அரட்டை கச்சேரி

இங்கே பேஜ் ஓபன் பண்ணியாச்சு
எல்லோருக்கும் ஒரு கானா!!

அசின் தான் குடுத்தங்க பேட்டி
அஜித்துக்கும் விஜய்க்கும் போட்டி

ஜோவுக்கு பொறந்திடுச்சி பாப்பா
சூர்யா தான் ஆயிட்டாரு அப்பா

விஜயகாந்து அடிச்சாரு விசிலு
'முதல்மரியாதை' ராதா பேரு குயிலு

விக்ரமோட அடுத்தப்படம் பீமா
ரஜினி தான் தனுஷோட மாமா

சிம்புதான் அடிச்சாரு குத்து
கமல்தான் சினிபீல்டின் சொத்து

இப்பிடியே எழுதினா
எனக்கு விழும் மொத்து!!

பாத்து
பதில எழுதுங்க !

சுபா ஓம உப்பு ல வாயுக்கோளாருக்கு பதில் வாய்க்கோளாருன்னு தவறுதலா போட்டிருகீங்க...இங்க வாய் பேசி பேசி அப்டியே வருதா?ஹேய் சும்மா சொன்னேன்..சீக்கிரம் சரி பன்னுங்க

எப்படி இவ்வளவு சின்ன வயசில இப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க??குடும்பத்தில் பாட்டி இல்ல பெரியவங்க யாராவது இப்படி பாட்டி வைத்திய எக்ஸ்பேர்ட்ஸ் இருந்தாங்களா?உங்களை பாராட்டாம இருக்க முடியாது..இன்னக்கி மிளகு கஷாயம் செஞ்சுரலாமன்னு யோசிக்கரேன்..ஆன காரமா இருக்குமோன்னு பயமா இருக்கு

என்ன சுபா,

தமிழுக்கே தமிழான்னு கேட்பீங்கன்னு நினச்சா, ஒவ்வொரு முறையும் தளிகா உங்க தமிழ் பிழைய சொல்ல்வேண்டி இருக்கு. உங்க அப்பா கிட்ட சொல்லனும்னு போல.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அய்யயோ தப்ப நினச்சுடாதீங்க...அத வேர யாராவது நம்ம மன்றத்துல இருக்காதவங்க பாத்து கேலி பன்னிடக் கூடாதேன்னு தான் நானே சொல்லிட்டென்

என்ன பண்றது ஹர்ஷினி,
அப்பா தமிழ் படிச்சாலும் நாம கம்ப்யூட்டர் சயின்ஸை படிச்சதினால் தமிழ் அழுகிறது.
ஒரு குறிப்பை எழுதும் போது ஒரு தடவை பார்த்து தான் அனுப்புவேன். எப்படியோ சில தவறுகள்
இனி பார்ப்போம்.

விவேக் சொன்னது போல் இப்படி தமிழ் மேல புல்டோசரை ஏத்தினா அது ஏன் அழாது?
அன்புடன்
ஜெயந்தி

மெஹ்ஜாஸ் அவர்கள் அனுப்பிய முந்திரி உருண்டை குறிப்பை பார்த்தவுடனே நாவில் நீர்.
என்ன பண்ணுவது கற்பனையிலே சாப்பிட்டு பார்க்கிறேன். அப்பொழுது கூட எடை கூடிவிடுவோமோ என்ற பயம் (கவனிக்க : பாபு அண்ணா, தேவா)

அன்புள்ள அண்ணா,
இது எப்படி நடந்தது?
எனக்கு இப்பொ தான் அறுசுவை வருது.
காலையில் இருந்து போராடி இரண்டு நாள் என் பதிவை தரமுடியவில்லை.
அதற்கு முழு பொறுப்பு நீங்கதான்.
போக நேரம் ஆகிவிட்டதால் பிறகு வருகிறேன்.

ஹைக்கூ

புலம்பி தவிக்கிறது மனது
ஆற்றில் வெள்ளம்
அக்கரையில் குழந்தையின் பள்ளி

கவிதை எழுதுவதே மறந்து குடும்ப கடலில் கலக்கும் நதி போல் இருந்த என்னை தட்டி எழுப்பிய அட்மின் அண்ணா அவர்களுக்கு நன்றிகள் கோடி.

என் கணவரின் ஹைக்கூ

நித்திரையில் அவள் -- என்
நித்திரையிலும் அவள்
சுபா

நான் அறுசுவையில் எழுதுவதால் அவரும் ஹைக்கூவை சொன்னார். எப்படி?

மேலும் சில பதிவுகள்