அறுசுவையை இனி அனைவரும் பார்வையிடலாம்

அன்பு நேயர்களுக்கு,

கடந்த சில தினங்களாக அறுசுவையை பார்வையிடுதலில் தங்களுக்கு உண்டான சிரமங்களுக்கு மிகவும் வருந்துகின்றோம். எங்களது பாதுகாப்பு வளையத்தையும் மீறி சில விஷமிகள் அறுசுவையில் உண்டாக்கிய பாதிப்பின் விளைவுகளே இதற்கு முக்கிய காரணம். பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்து, மீண்டும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு முறைகளை சற்று கடுமையாக்கியுள்ளோம். விஷமிகள் அனானிமஸ் ஆக பல IP முகவரிகளில் இருந்து இதுபோன்ற சில செயல்களை செய்து வந்ததால், IP block செய்தல் என்பது எங்களுக்கு சிரமமாயிற்று. அப்படி ஒரு குறிப்பிட்ட range of addresses block செய்தால், அதனால் சாதாரண வருகையாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பிரச்சனைகளை முன்பே சரிசெய்துவிட்டோம் என்றபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக கடந்த இரண்டு நாட்கள் மட்டும் அறுசுவையை பெயர்ப்பதிவு செய்தவர்கள் மட்டுமே பார்வையிட முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தோம். இந்த நிமிடம் முதல் கட்டாயப் பெயர்ப்பதிவு விலக்கிக் கொள்ளப்படுகின்றது. வருகையாளர்கள் எப்போதும் போல் அறுசுவையை பார்வையிடலாம்.

இருப்பினும் பெயர்ப்பதிவு செய்துகொள்ளுதல் என்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் உண்டாகாது என்ற உத்திரவாதம் தருதல் மிகவும் கடினம். இணையத்தில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். ஆகவே, உங்கள் பெயர்களை தயவுசெய்து பதிவு செய்துகொள்ளுங்கள். அது எங்களுக்கும் பலவகையில் உதவியாக இருக்கும். நாளை உங்களது IP முகவரியை யாரேனும் தவறாக பயன்படுத்த முயன்றால், உண்மை என்ன என்பதை எங்களால் கண்டறிய முடியும். உத்திரவாக இல்லாமல் ஒரு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றேன். அனைவரும் பெயர்ப்பதிவு செய்யுங்கள்.

பெயர்ப்பதிவு செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் மன்றம் போன்ற உரையாடல்களில் பங்குகொள்ளுங்கள். உங்களுக்காக நேரம் செலவு செய்து ஏராளமான குறிப்புகள் கொடுக்கும் சகோதரிகளுக்கு உங்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளை பின்னூட்டங்களாக இடுங்கள். இரண்டு நாள் அறுசுவையை பார்வையிட முடியாமல் போனதும் ஏராளமானோர் கோபப்பட்டு மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கின்றனர். உங்கள் கோபத்தில் உள்ள நியாயம் எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது. இதனை நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. அதேசமயம் எங்களுடைய நியாயமான ஒரு கேள்வியையும் தாங்கள் யோசித்துப் பாருங்கள். அறுசுவை கிடைக்கவில்லை என்ற போது பொங்கி எழுந்துள்ள உங்களில் (சிலர் சகட்டு மேனிக்கு தாக்கி மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றார்கள்.) எத்தனை பேர் அறுசுவை கிடைத்தபோது அதனை வாழ்த்தியோ, பாராட்டியோ உற்சாகப்படுத்தியிருக்கின்றீர்கள்? குறிப்பு கொடுப்பவர்களுக்கு உங்களில் எத்தனைப் பேர் கருத்து தெரிவித்து இருக்கின்றீர்கள்?

குறை நிறைகளை மற்றவர்களிடம் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் இங்கே எங்களிடமும் தெரிவியுங்கள். அப்போதுதான் எங்களை நாங்கள் மதிப்பிட முடியும். தவறுகள் இருந்தால் சரி செய்துகொள்ள முடியும். உங்களுக்காக இன்னும் சிறப்பாக பணியாற்றிட எங்களுடைய வளர்ச்சி முக்கியம். எங்களுடைய வளர்ச்சிக்கு உங்களின் உற்சாகம், ஆதரவு மிக மிக முக்கியம். இந்த பரஸ்பரம் பலனடைதலில் நாங்கள் எங்கள் பங்கினை இதுவரை/இயன்றவரை சரியாய் செய்து வருகின்றோம். நீங்கள்?

அறுசுவையை பழையபடி கொண்டுவந்ததற்க்கு நன்றி பாபுண்ணா. உங்களோட வருத்தத்தில் நியாயம் இருக்கிறது. நான் பெரிசா எதுவும் செய்யலைன்னாலும் அப்பப்ப வந்து எதாவது கேள்வி,பதில் போட்டுக்கிட்டுதான் இருக்கிறேன். இனி எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து கலந்துக்கிறேன். உங்களோட உழைப்பு வீணாகாது. இன்னும் உற்சாகமா வேலை செய்யுங்க. எங்களால முடிஞ்சதை கண்டிப்பா உங்களுக்கு நாங்க செய்யுறோம்.

அன்புள்ள அண்ணா,
இப்பொழுது தான் புரிந்தது. தாங்கள் சொன்னது. குறிப்பு கொடுப்பவர்களை ஊக்கு விக்க சொன்னீர்கள் தானே!! இதைத்தானே சொன்னீர்கள்.. கண்டிப்பாக அது எல்லோருக்கும் ஒரு என்கரேஜ்மென்ட்டாக இருக்கும். நன்றி.
கண்டிப்பாக இதை அனைவரும் இனி தொடர்வார்கள்

அன்புள்ள அண்ணா,
இந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துவிட்டீர்களா? நான் முயற்ச்சி செய்யும் அனைத்து குறிப்புகளுக்கும் பின்னூட்டம் அனுப்பிவிடுவேன்,அதே போல் பல வாரம் எனக்கு அருசுவையை பார்வை இட முடியாது இருந்த போது கூட நான் யார் மேலும் கோபப்பட்டதில்லை (கடைசியில் எங்கள் ஃப்ரீ பாக்ஸ் மேல் கொஞ்சம் வந்தது)
2 நாட்க்கள் முன்பு அனுமதி மறுப்பதாக வந்தது,ஆனால் மருபடியும் சரியாகிவிட்டது,அப்பொழுதுகூட நான் ஏதோ பிரச்சினை என்று தான் எண்ணிக்கொண்டேன்!முயற்ச்சி செய்யும் குறிப்புகளுக்கு சகோதரிகள் கண்டிப்பாக பின்னோட்டம் குடுங்கள் அப்பொழுதுதான் குறிப்புகள் குடுப்பவர்களுக்கு உற்ச்சாகமாக இருக்கும்!

சகோதரிகளுக்கு,

நான் அறுசுவையில் பங்களித்து கொண்டிருக்கும் சகோதரிகளை குறிப்பிடவில்லை. இதுவரை பெயர்ப்பதிவு செய்யாதவர்கள், பெயர்ப்பதிவு செய்திருந்தும் மன்றத்தில் கலந்து கொள்ளாதவர்கள், பின்னூட்டம் என்று எதையும் கொடுக்காதவர்களுக்குதான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

நீங்களே பாருங்களேன், மொத்தம் உள்ள 5000 க்கும் அதிகமான உறுப்பினர்களில் எத்தனை பேர் மன்றத்தில் பங்கு கொள்கின்றனர் என்று? இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு. அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்.

சென்ற மாதத்தில் சென்னையில் ஒரு கண்காட்சியில், தாய்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒரு நட்சத்திர ஓட்டலின் சார்பில் வந்திருந்து, வெறும் கையினால் மாவினை பிசைந்து, உருட்டி, இழுத்து அதை நூடுல்ஸாக செய்து காட்டினார். அவ்வளவு சிரமம் எடுத்து அவர் காட்டிய நிகழ்ச்சியை காமிரா எடுத்துச் செல்லாததால் படம் எடுக்க முடியவில்லை. முதல் முறை அவர் செய்து முடித்தவுடன் யாருமே கைதட்டவில்லை. தெருவில் வித்தை காட்டுபவர்களை பார்ப்பது போல் உணர்ச்சியே இன்றி பார்த்து கொண்டிருந்தார்கள். நான் கைத்தட்ட தொடங்கிய பின்னரே ஒவ்வொருவராய் யோசித்து தட்ட ஆரம்பித்தனர். இரண்டாவது முறை சற்று தூரத்தில் இருந்து அதனை பார்வையிட்டேன். அம்முறையும் அதேதான் நடந்தது. அவர் செய்து முடித்துவிட்டு பார்வையாளர்கள் முகத்தை ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் அப்படி பார்ப்பதை பார்த்துவிட்டு, ஓ கைத்தட்ட வேண்டுமோ என்ற உணர்வு வந்து கைத்தட்ட ஆரம்பித்தனர்.

நமது மக்களுக்கு தொடங்கி வைக்க ஒரு ஆள்வேண்டும். இதுகூட பரவாயில்லை. எனது நண்பன் ஒருவன் இருக்கின்றான். யாரையாவது பாராட்டினால் உடனே அவன் சொல்வது இதுதான். "சும்மா அவனையெல்லாம் பெரிய ஆளாக்காதே.." நான் இந்த மனநிலையில் நிறைய பேரை பார்த்துவிட்டேன். பாராட்டினால் பெரிய ஆளாகிவிடுவார்களாம். அதனால் பாராட்டாதே..

மனிதர்கள்....!!!

(youtube ல் அது போன்ற சில நிகழ்ச்சிகளின் வீடியோவை நீங்கள் பார்க்கலாம். கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.

<a href="http://youtube.com/results?search_query=noodle+making" target="_blank"> Noodle making </a> )

கடந்த சில வாரங்களாகவே அறுசுவையின் பக்கங்கள் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதை உணர்ந்திருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம், சர்வர் லோடு அதிகரித்திருப்பது. அதிக வருகையாளர்கள் ஒரே நேரத்தில் பார்வையிடுவது. எங்களது server capacity க்கும் அதிகமாக இது இருப்பதால், நிறைய நேரங்களில் hang ஆகிவிடுகின்றது. பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றேன். சர்வர் பக்கம் இயன்ற அளவு fine tune செய்துள்ளேன்.

சர்வர் லோடு அதிகரிக்க மற்றொரு காரணத்தை ஆராய்ந்த போது, பக்கங்களின் சைஸ் பிரச்சனையாக இருப்பது தெரியவந்தது. பார்வையாளர்கள் எந்த பக்கங்களை அதிகம் பார்வையிடுகின்றனர், அந்த பக்கங்களின் சைஸ் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்ததில், மன்றப் பக்கங்களை அதிகம் பார்வையிடுவதும், இப்போது நிறைய மன்றத் தலைப்புகள் 90 பதிவுகளை நெருங்குவதால், அந்த பக்கங்களின் file size அதிகமாய்யுள்ளதும் தெரிய வந்தது.

பக்கங்கள் திறக்கும் வேகத்திறனை அதிகரிக்க, மற்றொரு முயற்சியாக, ஒரு பக்கத்திற்கான மன்றப்பதிவுகளின் எல்லையை 30 ஆக குறைத்துள்ளோம். இதன்மூலம் சிறிது வேகத்தை கூட்ட முடியும். தற்போது ஒரு பக்கத்திற்கு 90 பதிவுகள் என்று இருந்தது 30 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால், பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிரமத்தை பொறுத்துக்கொள்ளவும்.

(பக்கங்கள் திறப்பதில் தற்போது ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும். )

அட்மின் தம்பி அவர்களுக்கு, மன்ற தலைப்புகளில் பதியும் பக்கங்களின் எண்ணிக்கையை தாங்கள் 90 ரிலிருந்து 30ஆக மாற்றியுள்ளதை கண்டேன். நானும் ஜட்ஜஸ்ஸின் புலம்பல் நெம்பர் 5 எழுதும் போது நானும் தாங்கள் கூறியுள்ளதையே நினைத்தேன். ஆனால் அது மன்றத்தினர்களுக்கான புலம்பல் என்பதால் அங்கு குறிப்பிட வேண்டாம் என்று விட்டு விட்டேன். உங்களின் பதிவை பார்த்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. இந்த புதிய மாற்றத்தால் என்னுடைய புலம்பல் நெம்பர் 5 ஆல் ஏதாவது சிக்கல் வருமா என்று கூறவும். நன்றி.

அட்மின் கவனத்திற்கு: இந்த மாற்றத்தால் பக்கங்களை திருப்புவதில் எடுக்கும் நேரம் குறைந்துள்ளது. ஆனால் மீண்டும் மன்றத்திற்கோ, முகப்பிற்கோ போக பழையபடியே நீண்ட நேரமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனோகரி அக்கா அவர்களுக்கு,

இந்த 30 பக்கம் என்ற அளவு தற்காலிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏதேனும் பெரிய முன்னேற்றம் தெரிகின்றதா என்பதை பரிசோதிப்பதற்கு.

சிறிது காலம் கழித்து தேவைக்களுக்கு தகுந்தபடி மறுபடியும் மாற்றி கொள்ளலாம். நீங்கள் அங்கு தெரிவித்திருந்த ஆலோசனையால் இதற்கு பாதிப்பு இல்லை.

ஒஹோ சரீங்க தம்பி. ஆலோசனையால் பாதிப்பு எதுமில்லை என்றால் ஒகே. தங்களின் அயராத உழைப்பை என்றும் எண்ணி வியக்கும் அன்பு அக்கா. நன்றி.

சர்வரில் மீண்டும் ஏராளமான பிரச்சனைகள். அதிக எண்ணிக்கையிலான வருகையாளர்கள், அதிக அளவிலான resourceச் and CPU usage என்று கடந்த சில வாரங்களாகவே நமது சர்வர் திணறிவருகின்றது. hosting provider பக்கமிருந்தும் நமக்கு எச்சரிக்கை வந்துள்ளது. இதன் தொடர்ச்சியான வாக்குவாதத்திற்கு பின்னர், புதிய சர்வருக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கின்றோம். நமது சர்வீஸ் இன்னும் சில மணி நேரங்களில் துண்டிக்கப்படும் என்று தெரிகின்றது. அதன்பிறகு அறுசுவையை நாங்கள் வேறு சர்வருக்கு மாற்றும் வரை வருகையாளர்களால் பார்வையிட இயலாது போகலாம். சிரமத்திற்கு மிகவும் வருந்துகின்றோம்.

அட்மின் அண்ணா இன்று மதியத்திற்குப் பிறகே அறுசுவையில் பதிவு செய்வது சிரமமாகத்தான் இருந்தது...பிரச்சனை தீர்ந்து அறுசுவை மீண்டும் விரைவில் கிடைக்க நானும் ப்ரார்த்திக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்