Hair fall

Hi friends,

எனக்கு மிக அதிகமாக முடி கொட்டுகிறது.ஏதாவது Home Remedies தெரிந்தால் கூறுங்கள்.

வாரம் இரு முறை காய்ச்சாத சுத்தமான நல்லெண்ணெயை தலைக்கு தேய்த்து சீப்பால் தலையை நன்றாக வாரி விடவும். பிறகு 2 மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். சீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்க்கவும். தினமும் தலைக்கு தேங்காயெண்ணெய் தேய்க்கவும். தலைக்கு தேய்க்கும் தேங்காயெண்ணெய் காய்ச்சப்படாததாக இருக்கவேண்டும். மாதம் இரு முறை 5 டீஸ்பூன் வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து கடலைமாவு அல்லது சீயக்காய் தேய்த்து குளிக்கவும். செம்பருத்திப்பூ, இலை ஆகியவை முடிக்கு நல்ல கன்டிஷனர் ஆகும்.

Hai
Can u tell any tips to reduce the body heat......Rombhe suda eruku .......only after i come to singapore.....can u tell me the tips

leemacyril

leemacyril

லீமா க்ளைமேட் ட்ரையாக இருந்தால் கூட உடம்பு ஹீட் ஆகலாம்.
1. சீரகக் கஷாயம் -
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தைப் போட்டு சற்றுக் கறுப்பாக வறுக்கவும்.
வறுபட்டதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் ஒரு கப்பாக வற்றியதும் இறக்கி வடிகட்டி சிறிது வெண்ணைய் அல்லது நெய், பனங்கல்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து காலையில் பல் தேய்த்ததும் அருந்தவும்.

இதே கஷாயத்தை சீரகத்திற்குப் பதிலாக சோம்பு உபயோகித்து செய்தும் அருந்தலாம்.

2. பாதாம் பிசின் இந்தியாவில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதை வாங்கி மிளகு சைஸ் எடுத்து ராத்திரி ஊறவைத்து காலையில் பல் தேய்த்ததும் சாப்பிடவும்.

3. இரவில் படுக்கப் போகும் போது உச்சந்தலையில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

4. காய்ந்த திராட்சைப் பழம் தினமும் சிறிது எடுத்துக் கொள்ளலாம்.

5. மாலதி கூறியுள்ளதுபோல் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

6. பச்சை வாழைப்பழம் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும்.

எது ட்ரை பண்ணினாலும் கொஞ்சமாக ஆரம்பியுங்கள். ஏனென்றால் சிலருக்கு ரொம்ப குளிர்ச்சி கிச்சு, கிச்சு அதான் ஜலதோஷம் வந்துடும்.
ட்ரை பண்ணிட்டு எழுதுங்கள்
அன்புடன்
ஜெயந்தி

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி மேடம். Sorry for late reply.

Hai i usually read good housekeeping magazine...........In that they have made an research for hair......They told U should not keep oil for more than 1 hr in ur head....If u keep more than an hour ur sclap will b wet and there is a chance of hair fall.....

When ever u take head bath keep oil just for an hour and wash it.......More important u should use Conditioner .....

When v take head bath ....our hair has got pores it will open so there is a chance for hair fall....If u use conditioner it will close ur hair pores ....
More important.....While using conditioner u should not apply for ur sclap.....Just divide ur hair and apply only on the hair ......

Weekly twice u can use shampoo bath....other days just take head bath without shampoo thats good

leemacyril

leemacyril

மேலும் சில பதிவுகள்