மனோகரி அவர்களிடம் ஆலோசனை

நானும் ரொம்ப நாளா பாத்துட்டேன். மனோகரி அவர்களிடம் யாரும் கேள்வியே கேட்பதில்லை. அவருடைய பிஸியான அலுவல்களிடையே எங்கே நாம் கேக்கும் கேள்வியை அவர் பார்ப்பாரோ என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் என் நினைக்கிறேன். ஆகவே அவரிடம் ஆலோசனை பெற ஒரு த்ரெட்டை தொடங்கினால்... எப்படி என் ஐடியா? அவரிடம் ஆலோசனை பெற விரும்புவோர் இங்கே கேள்வி கேட்டால் அவர் நேரம் கிடைக்கும்போது வந்து பார்வையிட வசதியாக இருக்கும்.
ஆகவே இதன் மூலம் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு சொல்லிக்கொள்வது என்ன வென்றால் உங்கள் கேள்விக் கணைகளை மனோகரி அவர்களை நோக்கி இங்கே வீசுங்கள். நன்றி...

மனோகரி அக்காவிற்கு (மனோஹரி, மனோகரி எது சரி)
யாரிந்த அதிகப்ரசங்கி என்று கேக்கரீங்களா? நான் தான் வின்னி என்கிற வானதி. உங்களுக்கு என்ன தெரியாது, ஆனா எனக்கு உங்கள நல்லா தெரியும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதானாலும் சரி, உங்கள் கருத்தை எடுத்துரைப்பதானாலும் சரி உங்களுக்கு நிகர் நீங்கள்தான். உங்களிடம் கேக்க நானும் ஒரு கேள்வி வைத்து இருக்கிறேன். அப்புறமா உங்க கிட்ட கேக்கிறேன். நன்றி

நேரமில்ல நேரமில்லைன்னு சும்னாங்காட்டியும் சொல்லிக்கினு ஓரமா.... நின்னு வேடிக்கைப் பார்த்துக்கினு இருந்தேன், அதை தெரிஞ்சிக்கினு வெச்சிட்டாங்கையா........ ஆப்பூ.........வானதி தாயே இப்படி தனியா புலம்புர அளவுக்கு மாட்டிவுட்ட நீங்க....நீடூழி வாழனும் தாயே.... நீடூழி வாழனும்.

இப்படிக்கு
மனோகரி.

சிரிப்பு தான் போங்க..உங்க எழுத்து நல்ல இளமையா இருக்கு... முதல் நோன்பு இனிதாய் முடிந்து இப்பா வயிரு ஃபுல்லா இருக்கேன்..பிள்ளைகள் எங்கே..என்னாச்சு பிசினெஸ்?ஓரமா நின்னிகிட்டு என்ன பன்ரீங்க??

தளிகா:-)

மனோகரி மேடம்,
இங்கு குளிர் ஆரம்பித்து விட்டது. அங்கு எப்படி உள்ளது? Heater Billஐ கட்டுப்படுத்த ஏதாவது வழி சொல்லுங்கள். நன்றி.

ஹலோ தளிகா ஸ்வீட்டி எப்படி இருக்கீங்க? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துக்கள்.குழந்தை ரீமாவிற்கு எனது ஆசீர். நானும் அதை எழுதும் பொழுது சிரித்துக் கொண்டே தான் எழுதினேன். நேரம் என்பது நாமாக பார்த்து ஒதுக்குவது தானே. என்னைப் பொருத்தவரையில் நேரமில்லை என்பதற்கு மனமில்லை என்று தான் கூறுவேன். கொஞ்ச நாட்களாக எதிலும் ஈடுபாடில்லாமல் இருந்தேன் என்பது என்னவோ உண்மை. அப்பொழுதெல்லம் அறுசுவையைப் பார்வையிடுவேனே தவிர எழுத மனமில்லாமல் இருந்தேன், அதைத் தான் ஜோக்காக குறிப்பிட்டேன்.மற்றபடி அறுசுவை எனது வாழ்க்கையிலும் ஒன்றாகிப் போன ஒன்று. பிஸினஸ் எதிர் பார்த்தபடியே போய்க் கொண்டிருக்கின்றது. பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றுள்ளார்கள். விசாரிப்புக்கு மிக்க நன்றி.மீண்டும் சந்திப்போம்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன், இரு வாரமும் தொடர்ந்து நீங்களே அறுசுவை அரசி பட்டத்தை தட்டி சென்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள். மன்றத்தில் அதிகமாக பதிவுகள் போட உங்களை அடிச்சுக்க இனி அறுசுவையில் யாராவது (புதிய நபர்)பிறந்து தான் வரனும். பட்டங்களை தக்க வைத்துக் கொள்ள எதற்கும் கொஞ்சம் உஷாராகவே இருங்கள்.

ஹலோ வினோ டார்லிங் எப்படி இருக்கின்றீர்கள். உண்மை தான் நான் கூட நேற்று மாலை ஃபர்ன்னஸ்ஸை சிறிது நேரம் ஓடவிட்டு நிறுத்தினேன்.குளிர் காலத்தில் அவ்வாறு நிறுத்த முடியாது ஆனால் வெப்பத்தின் அளவைக் குறைத்து வைத்து நாம் வீட்டில் உடுக்கும் ஆடைகளை லேயர்ஸ்ஸாக போட்டுக் கொள்ளலாம். அல்லது கம்பளியாலான ஆடைகளை பயன்படுத்துவதால் குளிரால் பாதிப்பில்லாமல் ஓரளவிற்கு காஸ் பில்லைக் குறைக்கலாம்.மேலும் ஃபர்னஸ்ஸை போடுவதற்கு முன்பு அதிலுள்ள பழைய பில்டரை நீக்கிவிட்டு புதியதாக மாற்றி விடுங்கள். அதன் பிறகு மீண்டும் மூன்று அல்லது நான்கு மாதம் கழித்து மாற்றி விடுங்கள். மேலும் கதவு ஜன்னல்கள் நன்கு இன்சுலேட் செய்யப்பட்டு அதன் இடுக்குகளிலிருந்து குளிர் காற்று உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி நான் வேறெதுவும் செய்வதில்லை ஆனாலும் மாதாமாதம் அது பாட்டுக்கு காஸ் பில் எகிறும்.ஒகே டியர் நன்றி மீண்டும் சந்திப்போம்.

மனோகரி மேடம் அவர்களுக்கு,
வணக்கம்.உங்களின் பதில்களை பார்த்தவுடன்,மனம் விட்டு சிரித்து விட்டேன்.என் குடும்பக்கவலைகளையெல்லாம் அறுசுவையின் அரட்டை
கச்சேரி படிப்பதிலும்,கலந்துகொள்வதிலும்தான் மறந்து
சிறிது நிம்மதி காண்கிறேன்.உங்களின் பல பதில்களின் மூலம் நானும் பயனடைந்து இருக்கிறேன்,நன்றி பலப்பல.
அன்புடன் விமலா.

மனோகரி அக்கா அவர்களுக்கு,
எப்படி இருக்கீங்க? உங்க குழந்தைகள் அனைவரும் நலமா? நீங்க சும்மனாங்காட்டியும் வேடிக்கை பார்த்துக்கினு இருந்தா நாங்க சும்மா விட்டுடுவோமா? விடமாட்டோம் உங்கள.
அக்கா, வாணி எங்கிட்ட ரொம்ப நாள் முன்ன ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க. நான் ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன். அப்பவே நினைத்தேன் இதை உங்களிடம் கேட்டு உங்கள் ஆலோசனையை தெரிந்து கொண்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று. ஆகவே கீழே எங்க கேள்வி பதிலை பேஸ்ட் செய்கிறேன். இதற்கு உங்கள் ஆலோசனைய நீங்க உங்களுக்கு முடியும்போது பொருமையாக கொடுத்தால் போதும். நன்றி

அன்புள்ள வானதி,
ஆகஸ்டு 13, 2007 - 6:05pm - வழங்கியவர் Mrs.VaniRamesh
சாரி, ரொம்ப லேட்டா ரிப்லை பண்ணுவதற்க்கு...நீங்க குடுத்த இன்ஃபர்மேஷன் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லாக இருந்தது...கொஞ்சம் என்னோட பயம் குறஞ்சது...

எனக்கு இன்னொரு சந்தேகம்...இங்க படிக்கற குழந்தைகளுக்கு நம்ம கல்சர் எல்லாம் இருக்காது...அவங்க இந்த ஊருல இருக்கறப்போல ஆயிடுவாங்க-ன்னு சொல்றாங்க...இது நிஜமா? நீங்க இங்க நிறைய காலமா இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்...அதான் கேக்கறேன்...

நன்றி...

அன்புள்ள வாணி,

எப்படி இருக்கீங்க? நீங்க கேட்டது ஒரு நல்ல கேள்வி. நான் இங்க ஒரு 8 வருஷமா இருக்கேன். நாங்க இங்க இருக்க இடத்தில் இந்திய பாபுலேஷன் கம்மி. அதனால் அமெரிக்க நண்பர்களே அதிகம். எல்லா கல்சர்களிலுமே நல்ல, கெட்ட விஷயங்கள் உள்ளன.
இங்கு அமரிக்கர்களிடமும் பல நல்ல பழக்கங்களை பார்த்துள்ளேன். அம்மா அப்பாவை மதிப்பது, பெரியவர்களிடம் மரியாதையாக பேசுவது, அவர்கள் வேலையை தானே செய்வது, வயதானவர்களை நடத்தும் விதம் இப்படி பல. நம் ஊரில் வயதானவர்களை நடத்தும் முறையைப்பாத்து நான் நொந்து போயிரிக்கிறேன். அப்புரம் இந்த டிவி, சினிமா கொடுமை அதுக்குமேல. இங்காவாவது ரேட்டிங் இதையெல்லாம் ஒழுங்கா கடைபுடிக்கராங்க., அதவச்சு நம்மளும் கன்ட்ட்ரோல் பன்னலாம். ஆனா அங்க சின்ன பசங்க சர்வ சாதாரணமா எல்லாத்தையும் பாக்கராங்க. ஆனா விருந்தோம்பல்னு தமிழ்ல ஒரு அழகான வார்த்தையே இருக்கு. இங்க அப்பாயின்மென்ட் இல்லாம இவங்கள பாக்க முடியது இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.

குழந்தைகளுடன் நிறைய நேரம் குடும்பமாக செலவிட வேண்டும். ஊருக்கு பேசும்போது இவர்களையும் பேச வைக்க வேண்டும். முடிந்தபோது இந்தியா போக வேண்டும் . இவர்கள் வளர வளர யாருடன் நண்பர்களாயிருக்கிரார்கள் என்பது முக்கியம். அமரிக்க அம்மாக்களும் நம்மைப்போல்தான் கவலைப்படுகிறர்கள். என்னிடம் நிறைய பேர் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். நண்பர்களின் பெற்றோரையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

என்னைப்பொருத்தவரை நம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதில் நம் பங்கும் உள்ளது. அவர்கள் சிறு வயது முதல் நாம் எங்கிருந்து வந்தோம், எதற்காக வந்துள்ளோம் என புரியவைக்க வேண்டும். என் பையனிடம் படிப்புக்காகத்தான் இங்க இருக்கோம் என பேச்சுவாக்கில் சொல்வோம். அவர்களுக்கு பிடித்த துறையில் ஒரு ஈடுபாட்டை உண்டாக்கினால் ஒரு குறிக்கோளை நோக்கி போக வசதியா இருக்கும். எல்லாத்துக்குமேல் ஒரு நம்பிக்கைதான்.
இதைப்பற்றி கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் இருந்தால் சகோதரிகள் யாரேனும் கூறவும். அனைவருக்கும் பயன்படுமே நன்றி...

மேலும் சில பதிவுகள்