மஞ்சள் நீராட்டு விழா

அன்பு நேயர்களே இந்த தலைப்பு ஆன்மீகத்தோடு சம்பந்தமில்லை என்றாலும் நமது தமிழ் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் முக்கியமாக நாகரீக வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் பதிவைப் போட முடிவுச் செய்தேன்.

அதாவது முன்பெல்லாம் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் விசயத்தை மிகவும் கோளாகலமாக ஊரைக் கூட்டி உற்றார் உறவினரோடு கொண்டாடுவார்கள். இப்பொழுதும் கிராமங்களில் இந்த சடங்குகள் நடக்கின்றது. ஆனால் நகர் புறங்களில் சுத்தமாக கிடையாது என்று நம்புகின்றேன்.ஆகவே தமிழச்சிகளுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட இந்த சடங்கு நமது தமிழ் சமுதாயத்தில் அழிந்து வருவது குறித்து உரையாடலாம் என்று நினைக்கின்றேன். அந்தக் காலத்தில் இந்த சடங்க்கை ஏன் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வேலையின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழும் பெற்றோர்களால் இந்த சடங்குகளை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை எந்த இடத்திலும் நடத்தலாம்.ஆகவே உண்மையான நடை முறையிலான விசயங்களைப் பற்றி உரையாடலாம்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒரு ஆரோக்கியமான சடங்காகவே நினைக்கின்றேன். மற்றவர்களைப் பற்றியோ வேறு ஏதாவது காரணத்தாலும் இந்த சடங்கை அழியாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழச்சியின் கடமை என்று தான் கூறுவேன். இப்பொழுது பெற்றொர்கள் இந்த சடங்கைத் தவிர்ப்பதற்கு என்ன காரணம், இந்த சடங்கு இன்றைய காலகட்டத்தில் அவசியமா? அவசியமில்லையா போன்ற விசயங்களை நேயர்கள் அனைவரும் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

மனோகரி மேடம்,
வணக்கம்.
நீங்கள் எடுத்துள்ள தலைப்பு வெரி இன்ட்ரெஸ்டிங். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு பெண் வயதுக்கு வந்த விசயம் ரகசியமாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். அதனால் இந்த மஞ்சள் நீராட்டு விழாவை யாரும் நடத்துவதில்லை.

அன்புடன்,
காஞ்சனா

மேடம்,

இந்த சடங்கினால் நகரில் பல ப்ரெச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனக்கு இந்த சடங்கே பண்ணலை. நானும் அதை விரும்பல. இந்த சடங்கு செய்வதனால அதற்கப்புறம் எல்லார் மத்தியிலும் சின்ன பசங்களோட விளையாடினா தப்பு, எல்லர் எதிர்ல வருவது தப்பு, இந்த மாதிரி எல்லோரும் பேசுவாங்க. எந்த சடங்கும் இல்லாம, வெளியில சொல்லாம இருந்த எந்த ப்ரெச்சனையும் இல்ல. நாங்க பழைய படி எப்பவும் போல சந்தோஷமா இருக்கலாம். அப்புறம் இந்த ரோட் சைட் ரோமியோஸ்னால வேற ப்ரெச்சனை. இதனால யாருக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாதவரைக்கும் நிம்மதியா படிக்கலாம். விரும்பின விளையாட்டை விளையாடலாம். இதுபோல இன்னும் நிறைய.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மனோகரி மேடம்,அந்த காலங்களில் தகவல் தொடர்பு வசதிகள் அவ்வளவாக கிடையாது.மேலும் திருமணங்கள் பெரியவர்கள் பார்த்து நடத்தியதுதான் அதிகம்.அப்போது தங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள் என்பதை ஊருக்கு சொல்வதற்காகவே இந்த சடங்குகள் நடத்த பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.ஆனால் இன்று அப்படி இல்லையே.ஏனென்றால் இப்போது எட்டு ஒன்பது வயதிலேயே பெரியவர்களாகி விடுகிறார்கள்.அப்போது போய் சடங்கு அது இது தேவையில்லாமல் குழந்தைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாமே.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டியர் காஞ்சனா எப்படி இருக்கின்றீர்கள்?இந்த தலைப்பில் பங்கு கொண்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியிருப்பதுப் போல் இந்த விசயத்தை ரகசியமாக வைத்திருக்கத்தான் விரும்புகின்றார்கள் என்பது உண்மையே. இன்றைய காலக் கட்டத்தில் தமிழர்கள் சீமந்தம் முதல் பெரியவர்கள் விட்டுச்சென்ற அனைத்து சடங்குகளையும் ஒரளவிர்க்காவது செயல்படுத்த முனையும் பொழுது இந்த சடங்கு மட்டும் ரகசியமான ஒன்றாகிப் போனது ஏன்? எவ்வளவு நாளைக்கு ரகசியமாக வைத்திருக்க முடியும்?என்னைப் பொருத்தமட்டில் இது பெற்றோர்களின் அலட்சியபோக்கு என்று தான் கூறுவேன். இதைப் பற்றி மேலும் கருத்து கூற வேண்டுமென்றால் கட்டாயமாக பகிர்ந்துக் கொள்ளவும். நன்றி.

ஹலோ டியர் ஹர்ஷினி எப்படி இருக்கீங்க? இந்த தலைப்பைப் பற்றிய தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தங்களின் கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்து விட்டது. காரணம் அது பெண்கள் வயசுக்கு வருவதே ஒரு வேதனைக்குரிய கண்ணோட்டமாக இருந்தது. இதனால் பல சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது என்று குறிப்பிட்டீருந்தீர்கள். உடல்ரீதியாக ஏற்ப்படும் சங்கடங்கள் என்றால் சரியே, ஆனால் தாங்கள் கூறியிருந்த சங்கடங்கள் அந்தக் காலத்தில் வயசுக்கு வந்த பெண்கள் பள்ளிகூடத்திற்கே அனுப்பபடாத காலகட்டத்திற்கு வேண்டுமானால் பொருந்தும், அவர்கள் மேலும் தங்களின் படிப்பை தொடரவாவது மறைத்து வைத்தல் உதவியிருக்கும் என்றே நினைக்கின்றேன்.

பொதுவாக ஒரு பெண் குழந்தை வயசுக்கு வந்துவிட்டாலே தானாகவே அவளிடம் அவளுக்குரிய பெண்மை தனம் வந்துவிடும். இது மற்றவர்களுக்கு தெரிந்திருந்தாலும், மறைத்திருந்தாலும் அந்த மென்மையை யாராலும் மறைக்க முடியாது அல்லவா?. மேலும் ரோட் சைட் ரோமியோஸ்னால என்று குறிப்பிட்டிருந்தது குமரி முதல் கிழவி வரை அவர்களுக்கு எந்த காலத்திலும் இருந்து வரும் பிரச்சனை தான். இதையேல்லாம் தாண்டி தானே பெண்கள் எல்லாவிதத்திலும் சிறந்து விளங்க்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சியால் எந்த பெண்ணுக்கும் சமுதாயம் இழிவைத் தேடித் தராது என்பது என் கருத்து. இதனால் ஒரு பெண்ணிற்கு நல்ல தைரியம் தான் வருமே ஒழிய ரகசியமாக வைத்திருக்கும் பொழுது உண்டாகும் மன உளைச்சல் இருக்கவே இருக்காது, அந்த தைரியம் பெற்றோர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் கிடைத்து விடுவதால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவள், பழையபடி சந்தோசமாக இருக்க முடியுமே தவிர மறைப்பதால் உண்டாகும் மன உளைச்சல்களுக்கு இடமே இருக்காது.

மேலும் இது மட்டுமல்ல எந்த விசயமாக இருந்தாலும், அதை மறைப்பதில் ஒரு பொழுதும் நிம்மதி கிடைக்காது அந்த விசயத்தோடே நமது நிம்மதியும் தொலைந்து விடும் என்பது எனது நம்பிக்கை. ஆகவே நாம் இந்த சடங்கை தவிர்ப்பது நமது அலட்சிய போக்கு தானே ஒழிய இதனால் சஙகடங்கள் இல்லை என்றே கூறுவேன். இதில் மாற்றுக் கருத்து இருந்தால் கட்டாயம் கூறவும். மேலும் உரையாடலாம். நன்றி.

டியர் கவிசிவா எப்படி இருக்கீங்க? உங்கள் அனைவரின் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. மன்றத்தில் எந்த தலைப்பாகட்டும் அதில் ஆர்வமாக கலந்துக் கொண்டு தங்கள் கருத்துக்களை கூறும் உங்களைப் போன்றவர்களால் தான் அறுசுவை மாபெரும் தளமாக வளர்ந்து வருவதில் ஆச்சரியமில்லை.

இனி இந்த தலைப்பைப் பற்றி பேசலாம். தாங்கள் கூறியிருப்பதுப் போல் இந்த காலத்தில் எட்டு ஒன்பது வயதிற்கெல்லாம் குழந்தைகள் பூப்படைந்து விடுகின்றார்கள். ஆனால் அதற்கும் சடங்கிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்றைகிருந்தாலும் ஒரு நாளைக்கு இந்த நிகழ்ச்சி நடத்தத் தானே வேண்டும். அது ஒரு சில வருடங்கள் முன்பாக நடத்தப்படுவதில் என்ன மாற்றத்தை உண்ர முடியும் என்று தெரியவில்லை.

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணங்களுக்கு அந்த குடும்பங்களின் வளர்ச்சியும் அவர்களுடனேயே ஒன்றி இருப்பதால் அவர்களுக்கு தகவல் தொடர்பு வசதிகள் இருந்திருந்தாலும், அது எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியிருக்கும் என்று தெரியவில்லை. மேலும் எந்த விசயத்தைப் பற்றியும் தங்கள் ஊருக்கு தெரிவிப்பதற்கு தகவல் தொடர்பு தேவைப்பட்டிருக்காது. நேரிடையாகவே சென்று தான் அழைத்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். அதைவிட அந்த காலங்களில் எந்த வீட்டில் எந்த குழந்தை பிறந்துள்ளது போன்ற விசயங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் அறிந்து வைத்திருப்பதால் பெண் தேடுபவர்களுக்கு அதிகம் சிரமம் இருந்திருக்காது என்றே நினைக்கின்றேன்.

இன்னும் கூற வேண்டுமென்றால் குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்து விட்டாலே இவள் இவனுக்கு தான் என்று பெரியவர்களே பேசி முடிவெடுத்து விடுவார்கள். ஆகவே பெரும்பாலான அந்தக் காலத்து திருமணங்கள் சொந்தங்களுக்குள்ளேயே தீர்மானித்து நடத்தப்பட்டு விடும். அவ்வாறு முறை வழியில் இல்லாதவர்கள் மட்டும் தான் அந்நிய குடும்பங்களில் இருந்து பெண் எடுப்பார்கள் என்று அறிந்து வைத்திருந்தேன்.

என்னைப் பொருத்தவரையில் ஒரு பெண் வயசுக்கு வரும் பொழுது முதல் முதலாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றத்தை ஒரு நிலைப் படுத்துவதற்காக குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு நல்ல ஓய்வையும், உடல் வலு பெறுவதற்கு அடிப்படையான சத்துள்ள உணவையும் அளித்து, அவளை நோய் கிருமிகள் அண்ட விடாமல் பாதுகாத்து, அவளை இந்த சவால் நிறைந்த உலகத்துக்கு தயார் படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் மகத்துவமாக கருதுகின்றேன். ஆகவே இந்த நிகழ்ச்சி ஒவ்வொறு பெண்மணியும் அனுபவித்து கொண்டாடப் பட வேண்டிய நிகழ்ச்சியாகும்.

ஆகவே நமது முன்னோர்களால் பெண்மைக்கு அளித்த இந்த கெளரவத்தை அறிந்து, இந்த இனிமையான நிகழ்ச்சியை தொடர்ந்து பெண் குழந்தைகள் இருக்கும் எல்லா இல்லங்களிலும் குறைந்த பட்சம் நமது நாட்டில் வாழ்பவர்களாவது அதன் அருமை தெரிந்து நடத்தபட வேண்டும் என்பது எனது ஆவல் என்று கூறி முடிக்கின்றேன். மேலும் கருத்து கூற வேண்டுமானால் தயங்காமல் கூறும் படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

பூப்பு நீராட்டு விழா கன்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு சடங்கு. இது ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்க்கையில் செய்யும் முதல் சடங்கு. இதன் மூலம் நாம் அந்த பெண்ணுக்கு சமுதாயத்தில் ஓரு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று அர்தம். அதர்காக தான் இந்த சடங்கே செய்கிறோம்.

அன்புடன்
சங்கீதா

மனோஹரி மேடம் எப்படி இருக்கீங்க. உங்கள் வேலைகளுக்கு இடையேயும் ஒவ்வொருவருடைய கருத்துகளுக்கும் பொறுமையாக பதில் எழுதியிருக்கிறீர்கள் .அதற்கு முதலில் எனது நன்றி.
எட்டு ஒன்பது வயதில் பூப்படையும் குழந்தைகள்
உடலளவில் பெரியவர்களாகியிருக்கலாம்.ஆனால் மனதளவில் இன்னமும் குழந்தைகளே.அப்படியிருக்கும் போது சடங்கு என்று அந்த குழந்தையை சில நாட்கள் தனிமை படுத்தி வைத்து,பின்னர் ஊரை கூட்டி சடங்கு செய்து இதெல்லாம் வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.
கண்டிப்பாக அந்த குழந்தைக்கு ஓய்வும் சத்தான உணவுகளும் தேவை.அதற்கு தனிமை படுத்த தேவையில்லை.தாய் குழந்தைக்கு புரிய வைத்து எல்லாவற்றையும் கவனித்து கொண்டால் போதுமே.
ஒருவேளை சடங்கு என்பது கட்டாயம் என்றாலும் வீட்டில் வைத்து செய்தால் போதுமே.எல்லாரையும் அழைக்க வேண்டிய கட்டாயம் இல்லையே.
நான் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.போஸ்டெர் ஒட்டி சடங்கு நடத்தி அந்த குழந்தை மறுநாள் வெளியில் செல்லும் போது ஒருமாதிரி சங்கடத்துடன் தலையை குனிந்து கொண்டே செல்லும்.இன்னமும் மதுரை போன்ற நகரங்களில் கூட இது நடக்கிறது.இதெல்லாம் தேவையா??
வீட்டோடு நிறுத்தி கொள்ளலாமே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சடங்கு தேவையா? சில பிரிவு மக்களின் பழக்கம் பிள்ளை வீட்டார்தான் பெண்ணைத்தேடிக்கொண்டு போக வேண்டும். எனவே எங்கள் வீட்டில் பெண் இருக்கிறது என்று அறிவிப்பதற்காகத்தான் இந்த சடங்குகள் செய்தார்கள். ஆனால் இன்று தான் நெட்டிலேயே திருமணம் நிச்சயம் செய்து விடுகிறார்களே. கவி சொன்னது போல் வீட்டிலேயே செய்து விடலாமே. என் பெண்ணுக்கு அப்படித்தான் செய்தோம். எனக்கு ஒரு சந்தேகம். இன்று எவ்வளவு மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது போன்ற சடங்குகள் என்றோ ஒரு நாள் யாராலோ ஆரம்பிக்கப்பட்டதாகத்தானே இருக்க வேண்டும். அதே போல் புகுந்த வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு பிறந்த வீட்டு சீர் வந்தால்தான் மதிப்பு. இது கூட காரணமாக இருக்கலாம் இது போன்ற சடங்குகள் ஆரம்பிக்கப்பட.

இன்று பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்து விடுகிறார்கள். சடங்கு நடத்துவதை விட அவர்களுக்கு இதைப்பற்றிய அறிவைப் புகட்டுவது அவசியம் என்று கருதுகிறேன்.

அன்புடன்
ஜெயந்தி

தேவையே இல்லை..நம்ம கலாச்சாரம்,பண்பாடு,பழக்க வழக்கம்னு பேசரதை விட இன்டிவிஜுவல் விஷ் இதில் முக்கியம்....அப்படி குழந்தை ஒரு வேள ஆசப் பட்டா வேனா செய்லாம் தப்பில்லை...ஆனால் கன்டிப்ப குழந்தைட்ட கேட்டா அது தர்மசங்கடத்தை உன்டு பன்னும்னு தான் சொல்லும்....நம்ம முன்னோர்களை ஃபால்லோ பன்னுவதுக்கு எதுக்கு குழந்தைகளை ஷேம் ஆக்கனும்...என்னக் கேட்டா வீட்டில் கூட விசேஷம் வேன்டாம்...அம்மாவும் பொண்ணும் மட்டும் உக்காந்து அதைப் பற்றி தெளிவா உடல்ரீதியாக என்னென்ன மாற்றம் உண்டானதுன்னு அதற்குப் பின் என்னென்ன மாதிரி ப்ரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளலாம்னு பேசினால் அதை விட பெற்றோருக்கு குழந்தைக்கி செய்து கொடுக்க வேற பெருசா ஒண்ணும் தேவையில்லங்கரது என் கருத்து.

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்