இளமை இதோ! இதோ!

என் அன்பு தோழிகளே.

இங்க நிறைய மக்கள் காதல் கல்யாணம் பண்ணி இருப்பாங்க. ஒரு சிலர் பெற்றோரை எதிர்த்து, ஒரு சிலர் பெற்றொர் அனுமதியோட. அப்புறம் பெற்றோர் முடிவு பண்ண கல்யாணம். ரெண்டுலேயும் காதல் இருக்கும் இல்லயா. அதனால உங்கள் காதல் அனுபவங்களை (தப்பா எடுத்துக்காதீங்க!!!) நான் சொல்ல வரர்து, கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஹஸ் கூட பேசினதுக்கும் , இப்ப இருக்கறர்த்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் இல்ல. அப்ப நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்க உரையாடலாம்.

1. முதல் முதலில் சந்தித்த இடம்.
2. முதலில் பேசிய டயலாக்
3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்.
4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.
5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.
அப்புறம் எத்தனை மணி நேரம் பேசினீங்க. பில் எவ்வளவு வந்தது.
6. முதல் பரிசுப்பொருள் (பிடிச்சிருந்ததா, இல்லையா)
7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்.
8. முதல் வண்டி ரைடு.
9. தேனிலவு
10. முதல் முதலில் கணவ்ருக்காக சமைத்தது.
11. முதல் திட்டு (கோபம்), அடி.
12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்
13. முதல் குழந்தை (பிறந்த போது இருந்த அந்த நினைவுகள்)
குழந்தை பிறந்ததும் நிச்சயம் மகா சந்தோஷம் இருக்கும். எந்த குழந்தை எதிர்பார்த்தீர்கள் (ஆண், பெண்). எந்த குழந்தை பிறந்தது. உங்க ஃபீலிங் என்ன அப்பொ.
14. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்).
15. பேரன் பேத்திகள் எத்தனை(அடிக்காதீங்கோ, பாட்டிகளும் இருக்கலாம் இல்ல, நம்ம டீம்ல).

இப்படி இன்னும் நிறைய இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு புத்துணர்ச்சியோட இளமையா இருப்போம்.

கடைசில என்னப்போல சின்ன பசங்களுக்கு(???!!!), பெரியவங்க டிப்ஸ் கூட கொடுங்க, கொடுக்கலாம்.

என்னுடையதும் பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான்.ஹேமா உங்களுக்கு எப்படி ஜாதகத்தை பார்த்தவுடன் அவர் தான் உங்களவர் என்று தோன்றியதோ அதேமாதிரி தான் எனக்கும் தோன்றியது.எத்தனையோ பேர் என்னை பெண் பார்த்து சென்ற போதெல்லாம் தோன்றாத எண்ணம் இவர் என்னை பார்க்கவருகிறார் என்று சொன்னதும் இவர் தான் என்னவர் என்று தோன்றியது.
1.எங்கள் வீட்டிற்கு அவர் பெண்பார்க்க வந்தபொழுது தான் முதன் முதலில் பார்த்தேன்.(அவருடைய அப்பா இறந்ததற்கு வந்தபொழுது தான் என்னை பார்க்க வந்தார்)
2.(என் அப்பாவின் செல்போனுக்கு அவர் பேசுவார் என்று தெரிந்து என் அப்பாவிடம் கேட்டு போனை வாங்கி பேசினேன்)எப்படி இருக்கிறீர்கள்,சாப்பிட்டிர்களா?
3.என்னை பெண்பார்க்க வந்தபொழுது நான் -பேபிபிங் நிற புடவை அவர்-வெள்ளை நிற சட்டை ,பேண்ட் கலர் ஞாபகம் இல்லை
4.என்னை பெண் பார்த்த மூன்று தினத்திற்கெல்லாம் அவர் லண்டன் வந்து விட்டார்.(கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அவர் மறுபடியும் இந்தியா வந்தார்) அதனால் திருட்டு தனமாய் சந்திக்கவில்லை
5.அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல முதல் முதலில் போன்பேசியது
6.அவருடைய பிறந்தநாளுக்கு பேண்ட் சர்ட் நான் வாங்கிகொடுத்தேன்.கல்யாணம் முடிந்தவுடன் அவர் எனக்கு மெட்டி வாங்கிகொடுத்தார்
7.மாட்டிகொண்ட அனுபவம் எதுவும் இல்லை
8.கல்யாணம் முடிந்த முன்றாவது நாளில் விசா வாங்க சென்னைக்கு ரயிலில் சென்றோம் இருவரும்.(ac compartment)

என்னுடையது காதல் திருமணம் ஆனால் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த்தது. என் கணவன் என் அம்மாவின் அண்ணாவின் மகன்.

1. முதல் சந்தித்த இடம் எங்கள் வீட்டில் (கனடாவில்.
1996 அன்று தான் கனடா வந்தவர்.

2. முதலில் நான் பேசிய வார்த்தை- வந்து அடுத்த நாள் "எப்படி இருக்கிறீங்கள்"? டீ குடிக்கிறீங்களா? என்று ஆனால் அவர் வெக்கப்பட்டு ஓன்றும் சொல்லாமல் இருந்தார்.

3. நான் கறுப்பு ஜீன்ஸ், மஞ்சள் ரீ சேட் அவர் கறுப்பு ஜீன்ஸ், நீலம் சேட். ( எப்படி ஞாபகம்)

4. முதலில் திருட்டுத் தனமாய் சந்தித்த இடம் இல்லை ஏன் என்றால் நாங்கள் ஓரே வீட்டில் தானே இருக்கிறோம்.(ஆகா எப்படி)

5. முதல் நான் தான் பாடசாலையில் இருந்து அம்மாவுக்கு போன் எடுத்தேன் ஆனால் அம்மா வீட்டில் இல்லை, ஆனால் அவர் தான் போனை எடுத்து கலோ என்று சொல்லிவிட்டு என் குரலை கேட்டவுடன் வைத்து விட்டார். (அன்று தான் அவர் என் றூமில் "உங்களை நான் விரும்புகிறேன்" என்று கடிதம் எழுதி வைத்தார்).ஆனால் அன்று எனக்கு ஏன் அப்படி எழுதினார் என்று விளங்கவில்லை. அப்போது எனக்கு 16 வயது. என் மச்சானுக்கு 19 வயது.

6. முதல் பரிசுப் பொருள் என் பிறந்த நாள் அன்று எனக்கு இதயவடிவத்தில் செய்த கேக் ஒரு இதய வடிவத்தில் உள்ள கீ செயின். நான் அவருக்கு கொடுத்தது ஒரு நன்றி. அடுத்த வருடம் 1997 இல் காதலர் தினம் அன்று நான் அவருக்கு ஒரு பூங்கொத்தும் ஒரு வாழ்த்து மடலும் கொடுத்தேன். (இது வாங்க மட்டும் தான் பணம் இருந்தது) அம்மாவும் அப்பாவும் கைச்செலவுக்கு இருவரும் சேர்ந்து $15.00 தான் தந்தார்கள். அதில் தான் வாங்கியது.

7. முதலில் மாட்டிக் கொண்ட அனுபவம் எங்கள் இரண்டு பேரின் கடிதமும் அம்மாவின் கைக்கு கிடைத்தது ஆனால் அம்மா கோப படவில்லை ஏன் என்றால் எங்கள் கடிதம் காதல் கடிதம் மாதிரி இல்லை. அதனால் எங்கள் வீட்டில் அன்று சிரிப்புத்தான் எங்கள் இருவரின் கடிதங்களைப் பார்த்து. ஆனால் என் தங்கை என்னை காட்டிக் கொடுத்து விட்டாள் பாடசாலையில் மதிய இடைவேளையில் சாப்பிடாமல் அவருடன் போன் கதைக்கிறா என்று காட்டிக் கொடுத்துவிட்டாள் அன்று தான் என் பெற்றோருக்கு எங்கள் மேல் சந்தேகம் வர தொடங்கியது. ஆனால் அப்பா நினைத்தார் பிள்ளை ஏதும் வாங்கி சாப்பிட தான் பணம் கேக்கிறாள் என்று ஆனால் போன் கதைக்க தான் பணம் கேட்டிருக்கிறேன் என்று அன்று தான் என் அப்பாவுக்கு தெரிந்த்து.
(பாவம் அப்பா). அதன் பின்பு அவரை என் பெரியம்மா வீட்டில் விட்டார்கள்.

(அதற்கு பிறகு நடந்தது வேறு)---------------

8. 1997 தீபாவளி அன்று இரண்டு பேரும் வீட்டை விட்டு பஸ்ஸில் போய் விட்டோம் இது தான் எங்கள் முதல் வண்டியில் பயணம் செய்த அனுபவம். அதன் பின்பு நாங்கள் இருவரும் பதிவுத்திருமணமும்,மற்ற திருமணமும் ( தாலி, மாலை மாற்றி) கோவிலில் செய்தோம். நாங்கள் இரண்டு பேரும் சந்தோசமாகவும் முன்பு இருந்த அன்பு போல் என்றும் குறையாமல் இன்றும் இருக்கிறோம்.

-நன்றி-
என் காதல் காவியத்தை திரும்ப நினைவூட்டியதற்கு சகோதரி ஹர்ஷினிக்கு மிக்க நன்றி!

நான் இந்த இடத்துக்கு வந்திருக்ககூடாதுதான். இருந்தாலும் ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா போய்கிட்டு இருக்கிற ஒரு டாபிக்ல, நல்ல சுவையான நாலு விசங்களை, ரெண்டு வார்த்தை வாழ்த்தி போட்டுட்டு போகலைன்னா அப்புறம் நான் என்ன அட்மினு?

கல்யாண அனுபவம்னு சொன்னவுடனே எல்லாருமே அனுபவிச்சு ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. படிக்கிறப்ப ரெண்டு மூணு தமிழ் சினிமா பார்த்த மாதிரி இருக்கு. வாழ்க்கையில் நடக்கிற நிறைய விசயங்கள்தானே சினிமாவா வருது. ஒவ்வொருத்தர் திருமணத்துக்கு பின்னாடியும் பெரிய காவியமே இருக்கும் போல இருக்கு.

முதல் பார்வை காதல், பார்க்காமலே காதல், கனவில மச்சம் பார்த்து காதல், கிழிந்த சுடிதார் துணியை வச்சு காதல், கையெழுத்தை வச்சு காதல் இப்படி எத்தனையோ காதலை சினிமாவுல பார்த்திருக்கோம். கதையில படிச்சு இருக்கோம். ஆனா, முதல் முறையா ஜாதகத்தை வச்சு கொண்ட காதலை இப்பத்தான் படிக்கிறேன்(றோம்னு நம்புறேன். இன்னும் கோடம்பாக்கத்துக்கு நியூஸ் போகலை போல இருக்கு..)

அப்புறம், சுபா..
//சென்னிங்க இந்தரவா (இது கன்னடம் நாங்க கன்னடம் தான் பேசுவோம் (தாய் மொழி)) அப்படின்னா நல்லாஇருக்கீங்களா? .ன்னு அர்த்தம்.//

நான் பெங்களூர்ல கொஞ்சம் வருசம் இருந்ததுனால கொஞ்சம் கன்னடம் தெரியும். கர்நாடகாவுல எந்த ஊருல பேசுற கன்னடம் இது "சென்னிங்க இந்தரவா" ?! (சொன்னீங்கன்னா தொந்திரவா? உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்குறேன்.)

ஜெயந்தி அக்கா, உங்களோட ஒவ்வொரு பதிலுமே ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு. அதிலேயும் உங்க 5 ஆவது பதில் ரொம்ப ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு. ஒரு வரி ஹைக்கூ மாதிரி:-)
// 5.கணக்கே இல்லை. // VSNL வாழ்க.

அம்பிகா தங்கச்சி, இப்படி ஆரம்பத்திலேயே தற்கொலைன்னு போட்டு பயமுறுத்திட்டீங்களே.. அப்புறம் நீங்க சொன்ன சரஸ்வதி, வெள்ளை புடவை கட்டிக்கிட்டு, வீணையை வச்சிக்கிட்டு, வெள்ளை தாமரை மேலே உக்காந்து இருக்குமே.. அந்த சரஸ்வதிதானே? க்ளாஸ்மேட் இல்லையே.

"வேற வழியில்லாம .." இந்த ஒரு வார்த்தைக்கு பின்னாடி ஒரு பெரிய கதை கண்டிப்பா இருக்கணும். இது இன்னொரு ஹைக்கூ.. (விதுபா, இங்க பாருங்க. எத்தனை ஒரு வரி ஹைக்கூஸ்!!)

தங்கை அம்முலு,

உங்க தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு. அன்புடன் அம்முலு ன்னு பார்த்தீபனோட அடுத்த படத்துக்கான டைட்டில் மாதிரி ரொம்ப ரிதமிக்கா கீழே போட்டு இருக்கிறது பிடிச்சிருக்கு. அதைவிட பிடிச்ச விசயம், அறுசுவையில பெயர்ப்பதிவு பண்ணின உடனே, மன்றத்தில் கலந்துகிட்டு பதிவுகள் கொடுக்க ஆரம்பிச்சது. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். (குறுஞ்செய்தி .. ஆஹா.. ஆஹா.. என்ன ஒரு அருமையான தமிழ் வார்த்தை!! தமிழ்நாட்டுல எத்தனை பேர் இந்த வார்த்தைய பயன்படுத்துறாங்க:-( )

தங்கை பிரதீபாலா,

//பேர் என்னை பெண் பார்த்து சென்ற போதெல்லாம் தோன்றாத எண்ணம் இவர் என்னை பார்க்கவருகிறார் என்று சொன்னதும் இவர் தான் என்னவர் என்று தோன்றியது.//

ஏங்க உண்மையை சொல்லுங்க.. உங்க கணவரும் அறுசுவை படிக்கிறாருங்கிறதுக்காக போட்டதுதானே இது.

அப்புறம் கடைசியா ப்ராக்கெட்டுல ac compartment ன்னு போட்டு இருக்கீங்களே.. அது எதுக்காக :-)

தங்கை தாரணி, உங்க பதிவை இலங்கை தமிழர்கள் கதைக்கிற மாதிரி வாசிச்சு பார்த்தேன். ரொம்ப சுவையா இருந்துச்சு.

//(அதற்கு பிறகு நடந்தது வேறு)--------------- //

ஹர்ஷினி, இதுக்கு தனியா "பிறகு நடந்தது என்ன?" ன்னு ஒரு thread கொண்டு வாங்க. இன்னும் நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் கிடைக்கும் போல இருக்கு.

//1997 தீபாவளி அன்று..//

தீபாவளியை தேர்ந்தெடுத்ததுக்கு சிறப்பு காரணம் எதாவது உண்டா? (97 தீபாவளி அன்னைக்கு யாருமே இல்லாம, நான் மட்டும் ஆபிஸ்ல உக்காந்து விடிய விடிய ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். எனக்கும் அது மறக்க முடியாத தீபாவளி.)

இன்னும் ஒரு அருமையான காவியம் வேணுமா? தேவாவை ஜாலி டூர் எழுதச் சொல்லாதீங்க. இங்க வந்து பதில் சொல்ல சொல்லுங்க.

ஆமாங்ணா,லவ் மேரேஜ்ன்னா தற்கொலை ,அரேஞ்ஜ்ட் மேரேஜ்னா திட்டமிட்ட கொலைன்னு சொல்லுவாங்களே.அதான் அப்படி சொன்னேன்.நீங்க தப்பிச்சிட்டீங்க...நீங்க சொன்ன அதே சரஸ்வதியை தான் தேடிக்கிட்டு இருக்கேன்..நீங்க பார்த்தா இந்த பக்கம் அனுப்பி வையுங்க..

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நான் கூட, நீங்க உங்கவர்கிட்டே பேச ஆரம்பிச்சதும் உங்க க்ளாஸ்மேட் சரஸ்வதிக்குதான் கோபம் வந்துடுச்சோன்னு நினைச்சு, என்னனென்னமோ கற்பனை பண்ண பார்த்தேன் :-)

ஹேமா செல்லம்(ப்ரகாஷ்ராஜ் ஸ்டைல்ல),

என்ன ஆளையே காணோம். எங்க இருக்க? ஆமா எ.கொ.ச.இ அப்படின்னா என்ன?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் கல்யாண ஆல்பம், நிச்சயதார்த்த ஆல்பம் பார்த்துட்டு இருந்தேன். பழய நினைவுகள். ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணேன். அதான் உடனே இங்க வந்து பதிவு போட்டேன்.
என்னோட பதிவையும் போட தான் நினச்சேன். ஆனா நேரமே சரியில்ல. ஏதோ ஒன்னு தடுத்து நிறுத்துது. வேற ஏதோ எழுதறதுக்குள்ள நேரம் ஆயிடுது.
இன்னைக்கு எழுதிடறேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சீக்கிரம் எழுதுங்க.. நான் வேற கமெண்ட் கொடுக்கணும்.

1. முதல் முதலில் சந்தித்த இடம்.
என் தாய்வீடு

2. முதலில் பேசிய டயலாக்
கீழே ஃபோனில் பேசியது தான். அத்தனை நாள் பேசவே இல்ல. இப்ப கூட அடிக்கடி இதுக்கு திட்டு விழும் அவருக்கு:-). நான் தினம் தினம் உங்களையே நினச்சிட்டு எப்ப பேசுவார்ன்னு வெயிட் பண்ணா, நீங்க பொறுமையா ஃபோன் பண்ணதும் இல்லாம, ஏதோ இண்டர்வியூ பண்ற மாதிரி பேசறீங்களா?ன்னு.

3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்.
நான் பின்க் பட்டுபுடவை(என் அத்தையுடையது)
அவர் ஜீன்ஸ் பேண்ட், க்ரே சர்ட்(இன்னமும் பாதுகாத்து வைத்துள்ளார் இரண்டையும்)

4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.
எங்கேயும் இல்ல. வீட்டுல சொல்லிட்டு அப்புறம் தான் சந்தித்தேன். இப்ப கஷ்டமா இருக்கு. திருட்டு தனமா சந்தீச்சா இருக்கற அந்த த்ரில்லே இல்லாம போச்சே:-(

5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.
எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் ஐந்து நாள் கழித்து(நான் தினம் தினம் எதிர்பார்த்து, என் அம்மாகிட்ட கூட புலம்பிட்டேன். என்னமா இப்படி ஒரு மாப்பிளை பார்த்திருக்கறன்னு..
என் ஹஸ் ரொம்ப சீரியச்சா "என்ன பண்ணிட்டு இருக்கே. C தெரியுமா, C++ தெரியுமா"
எனக்கு வந்ததே கோவம். எல்லாம் தெரியும். ஆனா கொஞ்சம் கூட பிடிக்காதுன்னேன். அவர் பதிலுக்கு" C, C++ knowledge இருந்தா தான், எல்லா programming-ம் ஈசியா வரும்"னார். ஓ சரின்னேன். அப்புறம், நான் அப்புறம் பேசறேண்ன்னு வெச்சிட்டார். (ரம்பம் போல இருப்பாரோன்னு நினச்சேன்!!!)

6. முதல் பரிசுப்பொருள்
Witco-வின் லெதர் ஹாண்ட்பேக்.
முதலில் தந்த பொருள்: இவருக்கு பிடித்த பாடல்கள் அடங்கிய(ரெகார்ட் சேய்த) சி.டி.

7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்.
எதுவுமே இல்ல. எல்லாமே சொல்லிட்டு பண்ணதாலே.

8. முதல் வண்டி ரைடு.
அவர் போன் பண்ணது வெள்ளிக்கிழம. தீங்கள் ஆபீஸ்க்கு(டைடல் பார்க்) வந்தாங்க. பஸ்-ஐ விட்டுட்டேன்(வெயிட் பண்ணவெச்சு வந்தாங்க). அப்புறம் ஆபீஸ்ல இருந்து ஒரு ரெண்டு ஸ்டாப் (காந்தி மண்டபம்)தள்ளி விட்டுட்டு போறேன்னு சொன்னார். அங்க இருந்த கூட்டத்தை பாத்து சின்னமலைக்கு கொண்டு வந்து விட்டுட்டு போனார்(எனக்கு வீட்டுக்கு கொண்டு போய் விடலையேன்னு கோவம்:-( ).

என்னோட ஹஸ் எனக்கு சொந்தம் தான். எனக்கு அப்பா அம்மா விருப்பம்னு நினச்சதால, இவரு தான் என்னவர்னு எதுவும் தோணல. ஏன்னா நான் இவர பாக்கவே இல்ல). ஆனா இவருக்கு, இவ தான் நம்ம பொண்டாட்டின்னு தோனுச்சாம்(எனக்கு ஐஸ்!!!).
எனக்கு கல்யாணம் முடிவானவுடன் தேவைப்பட்ட முதல் ஐடம், இவரோட ஃபோடோ. இவர் எப்படி இருப்பார்ன்னு ஒரே டென்ஷன். நிச்சயதார்த்தம் முடிஞ்ச அன்னைக்கும் இவர் என்னிட்ட பேசல. அப்பவும், இவர் முகத்தை பாக்கல. எங்க நிச்சயதார்த்த ஃபோடோ எடுத்த ஆளு மலைக்கு போயிட்டார். போடோவும் பார்க்கல. இவர் ஆபீஸ் வரேன்னு சொன்னவுடன், ஒரு பக்கம் பயம், எப்படி கண்டுபிடிக்கறதுன்னு. அப்புறம் எந்த கலர் ஷர்ட்ன்னு கேட்டேன். இவரு உன்ன பாக்கவந்த அன்னைக்கு போட்டிருந்தேனே, அதே ட்ரெஸ்ன்னு சொல்லி வெச்சிட்டார். சரி, நாம அங்க நிக்கலாம், யார் நம்ம கிட்ட வந்து பேசறாங்கன்னு பாக்கலாம்னு டைடல் பார்க் வாசல்ல வெயிட் பண்ணேன். நேரா சி.டி எடுத்துட்டு வந்து, "இந்தா"ன்னு சொன்னார். அப்ப தான் ஒழுங்கா பார்த்தேன். என் ஹஸ், சி.டி. குடுக்கும் போது கைய பாக்கனுமே ஒரே நடுக்கம். எனக்கு மனசுக்குள்ள ஒரே சிரிப்பு(ஏன்னா, எல்லாரும் உன் வாய்க்கு, பூட்டு போடற ஆள் தான் உனக்கு புருஷனா வரபோறார்ன்னு சாபம் விடுவாங்க). இப்ப பாத்தா ரவுடி ஆயிட்டார். பொண்ணும் பையனும் கூட வர மாதிரியே இருக்காங்க. நான் தான் பாவம்:-((.

நான் என்னோட சித்தி வீட்டுல இருந்தேன். எங்க சித்தி வீடும் இவர் வீடும் ஒரு கிலோமீட்டர் தூரம் தான். ஆபீஸும் எனக்கு டைடல் பார்க், இவருக்கு அடையார்ல. அதனால, இனிமே நான் உன்ன கூட்டிட்டு போறேன்னு சொன்னார். நான், எங்க வீட்டுல விடமாட்டாங்க. நான் வீட்டுக்கு தெரியாம எல்லாம் வர மாட்டேன்னு சொல்லிட்டேன்(இப்ப வருத்தமா இருக்கு, ஏன் அப்படி சொன்னேன்னு:-()
இவரு, அவங்க அம்மாகிட்ட சொல்லி, அவங்க இவரு அப்பாகிட்ட சொல்லி, அவரு ஃபோன் பண்ணி எங்கப்பாகிட்ட சொல்லி, கடைசியில எல்லோர் ஆதரவுடன் நான் அடுத்த ஆறுமாதங்கள் இவரோட தினம் தினம் வண்டி ரயிட் தான்.

நான் விட்டுட்ட சில:

முதல் முதல் வெளியில் சாப்பிட்ட ஐடெம்:
ஐஸ்க்ரீம்.
முதல் முதலாய் சமைத்து பரிமாறிய ஐடெம்:
குருமா, கத்திரிக்காய் வருவல்(இவர தவிர வேற யாருக்கும் அது பிடிக்கல:-( ஏன்னு இதுவரைக்கும் தெரியல).
முதல் முதலில் வாங்கிய திட்டு:
நான்: மாடி படியில் மேல வழுக்கி(யாரோ என் எதிரி, தண்ணி சிந்திவெச்சிருக்காங்க), அதனால கீழ வரைக்கும் வந்து விழுந்தேன்(மார்பிள் தரைனால). அதனால ஆபீஸ்ல இருந்து பதறி அடிச்சிட்டு வந்து நிறைய திட்டு கொஞ்சம் அடி வேற.
அவரு: கல்யாணமான மறுநாள், எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு(இவரோட ஊர்) போயிட்டு ஒரு மணிநேரத்துல வ்ரேன்னு சொல்லிட்டு, மதியமா சாப்பிட்டு வந்தார். அப்பொ வாங்கினார்.

ரொம்ப எழுத்திட்டேன்னு நினக்கிறேன். எப்பவும் இப்படி தான் ஏதேதோ பேசிட்டே இருப்பேன். வாயே வலிக்காதான்னு கேப்பாங்க. நீங்களும் கேட்டுறாதீங்க:-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஒருத்தர் வெயிட் பண்றாருன்னனே தெரியாம எழுதிட்டேனே. :-((

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்