சொன்ன ஒவ்வொரு புத்திமதியும் ஏட்டில் எழுதவேண்டியவை.
ஜலீலா

Jaleelakamal

உங்கள் க்ரஃன்ட் மா இருக்கான்கலா. இது போல் குறிப்பு கேட்டு சொல்லுங்கலேன். நன்றி.

சில்ஜா
நானும் என் கிராண் மாவும் திக் பிரெண்ட்ஸ் எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் அதேமாதிரி அவர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.
இப்ப இல்லை அவரிகள் கால மாகி பத்து வருடமாகிறது.
என்னை கிரான் மா வா நினைத்து கொள்ளுங்கள், அவர் மூலமா கேட்டு தெரிந்து வைத்திருப்பதை சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

பர்வீன் மனகழ்டம் என்றீர்கள்

அதற்கும் மேல் ஓதுங்கள், எதை நினைத்து மண கழ்டமோ அது தீர தனியாக நபீல் தொழுங்கள், ஜிக்குர் செய்ய்ங்கள், குரானில் டெய்லி சுபு தொழுததும் ஒரு பேஜ் ஓதுங்கள்.

மனதை திசை திருப்புங்கள். முன்பே ஒரு தடவை நார்த்தனாவுக்கு சொல்லி உள்ளேன்.

வேறு வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.

புதுசு புதுசா சமையல் டிரைப் பண்ணுங்க, நல்ல டிரெஸ் பண்ணிக்கங்க, மேட்ச்சாக வளையல் போட்டுக்கங்க, மணி போன்ற மாலை வங்கி போட்டுக்கங்க.

உடம்பு சொல்வதை நாம் கேட்க் குடாது உடம்பு ந்ம்ம சொல்றத கேட்கனும்,

அதற்கு மேல் அருசுவைக்கு வாங்க தளிக்கா கிட்ட அறட்டை அடிங்க

ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜலீலா,செல்வி.. என் கனவர் ஹஜ்ஜுக்கு சென்று இன்று தான் திரும்புகிரார்.இன்ஷா அல்லஹ் இன்னும் 3 மனிநேரத்தில் இங்கே இருப்பாங்க.அதான் கடந்த 20 நாள் கொஞ்ஜம் டல்லா இருந்தேன்.அவ்ளோதான்.மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.இதை ஏன் சொல்லிகிட்டுன்னு இருந்தேன்.

//புதுசு புதுசா சமையல் டிரைப் பண்ணுங்க, நல்ல டிரெஸ் பண்ணிக்கங்க, மேட்ச்சாக வளையல் போட்டுக்கங்க, மணி போன்ற மாலை வங்கி போட்டுக்கங்க//ம்ம்...மேச்சிங்கா டிரஸ் எல்லாம் பன்னியாச்சு.இன்னும் கொஞ்ஜம் மேகப் பாக்கி இருக்கு.ஹிஹி...

ஜலிலாவிர்க்கும் செல்விக்கும் உங்களது அன்பான விசாரிப்புக்கு எனது அன்பான நன்றி.

அன்புடன் பர்வீன்.

மேலும் சில பதிவுகள்