மஞ்சள் நீராட்டு விழா

அன்பு நேயர்களே இந்த தலைப்பு ஆன்மீகத்தோடு சம்பந்தமில்லை என்றாலும் நமது தமிழ் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் முக்கியமாக நாகரீக வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் பதிவைப் போட முடிவுச் செய்தேன்.

அதாவது முன்பெல்லாம் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் விசயத்தை மிகவும் கோளாகலமாக ஊரைக் கூட்டி உற்றார் உறவினரோடு கொண்டாடுவார்கள். இப்பொழுதும் கிராமங்களில் இந்த சடங்குகள் நடக்கின்றது. ஆனால் நகர் புறங்களில் சுத்தமாக கிடையாது என்று நம்புகின்றேன்.ஆகவே தமிழச்சிகளுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட இந்த சடங்கு நமது தமிழ் சமுதாயத்தில் அழிந்து வருவது குறித்து உரையாடலாம் என்று நினைக்கின்றேன். அந்தக் காலத்தில் இந்த சடங்க்கை ஏன் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வேலையின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழும் பெற்றோர்களால் இந்த சடங்குகளை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை எந்த இடத்திலும் நடத்தலாம்.ஆகவே உண்மையான நடை முறையிலான விசயங்களைப் பற்றி உரையாடலாம்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒரு ஆரோக்கியமான சடங்காகவே நினைக்கின்றேன். மற்றவர்களைப் பற்றியோ வேறு ஏதாவது காரணத்தாலும் இந்த சடங்கை அழியாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழச்சியின் கடமை என்று தான் கூறுவேன். இப்பொழுது பெற்றொர்கள் இந்த சடங்கைத் தவிர்ப்பதற்கு என்ன காரணம், இந்த சடங்கு இன்றைய காலகட்டத்தில் அவசியமா? அவசியமில்லையா போன்ற விசயங்களை நேயர்கள் அனைவரும் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

இப்பொழுது நாம் படித்து விட்டோம், அயல் நாட்டில் உள்ளோம் அதனால் நமக்கு புரிகிறது. ஆனால் நம் கிராமத்து மக்களுக்கு தன் பெண்ணை கரையேற்ற வேண்டும் நாலு பேருக்கு பிடிக்க வேண்டும் என்பதை எப்படி புரியவைக்க ?? இதுவே அவர்களுக்கு வழி! எனக்கும் இது நடந்தது. ஆனால் என் பெற்றோர் கூறியதை இங்கே கூறுகிறேன். எங்களுக்கோ ஒரு பெண் அதன் திருமணத்திற்கு முன் ஒரு தேவதை போல் அலங்காரம் பண்ணி பார்க்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் என்றார்கள். இதையும் ஆதரிக்க வேண்டியுள்ளது தானே!!
முன் :அப்பா,அம்மாவுக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
பின்: கணவருக்காக அப்பா,அம்மாவையும் தியாகம் பண்ண வேண்டியுள்ளது

இதையும் தானே நம்மில் பலபேர் செய்கிறார்கள்.
எல்லா விசயமும் எதற்காவது தான் உள்ளது,,,

"அப்பா,அம்மாவுக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
பின்: கணவருக்காக அப்பா,அம்மாவையும் தியாகம் பண்ண வேண்டியுள்ளது "

சரியான கருத்து..நல்லதை வரவேற்போம்

அந்த காலத்தில் எதற்கோ ஆரம்பித்த சடங்குகள் எல்லாம் இன்று அதே அர்த்ததில் செய்யப்படுவதில்லை. இன்று நான் 10,000 ரூபாய் செலவு செய்து இதை நடத்தினால், எனக்கு எவ்வளவு வரவு வரும்(அன்பளிப்பாக வரும் பொருட்களினால்) என்று நினைத்தே பெரும்பாலோனர் இதை நடத்துகிறார்கள்(நான் அனைவரும் இவ்வாறு என்று சொல்லவில்லை). அப்படி கண்டிப்பாக செய்ய வேண்டுமென்றால் இதை பெற்றோர், உடன்பிறந்தோர் மட்டும் கூடி வீட்டோடு சிம்பிளாக வைக்கலாம்.

வின்னி அக்கா, என்னை கேட்டா சிம்பிளாகூட இதை வைக்க வேண்டாம்னுதான் சொல்லுவேன். இது என்ன விழா எடுத்து கொண்டாடுறதுக்கு ஒரு சாதனையா? இல்ல பண்டிகையா? எல்லா பெண்களோட வாழ்க்கையிலயும் நடக்கிர ஒரு சாதராண விசயம். இதை பத்திரிக்கை அடிச்சு, போஸ்டர் அடிச்சு, ஊர்வலம் வச்சி, எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அசிங்கப்படுத்துறாங்க. என்னோட தலையெழுத்து இது எல்லாமே எனக்கு நடந்துச்சு. ஊர்ல பசங்க எல்லாரும் எப்படி கிண்டல் பண்ணினாங்க, எனக்கு அவமானமா இருந்துச்சு. இதை ஊருக்கு சொன்னதால எங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு என்ன சந்தோசம் கிடைச்சுதுன்னு தெரியல. நான் அப்பவே சண்டை போட்டேன். மாசம் மாசம் எனக்கு இனி பங்சன் வைப்பீங்களான்னு.

ஆம்பளைங்களும் வயசுக்கு வருவாங்களாமே. எனக்கு இப்படி ஒரு விசயமே இப்பத்தான் தெரியும். ஆனா பொண்ணுங்க வயசுக்கு வர்றது மட்டுமில்ல. மாதவிலக்கு என்னைக்கு வர்றதுங்கிறது மொதக்கொண்டு எல்லாமே ஊர்ல இருக்கிற அத்தனை பேருக்கும் தெரிஞ்சிடும். நாமதான் தண்டோரா போட்டு சொல்றோமோ. அதான் வீட்டில தனியா உக்காற வச்சிடுவாங்களே. என் அக்கா எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டா. எனக்கு இன்னும் நினைப்பு இருக்கு. என் காலம் கொஞ்சம் பரவாயில்லை. ஆனா, இந்த அசிங்கமான சடங்கு இந்த் காலத்துக்கு தேவையே இல்லை. எனக்கு அதைப்பத்தி யாராவது பேசினாக்கூட எரியுது.

தங்கை வினோதா, உங்க எரிச்சல் நல்லா புரியுது. போஸ்டரெல்லாம் அடிச்சு ரொம்ப ஓவருதான். நான் சிம்பிளான்னு சொன்னது பெரியவங்க மன திருப்திக்குத்தான். ஏதோ சாங்கியம் அது, இதுன்னு சொல்வாங்களே, அதுக்குத்தான். ஆனா என் பொண்ணு வேணவே வேணாம்ன்னு சொன்னா நிச்சயம் நான் செய்யமாட்டேன்.

இந்த சடங்கை குறித்த தலைப்பிற்கு, தங்கள் கருத்தைக் கூறிய அனைத்து சகோதரிகளுக்கும் எனது நன்றி.

ஒரு விதத்தில் யோசித்தால் இதை அவசியம் குடும்ப அளவில் பண்ண வேண்டும். இது என்னவோ ஏதோ என்று நினைக்கும் குழந்தைக்கு அப்பா அம்மா சந்தோஷப்படுகிறார்களே, இது சந்தோஷமான விஷயம் தான் என புரிந்து கொள்ளும். அப்பொழுது, தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் கலந்து ஊற்றுவார்கள். சில ஆரோக்கியமான உணவுகளை தருவார்கள்.நான் பெரிய மனுஷி ஆகிவிட்டேன் என்று புரியும் போது, தானாகவே ஆண்களிடம் தள்ளி பழகும். நான் சிறுமியில்லை பெண் என்று புரிந்துகொள்ளும்

இன்னக்கி முளச்சு மூனு இலை விடரதுக்குள்ள பிள்ளைக வேன்டியதும் வேன்டாததுமா எல்லா அறிவையும் வளத்துக்கராங்க....அவங்களுக்கா நீ சிறுமியில்ல பெண்ணுன்னு சொல்லிக் கொடுக்கனும்...வேனும்னா நமக்கு நாலு அறிவுரை சொல்லித் தந்து இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியேன்னு சொல்லிடுவாங்க...வேனாம் இந்த சடங்குன்னு தான் தோனுது கவிதா

தளிகா:-)

அஸ்ஸலாமு அலைக்கும் தளிகா
உஙகள் பதில் சொல்லும் விதம் யாரையும் நோவினை செய்யாத வண்ணம் அருமைய்யாக உள்ளது.நீன்கள் நன்கு படித்து இருப்பீர்கள் போலும்.நானும் அரபி படித்துள்ளேன்.நீங விரும்பினால் உங்க ஐடி தரவும்

மேலும் சில பதிவுகள்