குழந்தையின் உணவு

குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கோ 6 மாதங்களுக்கோ பின்னரே திட உணவு கொடுப்பது ஆரோகியமானது.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கே எழுதுகிரேன்
6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது இனி ஒரு வேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றாமல் போகிறது என்ற சந்தேகம் இருந்தால் மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை,ஆரோகியம் கொன்டு எப்பொழுது திட உணவு கொடுக்கலாம்னு சொல்வார்கள்....
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா தேவையில்லை பசும்பாலே போதும்..பசும்பாலை 1 வயதிற்கு மேல் தான் கொடுக்க வேன்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க அவசியம் இல்லை..முழு பாலாக மட்டும் குழந்தைக்கு குடிக்கக் கொடுக்க மட்டுமே ஃபார்முலா கொடுக்க வேன்டும் மற்ற படி திட உணவுக்கு சிறந்தது பசும்பால்
முதன்முதலாக உணவைக் குழந்தைக்கு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் ஆக்கி(ஆப்பம் மாவு பதத்திற்க்கு) கொடுக்கலாம்..பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ உடைத்து விட்டு கொடுக்க வேன்டும்..குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.பிறகு ஒரு வருடம் முடிவதற்க்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு அப்படியே சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட பழக்க வேன்டும்.

திட உணவாக கொடுக்கத் துவங்கும்பொழுது குழந்தைக்கு பழக்க ஏற்றது மசித்த பழ வகைகள்
பனானா - பழத்தை நன்கு கட்டியில்லாமல் ஃபோர்கால் உடைத்து பால் கலந்து கொடுக்கலாம்..1/4 பாக பழத்தை மட்டும் முதல் நாளில் கொடுத்து பின் மெல்ல தினமும் 1 பழமாக கொடுக்கலாம்
ஆப்பில் - ஆப்பிலை இட்லி தட்டில் வேகவைத்து உடைத்து பாலுடன் கலந்தோ இல்லை அப்படியே கொடுக்கலாம்..சில குழந்தைகளுக்கு ஆப்பில் உண்டு பன்னி விடும்...அந்த குழந்தைகளுக்கு ஆப்பிலை தவிர்த்து விட்டு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுக்கலாம்
பின் சீசனுக்கு ஏற்றவாரு பியர்ஸ் பழத்தை ஆப்பில் போலவே வேகவைத்து கொடுக்கலாம்
சப்போட்டாவை குழந்தை விரும்பி சாப்பிடும்..நல்ல சத்துள்ள பழவகை அது..அதனையும் உடைத்துக் கொடுக்கலாம்...constipation க்கு பப்பாளிப் பழத்தை உடைத்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களை கொடுத்துப் பழகி 2 வாரத்திற்க்குப் பின் தான் காய்கறிகளைக் கொடுக்க வேன்டும்...
காய்கறிகளை நன்கு வேக வைத்து வடிகட்டிக் கொடுக்க வேன்டும். குழந்தைக்கு 7 மாதம் வடிகட்டித் தான் கொடுக்க வேன்டும்.7 மாதத்திற்க்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிரதென்றால் பிறகு மெல்ல அளவை அதிகரித்துக் கொள்ளலாம்
அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள்,கேரட்,pumpkin போன்றவை மிக நல்லது
காய்கறிகளை கொடுக்கும்பொழுது குழந்தைக்கு உப்பு சேர்க்க அவசியம் இல்லை..அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது..
கீரையில் ச்பினாஷ் கீரையில் அதிகளவு இரும்பு சத்து உள்ளது..ஆனால் அது உடலில் absorb செய்ய அவசியமானது vit c..
காய்கறிகளில் தக்காளியிலும்,காளிஃப்லவரிலும் vit c உள்ளது..அதனால் spinach சமைக்கும்பொழுது அதனுடன் tomato,cauliflower யும் சேர்த்து சமைத்தால் நல்லது
மல்டிவிடமின் ட்ராப்ஸை கொடுப்பதானால் உணவிற்குப் பின் தினமும் ஒரு முறை கொடுப்பது நல்லது

இதர உணவுகள்
காய்கறிகள் கொடுத்து ஒரு வாரத்திற்குப் பின் மற்ற கூழ் வகைகளைக் கொடுப்பது நல்லது.
ரெடிமேட் உணவுகளை விட வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே சிறந்தது

வேக வைத்த சாதத்தை உடைத்து கஞ்சி போல கொடுக்கலாம்.இட்லி,தோசை சாம்பார் கொடுக்கலாம்

ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம்,

சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம்

சூஜி கோதுமையை தன்னீரில் ஊறவைத்து கைய்யால் கசக்கி அதன் பாலெடுத்து பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்கலாம்

காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக் காய்ப் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்

குழந்தைக்கு 6 மாதத்திற்க்குப் பிறகு தயிர் கொடுக்கலாம்.
வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவை 6 மாததிற்குப் பிறகு கொடுக்கலாம்...11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம்
வேக வைத்த காய்கறி,பருப்புடன் சாதமும் நெய்யும் கலந்து உடைத்துக் கொடுக்கலாம்
மீன் ,ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்க்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம்.பின் மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம்
குழந்தையின் உணவில் இனிப்பு சேர்த்துவது நல்லதல்ல...அப்படி சேர்த்துவதானால் வெல்லத்தை சேர்ப்பது நல்லது அதில் இரும்புசத்து உள்ளதால்

உப்பும் முதல் 7 மாதங்களுக்கு தேவையே இல்லை..அப்படியே சேர்த்துவதானால் மிகக் குறைந்த அளவே சேர்க்க வேன்டும்
1 வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேன்டும்..1 வயது வரை மிளகாயை அறவே போடாமல் இருப்பது நல்லது..அதற்க்கு பதில் மிளகையோ(pepper) கேப்சிகத்தையோ சிறிது சேர்க்கலாம்
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும் 4 நாள் கழித்து தான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும்....அந்த நாலு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொன்டதா இல்லையா என்று தெரிய வரும்...
சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிப்ஷன் ஆகும் அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும்.

டியர் ஜலீலா, தளிகா மேடம்,

எனது குழந்தைக்கு(ஆண்) ஒரு வயதாகிறது. அவன் பருப்பு சாதம் தவிர(பால்,தயிர், ரசம்) சாதங்கள் போன்றவற்றை சாப்பிட மறுக்கிறான். ஆனால் நாம் சாப்பிடும் குழம்பு சாதம் ,மற்றும் fried rice சாப்பிட விரும்புகிறான். நான் அவனுக்கு காரம் மிகுந்த குழம்பு வகைகளை கொடுக்க விரும்பவில்லை.அதனால் சாதத்தில் தூவி நெய் ஊற்றி பிசைந்து கொடுக்ககூடிய வகையில் பொடி வகைகளின் செய்முறைகளை தயவு தாருங்கள்.மேலும் தங்களின் குறிப்பான இட்லி பொடி (குழந்தைகளுக்கு)செய்து வைத்திருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. தங்களுக்கு என் நன்றிகள் பல.

தங்களின் பதிலை அவலுடன் எதிர் பார்க்கிறேன்.

நன்றி
ஜோவிட்டா.

ஜோவிட்டா சத்தியமா பொடிவகைகள் எதுவும் எனக்கு தெரியாது..எதனால் அதை கேட்கிரீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்..
மேலும் இன்னொரு சின்ன சஜெஷன்.ஒன்னு கேட்டா ஒன்னு சொல்ரேனேன்னு நினைக்க வேண்டாம்...மனசு கேட்கலை
நம்மில் பெரும்பாலான அம்மாக்கள் குழந்தைக்கு தனியா ஒரு தட்டில் ஒரு சில குறிப்பிட்ட உணவை வைத்து தினிப்போம்..அதில் பெரும்பாலும் நான் பார்த்திருப்பது தயிர் சாதம்,பருப்பு சாதம்,பாலில் முக்கிய இட்லி,தோசை,பிஸ்கட்.
ஆனால் கண்டிப்பா குழந்தைக்கு மேற்கண்ட உணவு வெறுப்பைக் கொடுக்கும்..1 வயதில் நம்முடன் நமக்கு பக்கத்தில் ஹை சேரில் உக்கார வெச்சு நாம் சாப்ப்பிடும் அதே உணவைக் கொடுத்து குழந்தை விரும்பி சாப்பிட்டால் அதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறேதுமில்லை.
தாயின் கருவரையிலேயே குழந்தைக்கு அம்மா சாப்பிடும் உணவின் ஸ்பைசி டேஸ்ட் பழகிவிடும்...ஸ்பைசி உணவே சாப்பிடாமல் திடீரென்று காரமாக சாப்பிட்டால் தான் குழந்தைக்கு ஒத்துக்காது..உங்களது உணவில் குழந்தைக்காக காரத்தை குறைத்து கொடுங்கள்..அது சாப்பிட்டு பழகுவது சிறந்தது.
கொஞ்சம் பயத்துடனே தான் எழுதறேன் என்ன நெனசுக்க போரீங்களோன்னு;-
)..ஆனால் ஒட்டுமொத்தமா இந்த உணவைத் தான் குழந்தை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் நம் தாய்மார்கள் கொஞ்சம் படிச்சு யோசிக்கட்டுமேன்னு இங்க எழுதிட்டேன்.

டியர் ஜோவிட்டா
ஒன்றும் கவலை வேண்டாம்.
நீங்க செய்கிற குழம்பு பிடிக்கிறதா ரொம்ப சந்தோஷம் , பிடிக்காததை தினிக்கவேண்டாம்.
குழம்பு நீங்க செய்வது போல் செய்து கொள்ளுங்கள்.
அவனுக்கு கொடுக்கும் போது ஒரு கைபிடி சாதம் எடுத்து நல்ல முதலில் சூட்டுடன் நச்சுகொள்ளுஙகல். இப்பொது குழம்பை இரண்டு ஸ்பூன் ஊற்றி மீன், கறி , சிக்கன் என்றால் அதை நல்ல பிச்சி போட்டு, ஒரு சிட்டி க்கை சர்க்கரை, கொஞ்சம் வெண்ணீர் கலந்து கொடுங்கள்.
இன்னும் ஒன்று இட்லி பொடி ஒகே ஆனால் அதில்சூடானா சாததில் போட்டு கொஞ்சமா நெய் விட்டு கொடுங்கள்.
பருப்பு பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.எதுவாக இருந்தாலும் காரம் குறைத்து கொள்ளுங்கள்.
இன்னும் வேறு ஏதாவது ஐடியா கிடைத்தால் சொல்கிறென்.

ஜலீலா

Jaleelakamal

டியர் ஜோவிட்டா அன்னுவின் வேர்கடலை பொடியை காரமில்லாமல் செய்து உங்க பையனுக்கு கொடுங்க
ஜலீலா

Jaleelakamal

உங்க குறிப்பு ரொம்ப நல்ல உபயோகமாக இருக்கு. எப்படி இவ்வளவு சின்ன வயதில் என் அம்மவிற்கு தெரியாத விசயங்களை எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்கள். என்ன என் குழந்தைக்கு ஒரு ஆறு மாதம் ஆகும் போது இதெல்லாம் எனக்கு தெரிந்திருக்கலாம். பாவம் அவன் இதில் பாதி variety கூட நான் குடுத்ததில்லை.

உபயோகமாக இருக்கிறதுன்னு கேட்டப்ப மிகுந்த சந்தோஷம்..இருக்கவே இருக்கு இன்டெர்னெட்/புக்ஸ் இதுல தான் கத்துக்கறேன்..பின் நிறைய எக்ஸ்பெரிமென்ட் செய்வேன் :-)
குழந்தை வந்தபொழுது ஃபவுன்டேஷனை நல்ல போட்டு விட்டால் பின்னாளில் பலமாக இருக்கும் என்று பிள்ளைகளுக்கான எல்லா வகையானவற்றையும் படித்து தெரிந்து கொள்வேன்...
இங்கே கேள்வி வரும்பொழுது படித்த பதிலை /செய்து பயனடைந்தவையை பகிர்ந்து கொள்வேன் அவ்வளவுதான்.
வருத்தப்படாதீங்க அதுக்கெண்ண அப்ப கொடுக்காட்டி இப்ப கொடுக்கலாமே பிள்ளைகளுக்கு:-)..நல்ல சமைப்பீர்களா?

என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. உங்கள் குறிப்புகள் மிகவும் உதவுகிறது. நன்றிகள் பல.

Hello Friend,
really i am happy by seeing ur tips.It is very useful for every new mothers.I have a 6 months daughter...Now am giving ragi and farex..She is not eating Idly.What to do

LathaJai

ஹாய் லதா இட்லி சாப்பிடாட்டி விட்டுடுங்க..என் பொண்ணுக்கும் பிடிக்காது நானும் நிர்பந்திப்பதில்லை.அதுவும் நாம் பால் சர்க்கரை கலந்து கொடுத்தால் அவளுக்கு வாந்தி வந்து விடும்..அதுவே வெறும் இடியை கைய்யில் கொடுத்தால் சாப்பிடுவாள்..அதைத் தவிர்த்து ராகி,ஓட்ஸ்,செரெலேக்,சாதமும் பாலும் அரைத்தது,தயிர் சாதம்,கோதுமைப் பால் கூழ்,அப்படி எதையாவது கொடுக்கலாம் லதா

மேலும் சில பதிவுகள்