பருப்பு புளிக்கறி

தேதி: September 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2 கப்
கத்திரிக்காய் - 2
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
புளி - 1 நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து


 

பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக்கவும்.
தண்ணீரில் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கத்திரிக்கயை வேக விடவும்.
தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நீர் சேர்த்து மையாக அரைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பு, அரைத்த மசாலா, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
தாளிக்க சொன்ன பொருட்களை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கவி இதை எதனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பக்க உணவாகவா அல்லது சாதத்துடன் கலந்து(பிசைந்து) சாப்பிடவா?

சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.எங்கள் ஊரில் கல்யாணத்திற்கு முந்திய நாள் இதை செய்வோம்.குழம்பு கெட்டியாக இருக்க கூடாது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி இதை ரொம்ப நாளாகவே செய்ய நினைத்து இன்றுதான் செய்தேன். இதோ திவ்யமாக சாப்பிட்ட கையோடு பின்னூட்டம் தருகிறேன். சூப்பராக இருந்தது. ஆஃபீஸிலிருந்து(என் ஆத்துக்காரர்) எனக்கு பின்னூட்டம் வந்தாச்சு, சூப்பருன்னு. நன்றி கவி.

கவி,
பருப்பு புளிக்கறி க்கு-என்ன சைட் டிஷ் நல்லா இருக்கும்?கொஞ்சம் சொல்லுங்களேன்...

ஹாய் விஜி பருப்பு புளிக்கறியொடு எந்த வகை பொரியலும் நன்றாக பொருந்தும்.என் குறிப்பிலுள்ள வெங்காயம் மிளகாய் பச்சடியும் பொருத்தமாக இருக்கும்.அப்பளமும் ஊறுகாயும் கூட போதும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி,
பருப்பு புளிக்கறியொடு உருளைக்கிழங்கு வறுவல் செய்தேன், நல்லா இருந்தது,நன்றி கவி