சுறாமீன் குழம்பு

தேதி: September 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுறாமீன் - அரை கிலோ
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

சுறாமீன் துண்டுகளை கழுவி சுத்தப்படுத்தவும். புளியை கரைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும்.
மிளகு, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக நுணுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் குழம்பை ஊற்றவும். குழம்பு கொதி வந்ததும் மீன் துண்டங்களை போடவும்.
குழம்பு நன்றாக கொதித்து மீன் வெந்ததும் நுணுக்கி வைத்திருக்கும் மிளகு, பூண்டுப்பல்லை சேர்க்கவும். மேலும் 10 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க மீன்குழம்பு செய்தேன், சிம்பிள் & சூப்பராக இருந்தது.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா..!! இந்த சுறாமீன் குழம்பின் விசேஷமே மிளகு, பூண்டு அரைத்து கடைசியாக சேர்ப்பதுதான். அது கருவாட்டு குழம்பின் ருசியையும் சேர்த்துக்கொடுக்கும். சுறாமீன் குழம்பும், முருங்கைக்காய் பொரிச்சகுழம்பும் நல்ல காம்பினேஷன் தனிஷா..!! செய்து பார்த்ததற்கு நன்றிகள் பல..!!

மாலதியக்கா சுறா மீன் குழம்பு செய்தேன். நன்றாக வந்தது. நான் சுறா வறைதான் அதிகம் செய்வேன். அம்மாதான் குழம்பு செய்வா. நான் நினைத்தேன் சுறாவுக்கு தேசிக்காய்ப்புளிதான் பொருத்தம் என்று. இன்று உங்கள் முறையில் பழப்புளி சேர்த்தது நன்றாகவே இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த சுறா மீன் குழம்பின் படம்

<img src="files/pictures/aa212.jpg" alt="picture" />

அதிரா.!! சுறாமீன்குழம்பு ஃபோட்டோ நன்றாக இருக்கிறது. குழம்பை இறக்கும்போது மிளகு, பூண்டு தட்டி சேர்த்தீர்கள்தானே?.......அதில்தான் குழம்பின் சுவையே இருக்கிறது. செய்துபார்த்து படம் எடுத்து அனுப்பியதற்கு நன்றி...!!