கனா கானும் காலங்கள்

இந்த தொடரை பார்க்கும் பொழுது நமது பள்ளி பருவ லீலைகள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது.
நமது தர்பாரிலும் அனைவரது பள்ளி பருவ லீலைகளை பகிர்ந்து கொள்வோமா?
ஹேமா, உங்ககிட்ட நிறைய கதைகள் இருக்கும் என்று நினைக்கிரேன்.

நானே தொடங்குகிறேன் நான் செஞ்ச பல லூட்டிகள்-ல ஒன்று
நான் மூன்றாம் வகுப்பு படித்து கொன்டிருந்த போது ஒரு முறை வேடில் இருந்த காமிக் புக் ஒன்றை பள்ளிக்கு கொண்டு சென்றேன். நான் தான் க்லாஸ் லீடர். ஆசிரியர் வராத சில பாட வேளைகளில் வகுப்பை பார்த்து கொள்ள சொல்லி என்னிடம் சொல்லிவிட்டு போவார்கள். அப்படி ஒரு நேரத்தில் நான் மாணவர்களை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு அந்த காமிக் புக் ஐ எடுத்து கொண்டு எனது நண்பர்களையும் அழைத்து கொண்டு மாணவர்களுக்கு பின்னால் சென்று(லீடர்ல அதால நாங்க தப்பு செய்யலாம்) படித்து கொண்டு இருந்தோம். எங்களுக்கு மேலஎ ஜன்னல் இருந்ததை நாங்கள் மறந்துவிட்டோம்.
அந்த வழியாக வந்த வேறு ஆசிரியர் ஒருவர் தற்செயலாக ஜன்னல் பக்கம் பார்க்க.......... அடுத்து கேக்கவா வேண்டும். இனி வகுப்பில் நான் கதை புத்தகம் படிக்க மாட்டேன் என்று 100 முறை எழுதி பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வர சொல்லி விட்டார்கள்.
100 முறையாவது யாரிடமாவது குடுத்து எழுதலாம் கையெழுத்து யாரிடம் போய் வாங்குவது (அப்ப எங்களுக்கு அம்மா அப்பாட கையெழுத்து போட தெரியாதே)
அப்ப தான் எனக்கு ஒரு சூப்பர் ஐடியா வந்தது. நான் நல்லா படிக்குர பொண்ணு தான் அதால வகுப்பில் நடந்த பழைய தேர்வு தாள் எல்லம் எடுத்து அதுக்கு இடையில் பனிஷ்மென்ட் எழுதின தாளயும் வைத்து அம்மாவிடம் கொண்டு பொய் குடுத்தேன். அம்மாவும் ரெண்டு மூனு பேப்பரை பார்த்தார்கள் அனைத்திலும் நல்ல மதிப்பெண்( நல்ல படிகிர பொண்ணு தானே எப்பயும் நல்ல மதிப்பென் தான் எடுப்பேன்) அதனால் மற்ற பேப்பர் எதையும் பாக்காமலே கையெழுத்து போட்டு தந்து விட்டர்கள்.
பிறகென்ன மற்ற யாரும் கையெழுத்து வாங்காமல் வர என்னை மட்டும் கையால புடிக்க முடியல போங்க

அடப்பாவி சிந்து இதான் நீங்க அங்க சொன்ன அந்த கனா காணும் பதிவா?? :-) நான் ரொம்ப அப்பாவி சின்ன வயசுல.. என் அம்மாவை தவிர யார் கிட்டயும் போக மாட்டேனாம்.

வேலை செய்ய கஷ்டமா இருக்குனு ஒரு லேசான கயிறால ஒரு சேர்ல என் காலை கட்டி போட்டுட்டு போனா, சேரையும் இழுத்துட்டே போவேனாம்.. என்ன கொடும பண்ணிருக்காங்க பாருங்க!

எல்.கே.ஜி.ல முருகன் வேஷம் போட்டு மேடைக்கு போன உடனே அழ ஆரம்பிச்சுட்டேனாம் பயத்துல. அதை கூட முருகன் பழம் தனக்கு கிடைக்கலைனு அழறார்னு காமெடி பண்ணி விகடன்ல போட்டு அசிங்க படுத்திட்டாங்க. இதுல எங்க இருந்து குறும்பு பண்ணுறது? :-)

இப்போ தான் கனாவெல்லாம் காண வேண்டியதா இருக்கு வேலை கிடைக்கணும் அது இதுனு.. :-(

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அப்புறம் ஒரு 5ஆவது வகுப்பு போது, மேத்ஸ்ல இண்ட்ரெஸ்ட் பத்தி க்ளாஸ்ல, டீச்சர் "டைம் என்ன"னு கேட்டாங்க, அதாவது எத்தனை வருஷம்னு கணக்குல கொடுத்திருக்குனு கேட்டாங்க. நான் ரொம்ப சவுண்டா- 1.30னு சொன்னேன். க்ளாஸ் ஃபுல்லும் கொல்லுனு சிரிச்சு வெச்சுட்டாங்க. அவ்ளோ தான் வாட்ச் இருந்தா தானே இந்த பேச்சுனு வாட்சை பிடுங்கிட்டு போய்ட்டாங்க.. இத்தனைக்கும் நான் நல்லா படிக்கிறவ, குறிப்பா மேத்ஸ், அது தவிர பொதுவா எல்லா டீச்சருக்கும் என்னை பிடிக்கும். அப்புறம் அவங்க கிட்ட போய் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு வாட்சை வாங்கிட்டு வந்தேன் :-)

அப்புறம் ஒரு எக்ஸாம்ல அந்த மிஸ் வந்து நான் ஒரு கணக்கு தெரியாம முழிச்சிட்டு இருந்த அதிசயத்தை பார்த்து பாவம்னு க்ளூ கொடுத்துட்டு போனாங்களே ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்