தேதி: September 11, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - ஒரு கப்
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்
ஒரு கப் தண்ணீர்
கால் டீஸ்பூன் உப்புத்தூள்
கொழுக்கட்டை
மேல் மாவு
முதல் முறை - பச்சரிசியை களைந்து உணர்த்தி மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கால் டீஸ்பூன் உப்புத்தூள் போட்டு, தண்ணீர் கொதித்ததும் ஒரு கப் பச்சரிசி மாவை போட்டுக்கிளறவும்.
மாவு ஒட்டாமல் திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மாவை ஒரு மெல்லிய ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.
இரண்டாம் முறை - பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் நைசாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாவைப் போட்டு, கால் ஸ்பூன் உப்புத்தூள் சேர்த்து, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக் கிளறவும்.
ஒட்டாமல் வரும் வரை நிதானமாகக் கிளறவும்.
இறக்கி வைத்து மாவை ஒரு மெல்லிய ஈரத்துணியில் சுத்தி வைக்கவும்.
மேல் மாவு தயார்