அரட்டைக்கு வாங்க - contd....

இனி இங்கே தொடரலாம். வாங்க! வாங்க!! வாங்க!!!

தளிகா, நீங்க தான் பேபி சிட்டரா? குழந்தைகள்லாம் இந்த காலத்துல நல்ல தெளிவா இருக்குங்க, யார் கிட்ட போனா படுத்தலாம்னு புரிஞ்சு தான் உங்க கிட்ட வந்துருக்கு ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

படிச்சு படிச்சு தூக்கம் வந்ததா என்ன. இந்த பக்கம் வந்திருக்கீங்க. சும்மா ஜாலியா கேட்டேன்.:-) அடிச்சிறாதீங்க???

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அண்ணா,

இந்த லின்க் யாருக்காக போட்டீங்க.
பிஸிபேளாபாத் குறிப்பு.
http://www.arusuvai.com/tamil/testing
நான் தேடுக-ல போய் testing-னு தேடினா, இந்த டெச்ட் லின்க் கிடச்சது.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹலோ ஹர்ஷினி, எப்படி இருக்கீங்க.. நீங்க எங்கயோ நான் என்ன படிக்கறேன்னு கேட்டீங்க தானே? நான் C# படிக்க தான் ஆரம்பிச்சேன், கணவர் சொல்லி. அவர் பாவம் எனக்கு ப்ரொக்ராமிங் நல்லா தெரியும்னு நினைச்சு இப்படி சொல்லிட்டாரு. அப்புறம் தான் அவருக்கு நான் எனக்கு ப்ரொக்ராமிங் தெரியாதுனு சொன்னது உண்மை தான்னு புரிஞ்சுது.

அடிப்படையே சுத்தமா தெரியாததுனால/புரிஞ்சுக்க மறுக்கறதால ஆரம்பிச்ச இடத்துலயே தான் இன்னும் இருக்கேன். நீங்க ASP, ஜாவானா கவலையே இல்லியே, வேலை கிடைச்ச மாதிரி தானே, அப்புறம் என்ன அரட்டை குறட்டை எல்லாமே ஜாலியா விடலாம்! எனக்கு பொறாமையா இருக்கு உங்களை பாத்து! :-(

தளிகா, எனக்கென்னவோ நான் வேலையை(கிடைச்சா) சக்தி இருக்குற வரைக்கும் விடக் கூடாதுனு தோணுது. கொஞ்ச காலம் முன்னாடி என் தோழிகள் கிட்டலாம் இந்த சாஃப்ட்வேர் வேலை பத்தி என்னலாம் புலம்பி இருக்கேன் தெரியுமா? என்னாலயே நம்ப முடியல நானா இப்படி பேசறேன்னு. ஹும்ம்ம்...

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஹர்ஷ் நீங்க முதல்ல அந்த "எனர்ஜி இல்லா ரோஸ்" பதிவுக்கு போய்ட்டு வாங்க. இன்னொரு தடவை அடித்திறாதேன்னு யாராச்சும் சொல்லி பாருங்க..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

சரி எனக்கு ஒரு டவுட்- ஹர்ஷ் நீங்க இந்தியன் கன்சல்டண்சி மூலமா H1 வாங்கினீங்கன்னா, முன்னாடி H4ல இருந்தீங்களா? இப்போ அந்த கன்சல்டண்சி உங்களை வேலைக்கு அனுப்பும், காண்ட்ராக்டரா, அப்படி தானே?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

//படிச்சு படிச்சு தூக்கம் வந்ததா என்ன. இந்த பக்கம் வந்திருக்கீங்க// இப்படி மட்டும் இருந்தா என் கணவர் பால் குடம் தேன் குடம் எல்லாம் தூக்கி எனக்கு பெரிய கும்பாபிஷேகமே பண்ணிருப்பாருல்ல.. நான் தான் உடம்பு சரியில்லாம படுத்துருக்கேனே. அவரால ஒண்ணும் சொல்லவும் முடியல, விடவும் முடியல. எப்படிலாம் கஷ்டம் வருது பாருங்க மனுஷனுக்கு :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

சரி ஹர்ஷ் காணா போயிட்டாங்க.. நானும் கிளம்புறேன், படிக்க இல்ல தூங்க! 2 நாள்ல 80% மெத்தைல இருந்துருக்கேன் :-) இதுக்கு ஏதும் பட்டம் கிடையாதா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஆமா ஹேமா,

நான் h4-ல தான் இருக்கேன். consultants interview தான் ஏற்பாடு பண்ணி தருவாய்ங்க. வேல இல்ல:-( .அதனால தான் இந்த கவல. நீங்க வந்ததே h1 லயா. இல்ல இப்ப தான் h1 பண்ணீங்களா.
நீங்க காணாம போயிட்டீங்கன்னு நான் டீ போட போனேன். அவ்ளவு போரா இருக்கு. படிக்கவும் பிடிக்கல, படுக்கவும் பிடிக்கல(பயத்துல தூக்கம் வரமாட்டேங்குது).

முதல்ல கேக்க வேண்டியத இப்ப கேக்கறேன். உடம்புக்கு என்னாச்சு. படிச்சு படிச்சு இப்படி ஆயிடுச்சா. இல்ல cold போலவா. ஒழுங்கா சாப்பிடுங்க. இந்த வயசுல நாங்கெல்லாம் அந்த காலத்துல-னு சொல்லபோறாங்க யாரேனும். உடம்பப் பார்த்துக்கோங்க. அப்புறம் படிக்கலாம்.

உங்கள பார்த்து திருந்தனும்னு காலைல இருந்து பல தடவ முயற்ச்சி பண்ணிட்டேன். ஆனா முடியல. ஒவ்வொரு நிமிஷமும் திரும்பவும் அறுசுவையை(புக்கை இல்ல) திறந்து பார்த்துட்டே இரூக்கேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

டீ குடிச்சிட்டு தெம்பா படிங்க.. :-) ஆமா ஃபீவர் தான். சுத்தமா சக்தி இல்ல. சரியாக இன்னும் 2-3 நாள் ஆகிடும் போல.

நான் H4ல தான் வந்தேன். இப்போ தான் H1 வாங்கிருக்கேன். இது கிடைக்க்லைனாலும் ஈஏடி வந்து அப்போவும் இதே வேலை தேடும் கதை தான். நீங்க சொல்ற 'இண்டர்வ்யூ அரேஞ்ச்' பண்றதை தான் நானும் சொல்றேன். எனக்கும் பயத்துல எதுவும் ஓட மாட்டேங்குது. நான் கேட்க வந்ததே இப்பொ உடனடியா வேலை வாங்கி ஆகணுமா, ஒரு 3 மாசம் கழிச்சு போனா என்ன ஆகும்? இண்டர்வ்யூ போய் செலக்ட் ஆகாம 3 மாசம் போச்சுன்னா நம்ம விசா என்ன ஆகும், கண்சல்டண்சி என்ன பண்ணும்? இல்ல இண்டட்வ்யூ போகாம 3 மாசம் கழிச்சு அட்டெண்ட் பண்ணா என்னாகும்?

எனக்கு எதுவும் தெரியல, இதை பத்தி ஏதாவது என் கணவர் கிட்ட கேட்டா படிக்கற வழியை பாருனு தான் வரும். அதுக்காக திடும்னு 20 நாள்ல எல்லாம் தெரிஞ்சுடுமா? செய்வதறியாது திகைத்தாள்னு கதைலலாம் வருமே அப்படி தான் இருக்கேன் நானும்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்