குழந்தையின் உணவு

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கோ 6 மாதங்களுக்கோ பின்னரே திட உணவு கொடுப்பது ஆரோகியமானது.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கே எழுதுகிரேன்
6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது இனி ஒரு வேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றாமல் போகிறது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை,ஆரோகியம் கொன்டு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்னு சொல்வார்கள்....
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா தேவையில்லை பசும்பாலே போதும்..பசும்பாலை 1 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேன்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க அவசியம் இல்லை..முழு பாலாக மட்டும் குழந்தைக்கு குடிக்கக் கொடுக்க மட்டுமே ஃபார்முலா கொடுக்க வேன்டும் மற்ற படி திட உணவுக்கு சிறந்தது பசும்பால்
முதன்முதலாக உணவைக் குழந்தைக்கு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் ஆக்கி(ஆப்பம் மாவு பதத்திற்க்கு) கொடுக்கலாம்..பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ உடைத்து விட்டு கொடுக்க வேன்டும்..குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.பிறகு ஒரு வருடம் முடிவதற்க்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு அப்படியே சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட பழக்க வேன்டும்.

திட உணவாக கொடுக்கத் துவங்கும்பொழுது குழந்தைக்கு பழக்க ஏற்றது மசித்த பழ வகைகள்
பனானா - பழத்தை நன்கு கட்டியில்லாமல் ஃபோர்கால் உடைத்து பால் கலந்து கொடுக்கலாம்..1/4 பாக பழத்தை மட்டும் முதல் நாளில் கொடுத்து பின் மெல்ல தினமும் 1 பழமாக கொடுக்கலாம்
ஆப்பில் - ஆப்பிலை இட்லி தட்டில் வேகவைத்து உடைத்து பாலுடன் கலந்தோ இல்லை அப்படியே கொடுக்கலாம்..சில குழந்தைகளுக்கு ஆப்பில் உண்டு பன்னி விடும்...அந்த குழந்தைகளுக்கு ஆப்பிலை தவிர்த்து விட்டு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுக்கலாம்
பின் சீசனுக்கு ஏற்றவாரு பியர்ஸ் பழத்தை ஆப்பில் போலவே வேகவைத்து கொடுக்கலாம்
சப்போட்டாவை குழந்தை விரும்பி சாப்பிடும்..நல்ல சத்துள்ள பழவகை அது..அதனையும் உடைத்துக் கொடுக்கலாம்...constipation க்கு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களை கொடுத்துப் பழகி 2 வாரத்திற்க்குப் பின் தான் காய்கறிகளைக் கொடுக்க வேன்டும்...
காய்கறிகளை நன்கு வேக வைத்து வடிகட்டிக் கொடுக்க வேன்டும். குழந்தைக்கு 7 மாதம் வடிகட்டித் தான் கொடுக்க வேன்டும்.7 மாதத்திற்க்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிரதென்றால் பிறகு மெல்ல அளவை அதிகரித்துக் கொள்ளலாம்
அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள்,கேரட்,pumpkin போன்றவை மிக நல்லது
காய்கறிகளை கொடுக்கும்பொழுது குழந்தைக்கு உப்பு சேர்க்க அவசியம் இல்லை..அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது..
கீரையில் ச்பினாஷ் கீரையில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது..ஆனால் அது உடலில் absorb செய்ய அவசியமானது vit c..
காய்கறிகளில் தக்காளியிலும்,காளிஃப்லவரிலும் vit c உள்ளது..அதனால் spinach சமைக்கும்பொழுது அதனுடன் tomato,cauliflower யும் சேர்த்து சமைத்தால் நல்லது
மல்டிவிடமின் ட்ராப்ஸை கொடுப்பதானால் உணவிற்குப் பின் தினமும் ஒரு முறை கொடுப்பது நல்லது

இதர உணவுகள்
காய்கறிகள் கொடுத்து ஒரு வாரத்திற்குப் பின் மற்ற கூழ் வகைகளைக் கொடுப்பது நல்லது.
ரெடிமேட் உணவுகளை விட வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே சிறந்தது

வேக வைத்த சாதத்தை உடைத்து கஞ்சி போல கொடுக்கலாம்.இட்லி,தோசை சாம்பார் கொடுக்கலாம்

ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம்,

சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம்

சூஜி கோதுமையை தன்னீரில் ஊறவைத்து கைய்யால் கசக்கி அதன் பாலெடுத்து பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்கலாம்

காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக் காய்ப் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்

குழந்தைக்கு 6 மாதத்திற்க்குப் பிறகு தயிர் கொடுக்கலாம்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை 6 மாததிற்குப் பிறகு கொடுக்கலாம்...11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம்
வேக வைத்த காய்கறி,பருப்புடன் சாதமும் நெய்யும் கலந்து உடைத்துக் கொடுக்கலாம்
மீன் ,ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்க்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம்.பின் மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம்
குழந்தையின் உணவில் இனிப்பு சேர்த்துவது நல்லதல்ல...அப்படி சேர்த்துவதானால் வெல்லத்தை சேர்ப்பது நல்லது அதில் இரும்புசத்து உள்ளதால்

உப்பும் முதல் 7 மாதங்களுக்கு தேவையே இல்லை..அப்படியே சேர்த்துவதானால் மிகக் குறைந்த அளவே சேர்க்க வேன்டும்
1 வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேன்டும்..1 வயது வரை மிளகாயை அறவே போடாமல் இருப்பது நல்லது..அதற்க்கு பதில் மிளகையோ(pepper) கேப்சிகத்தையோ சிறிது சேர்க்கலாம்
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும் 4 நாள் கழித்து தான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும்....அந்த நாலு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொன்டதா இல்லையா என்று தெரிய வரும்...
சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிப்ஷன் ஆகும் அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.

சில்ஜா

நான் நினைப்பதை தளிக்கா சொல்வார்கள், பந்தம் பூர்வ ஜென்ம பந்தம்.

ஒகேவா சில்ஜா கொஞ்ச நாள் முன்பு குழந்தை உணவில் தளிக்கா என்ன சொல்லிய்ருக்கிரார்களோ அது தான் நானும் பாதி எழுதி இருக்கிறேன், சில குறிப்பு என்னுடையதும் தளிக்கா உடையதும் சேமாக இருக்கும்.
இன்று கூட அவர் கொடுத்த சிக்கன் பிரை அதில் அரிசி மாவு தவிர மற்ற எல்லாம் சேர்ப்பேன்,
நேற்றி கடைக்கு போனபோது குட்டி லாலிபாப் வங்கி வந்தேன், மைதா, மிட்டை, கார்ன் பிளார் மாவு ல்கந்து நால் சூப்பரா வரும் அதற்குள் தளிக்கா இன்று கொடுதிருக்கிறார், இன்னோரு விஷியம் கூடா தளிகா'ஸ் சிக்கன் பிரை கூட ஜாலீலா'ஸ் சிக்கன் பிரையும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி சிக்கனை பிரை பண்ணி பார்ப்பது என்னுடைய பழக்கம் ஏனேன்றால் பசங்களுக்கு சிக்கன் தான் ரொம்ப பிடிக்கும்.பராவாஅ இல்லை நான் கொடுத்தா என்ன தளிக்கா கொடுத்தா என்ன எல்லாம் ஒன்று தான்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்க ஆமாமாமா..உங்கள் ஊரில் செய்யும் ட்ரெடீஷனல் உணவு தவிற பலதையும் நீங்க கொடுப்பீங்க..எனக்கும் எக்ஸ்பெரிமென்ட் செய்யும் பழக்கம் உண்டு அதனால் தான்னு நினைக்கிறேன்...முட்டை சிக்கன் மீன் வைத்து இனி என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்வேன்.

நேற்று கூட ஒரு டிபெரெண்டான கூட்டு கறி பன்ன வாசனையும் அதுவும் ரொமப் சூப்பார்,
பிற்கு பீட்ர்ருட் ஹல்வா,முட்டை வட்லாப்பம்,கீரைஸ்,கறி உருளை கிழங்கு சால்னா,,கறி கூட்டு. அப்பளம்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா நிரபரா சத்து மாவு பாலில் கலக்கிக் குடிக்க கிடைக்குதே அதை மட்டும் ப்ரேக்ஃபாஸ்டாக சாப்பிடலாமா..உங்க மெனு காம்பினேஷன் சூப்பரோ சூப்பர்

எந்த மாவாக இருந்தாலும் கொஞ்சம் தண்ணிர் விட்டு காய்ச்சி கொண்டு பாலை சேர்க்கவும்.
நானும் நீர பூரா புட்டுமாவு வாங்கி வந்தேன், ஊரிலிருந்து வந்த மாவு தீர்ந்து விட்டது,
ஜலீலா

Jaleelakamal

என் மகனுக்கு முகத்தில் சிறு சிறு புள்ளிகள் உள்ளன. ஊரில் டாக்டர் ஓலிவ் ஆயில் போட சொன்னார்கள். போட்ட பிறகும் போகவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
regards
siljavignesh

அதுதான் எனக்கு டவுடே. நன் சில கேள்விகள் உங்களிடம் கேட்டால் தளிகாகிட்ட இருந்து பதில் வரும் அது தான் எனக்கு டவுட். மற்றபடி ஒகே. நன்றி
regards
siljavignesh

குழந்தைகளுக்கு சாதத்தில் கலந்து தரக்கூடிய பொடிவகைகள் என்னென்ன என்பதை செய்முறை விளக்கக்குறிப்புகளுடன் யாராவது கூறுங்களேன்.

நன்றி.
தங்களின் பதில்களை அவலுடன் எதிர்பார்க்கும் அருசுவை உறுப்பினர் ஜோவிட்டா,Australia.

டியர் ஜோவிட்டா
என்ன பொடி வகை பொடிய மட்டும் போட்டு எப்படி கொடுப்பீர்கள்.
டிரையாக இருக்குமே, எத்தன வயது நான் அன்றே பார்த்தேன், பெரியவர்களுக்கு கருவேப்பிலை பொடி கொள்ளு பொடி இன்னும் பல பொடிகள்,கிட்ஸ் ரெஸிபி என் குறிப்பில் நிறைய இருக்கு பாருங்கள் மற்றும் உன்ங்களுக்கு என்ன மாதிரி வேண்டும்.நான் டிரை பண்ணுகிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் ஜோவிட்டா நானும் அதான் பார்த்துட்டு யோசிச்சேன்..குழந்தைகளுக்கு கொஞ்சம் தொண்டையில் சீக்கிரம் இறங்கும்படியான உணவு தானே பிடிக்கும்...எப்படி என்ன பொடியை சேர்த்து சாப்பிடுவார்கள் என யோசித்தேன்.

மேலும் சில பதிவுகள்