மஞ்சள் நீராட்டு விழா

அன்பு நேயர்களே இந்த தலைப்பு ஆன்மீகத்தோடு சம்பந்தமில்லை என்றாலும் நமது தமிழ் பாரம்பரியத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் முக்கியமாக நாகரீக வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் பதிவைப் போட முடிவுச் செய்தேன்.

அதாவது முன்பெல்லாம் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் விசயத்தை மிகவும் கோளாகலமாக ஊரைக் கூட்டி உற்றார் உறவினரோடு கொண்டாடுவார்கள். இப்பொழுதும் கிராமங்களில் இந்த சடங்குகள் நடக்கின்றது. ஆனால் நகர் புறங்களில் சுத்தமாக கிடையாது என்று நம்புகின்றேன்.ஆகவே தமிழச்சிகளுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட இந்த சடங்கு நமது தமிழ் சமுதாயத்தில் அழிந்து வருவது குறித்து உரையாடலாம் என்று நினைக்கின்றேன். அந்தக் காலத்தில் இந்த சடங்க்கை ஏன் ஏற்படுத்தினார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வேலையின் நிமித்தம் வெளி நாடுகளில் வாழும் பெற்றோர்களால் இந்த சடங்குகளை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை எந்த இடத்திலும் நடத்தலாம்.ஆகவே உண்மையான நடை முறையிலான விசயங்களைப் பற்றி உரையாடலாம்.

என்னைப் பொருத்தவரையில் இது ஒரு ஆரோக்கியமான சடங்காகவே நினைக்கின்றேன். மற்றவர்களைப் பற்றியோ வேறு ஏதாவது காரணத்தாலும் இந்த சடங்கை அழியாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழச்சியின் கடமை என்று தான் கூறுவேன். இப்பொழுது பெற்றொர்கள் இந்த சடங்கைத் தவிர்ப்பதற்கு என்ன காரணம், இந்த சடங்கு இன்றைய காலகட்டத்தில் அவசியமா? அவசியமில்லையா போன்ற விசயங்களை நேயர்கள் அனைவரும் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

ummuhisham@yahoo.com is my id

என்னை பொறுத்த வரை இது தேவையில்லாத ஒன்று, நாமே வம்பை விலை கொடுத்து வாங்கற மாதிரியான விஷயம்,

அன்புடன்
பவித்ரா

எல்லாரும் நல்லாருக்கீங்களா? இந்த இழையை இப்பதான் பார்த்தேன், இன்னும் சரியாககூட எல்லா பதிவுகளையும் படிக்கலை ஏன்னா என்மனசில் இருக்க சில கருத்துக்கள் மற்ற தோழிகளும் சொல்லி இருக்கலாம் அப்ப நான் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லாம போகலாம் அதனால தான் பதிவுகளைப் படிகாமல் பதிவு குடுக்க ஆரம்பிச்சுட்டேன் அதனால நான் சொல்ற கருத்துக்களும் தோழிகள் குடுத்துருக்க பதிவுகளின் கருத்துகளும் ஒரேபோல இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும்...

என்னைப்பொறுத்த வரைக்கும் இந்த சடங்கு இப்பல்லாம் தேவையில்லாதது. அந்தகாலத்துல பெண்களுக்கு சீக்கிரமாவே கல்யாணம் பன்னினாங்க, அவங்க பூப்பெய்துவது எப்படியும் 15, 16வயசுல தான். எப்ப நம்ம பொண்ணு சடங்காகுவான்னு எதிர்பாத்துட்டு இருப்பாங்க எதுக்குன்னா சொந்தபந்தங்களுக்கு சொல்லி சடங்கு பன்ன. அதுலயே ஒருவழியா மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுத்துருவாங்க.

ஆனா இப்பல்லாம் அப்படி இல்ல 8,9 வயசுல்ல குழந்தைகளை பாத்தாலே ரொம்ப மெச்சூர்டா இருக்காங்க மனசலவுல மட்டும் இல்லை உடம்பலவுலயும் தான். ஒன்னுமே தெரியாத வயசுலயே சடங்காகரதால மனசலவுல ஒரு பயத்தோட இருக்க குழந்தைகளை அதுஇதுன்னு சொல்லி வெளிய போகவிடாம ஃபங்சன் பன்னி அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தி ஒரு பயத்தை உண்டுபன்னிராங்க, கூட விளையாடிய பிள்ளைகள் கிட்ட கூட விளையாடக்கூடாது பேசக்கூடாது அப்படி பன்னாத இப்படி பன்னாதன்னு சொல்லி ஒரு கூட்டுக்குள்ளயே அடச்சிர்ராங்க. திடீர்னு என்னவோ ஆயுருச்சுன்னு நினைக்கற குழந்தைகள் ரொம்ப மன உளைச்சல்ல பாதிக்கப்படறாங்க மத்த குழந்தைகளிடத்தில் சகஜமா இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்படறாங்க. அதுவும் இப்பல்லாம் எல்லாரும் கோஎட்ல படிக்கற குழந்தைகள் தான் ஜாஸ்தி கூட படிக்கற மாணவர்கள் மத்தில ஒரு கேலிப்பொருளா ஆகராங்க சம்பந்தப்பட்ட குழந்தைகள்... பசங்க ஒன்னும் லேசுப்பட்டவங்க இல்ல கூடப்படிக்கற பொண்ணு சேந்தாப்ல நாலு நாள் வரலைன்னா அவ வயசுக்கு வந்துருப்பாடா அதான் வரலைன்னு இப்ப கிண்டல் பன்றாங்க தெரியுமா? பக்கத்து வீட்டு பொண்ணு ஒரே அழுவை நான் இனி ஸ்கூல்க்கு போக மாட்டேன்னு அப்பறம் அவங்க மிஸ்கிட்ட சொல்லி பயனுங்களை வார்ன் பன்னி இப்ப போறா அந்த பொண்ணு என்ன படிக்கறா தெரியுமா? 6வது...

கடைசில மஞ்சள் நீராட்டு விழான்னு பத்திரிக்கை அடிச்சு(இப்பல்லாம் இதுக்கு கூட ஃப்ளெக்ஸ் வெக்கறாங்கப்பா? என்ன கொடுமை சார் இது)குழந்தைகளை கொலுபொம்மை மாறி உக்கார வெக்கற கொடுமை யப்பா சாமி வேணாம்க இந்த காலத்துல இதெல்லாம்... இப்ப ரீசெண்ட்டா எங்க ஊருல ஒரு பெரிய தலையோட பொண்ணுக்கு கல்யாணபத்திரிக்கையே தோத்துப்போற மாறி ஒரு பத்திரிக்கை அடிச்சு அதுல(அதவிட பெரிய தலை, கட்சிகாரங்க தான்)தலைவர் உரையாற்றுகிரார் அனைவரும் வருகன்னு போட்டுருந்தாங்க. அந்த பொண்ணு ஒரு மூலைல உக்காந்துருக்கு பொம்மைமாறி, பெரிய ஸ்டேஜ் போட்டு அதுல ஒருத்தர் பேசிட்டுருக்காரு நாட்டுல விலைவாசி ஏறிருச்சுன்னு... கடவுலே இதைக்கேக்க யாருமே இல்லையான்னு நினைச்சேன்(விலைவாசியை இல்ல அந்த பொண்ணுக்கு நடந்ததை).

இதையெல்லாம் ஒதுக்கிட்டு இந்தகாலத்துக்கு தகுந்தமாறி முதல்ல இருந்தே சத்தான உணவுகளை குடுத்து அவங்களுக்கு அதபத்தி தெளிவா சொல்லி தைரியத்தை சொல்லி குடுக்கனும். நீ குழந்தைபருவத்துல இருந்து அடுத்த ஸ்டேஜ்க்கு போற பயப்பட ஒன்னுமே இல்லைன்னு சொல்லி மனசுல ஒரு பக்குவத்தை சொல்லிக்குடுக்கனும். அதுவே அவங்களுக்கு பன்னர பெரிய உதவியா இருக்கும்... இன்னும் நிறைய இருக்கு அதை எல்லாரோட பதிவையும் படிச்சுட்டு அப்பறமா சொல்லரேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மன்னிக்கவும், இதுவும் அதே நெட் பிரச்சனையால பதிவானதுதான். ரொம்ப பெரிசாவேற டைப் பன்னதால ஸ்பேஸ் அதிகமாகும்னு இதையும் அழிச்சுட்டேன். மறுபடியும் தோழிகள் மன்னிக்கவும்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இந்த சடங்கு என்பது தேவை இல்லாத ஒன்றே.. இது எல்லாப் பெண்களுக்கும் அந்த வயதில் வரக் கூடிய ஒரு உடல் மாற்றமே.. அந்தந்த வயதில் நடக்கக் கூடிய ஒரு விஷயம்.. மேலும் ஒரு பெரிய ஃபங்ச்கன் வைப்பது திருமணத்திற்கு என் வீட்டில் ஒரு பெண் ரெடியாயிடுச்சுனு சொல்லத் தான்.. அந்த சமயத்தில் கொடுக்கப்படும் உணவுகள் அந்தப் பெண்ணின் கருப்பைக்கு நல்ல உறுதியை கொடுக்கும்.. அதனால் தான் முட்டை, கழி, உளுந்து என பலவற்றை கொடுக்கிறோம்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மன்னிக்கவும் நெட் பிரச்சனையால ரெண்டு மூணு முறை பதிவு பன்னிட்டேன். மேல இருக்கறதையும் அழிக்க முடிமான்னு பாக்கரேன்....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்