தாய்ப்பால் அதிகம் சுரக்க

நான் ஆறு மாத காலமாக தாய்ப்பால் கொடுத்து வருகிறேன். தற்போது பால் அளவு குறைந்து வருவதுபோல் தெரிகிறது. தாய்ப்பால் அதிகரிக்க ஆலோசனை தந்து உதவவும்.

இப்போதுதான் அருசுவையில் இணைந்துள்ளேன். விரைவில் அரட்டை அரங்கம் வருகிறேன்.

அறுசுவை துவக்கிய அட்மினுக்கு வாழ்த்துக்கள்.

அன்புள்ள Ishani
நலமாக இருக்கிறீர்களா குழந்தை நலமா. அறுசுவையில் புதிதாக இணைந்துள்ள உங்களை வருக வருக என்று அறுசுவை சகோதரிகளாகிய அனைவரும் வரவேற்க்கிறோம்.

உங்களின் கேள்விக்கு என்னால் முடிந்த பதில தருகிறேன். முயற்ச்சி செய்து பார்க்கவும்.

தாய்ப்பால் குறைவது 6 மாதம் ஆகிவிட்டதால் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்னர் நிறைய தண்ணீர் அருந்திவிட்டு கொடுக்க ஆரம்பிக்கவும்.

சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும்.

பால் நீங்கள் சாப்பிடவும். காலையில் டிபன் சாப்பிட்ட பின்னாடி பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும்.

அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம்.

உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.

அப்புறம் ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.

ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.

முட்டைகோஸ், வெங்காயம் அதிகம் சேர்க்க வேண்டாம் நான் எனது குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும் சமயம் 6 மாதத்தில் டாக்டரிடம் கேட்டேன் அவர்கள் தான் முட்டை கோஸ், வெங்காயம் அதிகம் சேர்க்க வேண்டாம் என்றார்கள். வெள்ளை பூண்டும்,மீனும் அதிகம் சேர்த்துக்கொள்ள சொன்னார்கள்.

நான் சொன்னது எனது அம்மா எனக்கு சொல்லி நான் செய்து பலன் அடைந்தது நீங்களும் முயன்று பாருங்களேன்.

அதன் பிறகு ஒன்று சொல்ல மறந்துவிட்டது எப்பொழுதும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது குறைந்து விட்டதோ வராதோ என்ற எண்ணத்தில் கொடுக்க வேண்டாம். நமக்கு கண்டிப்பா கடவுள் தருவார் அதிகமாக நம் குழந்தைக்கு கிடைக்கும் என்ற எண்ணம் நம் மனதில் எப்பொழுதும் இருந்தாலே போதும் தாய்பால் கிடைக்கும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
நன்றி.

அன்புள்ள ishani

குழந்தை நலமா? பொதுவ 6 மாதத்தில் பக்க உனவு கொடுக்கலாம்.தாய்பால் அதிகம்மாக பச்சைபயிர், பலாகொட்டை, மீன், மட்டன் சாபிடலாம். இது என்னோட அனுபவம்

அன்புடன்
சங்கீதா

10 பல் பூண்டை நறுக்கி நெய்யில் வருத்து கொஞ்சம் சாதத்துடம் தினமும் சாபிடவும்
2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை தண்ணீரில் இரவே ஊறவைத்து காலையில் தண்ணீருடன் வெந்தயத்தை சாப்பிடவும்..அல்லது வெந்தயத்தை கூக்கரில் வேக வைத்து வெல்லம் தேங்காஇ கலந்து சாப்பிடவும்
பால் சிராவு என்று கேட்டால் கருவாடு விற்ற்கும் கடைகலில் கிடைக்கும்..அதனை தினம் உணவில் எடுத்துக் கொள்ளவும்..
மதர் ஹார்லிக்ஸ் போன்ர பாலில் கலக்கி குடிக்கும் பவுடர்கல் இன்று மார்கெட்டில் உள்ளது ..அது நல்ல பலன் கொடுக்கும்

தளிகா:-)

என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது நான் அவளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கி உள்ளேன் அதனால் தாய்பால் கொடுக்கும் இடைவெளி அதிகரித்துல்லது சில சமயம் 8 மணி நேரம் கூட ஆகும் அவ்வாறு செய்வது சரியா? saranyamohan

saranyamohan

தெளிவான, விரிவான பதிலுக்கும் ஆலோசனைக்கும் seyedkatheeja,sangeethavenkat, மற்றும் thalika-விற்கு எனது மனமார்ந்த நன்றி. மிகவும் பயனுள்ளதாக அமைந்தது உங்களின் பதில். குழந்தைக்கு இப்போது திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டோம் (குழந்தை உணவு முறை பற்றி தெளிவாக விளக்கிய தளிகாவிற்கு நன்றி).

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு 'விட்டமின் ட்ராப்ஸ்' தேவையா? குழந்தை மருத்துவர் எங்களின் விருப்பத்திற்கு விட்டு விட்டார்.

அன்புடன்,
இஷானி

அன்புடன்,
இஷானி

suraikaai ( bottlegourd ) , all types are keerai ( mainly agathi keerai ) helps for milk segregation

Mother's Grace.

Dear Madam, I want to type in tamil. Please help me.
Please help me

Mother's Grace.

கீழே (scroll)எழுத்துதவியை க்லிக் செய்தால் அழகாய் விளக்கமாய் எப்படி தமிழில் டைப் செய்யன்னு சொல்லியிருக்கும்..முயற்சி செய்துகிட்டே இருங்க..கஷ்டமா இருக்கும் முதல்ல..அப்ரம் நல்ல வரும்:-)

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்