இளமை இதோ! இதோ!

என் அன்பு தோழிகளே.

இங்க நிறைய மக்கள் காதல் கல்யாணம் பண்ணி இருப்பாங்க. ஒரு சிலர் பெற்றோரை எதிர்த்து, ஒரு சிலர் பெற்றொர் அனுமதியோட. அப்புறம் பெற்றோர் முடிவு பண்ண கல்யாணம். ரெண்டுலேயும் காதல் இருக்கும் இல்லயா. அதனால உங்கள் காதல் அனுபவங்களை (தப்பா எடுத்துக்காதீங்க!!!) நான் சொல்ல வரர்து, கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஹஸ் கூட பேசினதுக்கும் , இப்ப இருக்கறர்த்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் இல்ல. அப்ப நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்க உரையாடலாம்.

1. முதல் முதலில் சந்தித்த இடம்.
2. முதலில் பேசிய டயலாக்
3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்.
4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.
5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.
அப்புறம் எத்தனை மணி நேரம் பேசினீங்க. பில் எவ்வளவு வந்தது.
6. முதல் பரிசுப்பொருள் (பிடிச்சிருந்ததா, இல்லையா)
7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்.
8. முதல் வண்டி ரைடு.
9. தேனிலவு
10. முதல் முதலில் கணவ்ருக்காக சமைத்தது.
11. முதல் திட்டு (கோபம்), அடி.
12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்
13. முதல் குழந்தை (பிறந்த போது இருந்த அந்த நினைவுகள்)
குழந்தை பிறந்ததும் நிச்சயம் மகா சந்தோஷம் இருக்கும். எந்த குழந்தை எதிர்பார்த்தீர்கள் (ஆண், பெண்). எந்த குழந்தை பிறந்தது. உங்க ஃபீலிங் என்ன அப்பொ.
14. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்).
15. பேரன் பேத்திகள் எத்தனை(அடிக்காதீங்கோ, பாட்டிகளும் இருக்கலாம் இல்ல, நம்ம டீம்ல).

இப்படி இன்னும் நிறைய இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு புத்துணர்ச்சியோட இளமையா இருப்போம்.

கடைசில என்னப்போல சின்ன பசங்களுக்கு(???!!!), பெரியவங்க டிப்ஸ் கூட கொடுங்க, கொடுக்கலாம்.

அதற்கு பிறகு நடந்தது வேறு)--------------- //

அடி தான் வீட்டில் அதன் பிறகு அம்மா என்னை தனியாக ஒரு இடமும் போக விடுவதில்லை, பெரியம்மாவீட்டுப் பக்கம் கூட விடுவதில்லை. அம்மாவும் சொல்லிவிட்டார் உனக்கு மச்சானை திருமணம் செய்து தரமாட்டேன் என்று. நானும் வாதாடிப் பார்த்தேன். ஆனால் அடி தான் கிடைத்தது, என் கணவருக்கு நல்ல அர்ச்சனை எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் ஒரு கடையில் சந்தித்து எப்போது வீட்டை விட்டு வெளியேறுவது என்று யோசித்தோம். அப்போது தான் 2 நாளால் தீபாவளி வரப்போகிறது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், என்னையும் கோவிலுக்கு கூடிக்கொண்டு போக மாட்டார்கள்(நான் மட்டும் போவேனா)அதனால் தான் ஒரு நல்ல நாளை தெரிவு செய்தோம். வீட்டை விட்டு செல்கிறோம் ஒரு நல்ல நாளில் போவம் என்று தான்.(தீபாவளி அன்று) வேறு ஓரு சிறப்பு காரணமும் இல்லை. நன்றி அண்ணா என் தமிழை இரசித்து படித்ததற்கு.
-மிக்க நன்றி அண்ணா-

என்னுடைய திருமணமும் பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்ட ஒன்று தான். ஆகவே காதலுக்கு இடமில்லை என்றாலும் பூமுடித்தலுக்கு பிறகு திருமணத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி இருந்ததால் மலரும் நினைவுகள் எனது வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அதை இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பளித்த தங்கை ஹர்ஷினிக்கு எனது நன்றி.

1.முதல் முதலில் சந்தித்த இடம்- என்னுடைய வீட்டில் முதல் முறையாக பெண் பார்க்க வந்த பொழுது.

2.முதலில் பேசிய டயலாக்- இந்தாங்க மறந்துட்டு போய்ட்டீங்களே. இதை திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு sep 12 1982 அன்று தான் முதன் முதலாக பேசிய வார்த்தை.(சென்னைக்கு நேர்முக தேர்வுக்காக வந்து அப்படியே எங்களையும் அத்தையின் வற்புறுத்துதலால் எங்களை பார்த்து விட்டு போன போது (நாங்கள் இருவரும் பேசியதில்லை)மேசையின் மீது மறந்து விட்டுச் சென்ற பணத்தை எடுத்துக் கொண்டு துரத்திச் சென்று அதாவது மூச்சிரைக்க ஓடிச் சென்று கொடுத்தப் போது பேசிய முதல் டயலாக்.

3.முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள்,அவற்றின் நிறங்கள்.- சந்தன நிறத்தில் பூப்போட்ட பாவாடை கரும்பச்சை நிற தாவணி சந்தன நிற பிளவுஸ். அவர் சாம்பல் நிற முழுகால்சட்டை அதே நிறத்தில் மடக்கிவிடப்பட்ட முழு நீள கைச்சட்டை.

4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.- அனுபவமில்லை.

5.முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.-அப்பொழுது தொலைப் பேசி இரண்டு வீட்டிலும் கிடையாது.

6. முதல் பரிசுப்பொருள் (பிடிச்சிருந்ததா, இல்லையா)- தோலினால் தயாரிக்கப்பட்ட டிசைனர் காலணி. பிடித்திருந்தது ஆனால் காலில் போட பிடிக்கவில்லை. அது அவரை அவமதிப்பதாக மனம் கூறியது. ஆகவே அதை ஒரு நாளும் அணியவில்லை.

7.முதலில் மாட்டிக்கொண்டஅனுபவம்- அனுபவமில்லை

8. முதல் வண்டி ரைடு.- திருமணத்திற்கு பிறகு உறவினரின் வீட்டிற்கு பேருந்தில் விருந்தினர்களாக சென்றது.

9. தேனிலவு - இரண்டு வாரங்களில் புகை வண்டியில் பெங்களூர், பஞ்சாப்,புது டெல்லி,ஆக்ரா,காஷ்மீர் சென்று திரும்பியது

10. முதல் முதலில் கணவ்ருக்காக சமைத்தது.-தேனீர்,உப்புமா செய்யும் படி கூறினார்.

11. முதல் திட்டு- கேரளாவில் வாழ்ந்த சமையத்தில் ஊருக்கு போகும் பொழுது முதலில் அத்தையின் வீட்டிற்கு சென்ற பிறகு தான் சென்னைக்கு செல்வோம் பிறகு மீண்டும் வேலூருக்கு வந்து அத்தை தான் எங்களை காட்பாடி வரை வந்து அனுப்பி வப்பார்கள்.அந்த முறை என்னையும் குழந்தையையும் அத்தையின் வீட்டில் விட்டு விட்டு அவர் சென்னைக்கு வராமல் கேரளா சென்று விட்டார். ஆகவே அத்தை எங்களை சென்னைக்கு அழைத்து சென்று திரும்பி விட்டார்கள். ஒரு வாரத்திற்கு மேல் அவரை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அத்தைக்கு கடிதம் எழுதி விட்டு நான் அம்மாவை அழைத்துக் கொண்டு நேராக கேரளா சென்று விட்டேன். அம்மா சென்னைக்கு திரும்பிய அடுத்த நாளே எனக்கு செம திட்டு விழுந்தது. அதோடு விட வில்லை அன்றே மீண்டும் வேலுருக்கு அத்தையிடம் மன்னிப்பு கேட்க என்னை அழைத்து சென்றார். அதற்குள் நான் அனுப்பிய கடிதமும் அத்தை படித்து விட்டிருந்தார். எங்களைப் பார்த்த அத்தைக்கு ஒரே அதிர்ச்சி. இப்படி பொன்டாட்டியையும் குழந்தையையும் அலைக்கழிக்கின்றாயே ஏன் அழைத்து வந்தாய் என்று என் கணவருக்கு தான் செம திட்டு கிடைத்தது.

12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்- ட்ரஸ் விசயத்தில் நான் தலையிடுவதில்லை.

13. முதல் குழந்தை (பிறந்த போது இருந்த அந்த நினைவுகள்)- முதல் குழந்தை ஆண் குழந்தை. அவர் விரும்பியதும் அது தான்.மூன்று நாட்களாக விட்டு விட்டு வந்த வலியில் தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு பின்னால் அட்மிட் ஆகின்றவர்களுக்கெல்லாம் வந்த உடனே குழந்தை பிறப்பதை பார்த்து, எனக்கு எப்போ குழந்தை வெளியில் வரும் என்ற ஃபீலிங்கே பெரியதாக இருந்தது. அந்த மூன்று நாளும் என் கணவர் யார் சொல்வதையும் கேட்க்காமல் வீட்டிற்கும் போகாமல் என் கூடவே இருந்தார். மூன்று குழந்தைகளுக்குமே அப்படி தான் கூடவே இருந்தார்.

14. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்). - மூன்றில் இரண்டு ஆண், ஒரு பெண்.

15. பேரன் பேத்திகள் எத்தனை- பாட்டி ஆகும் பொழுது கூறுகின்றேன்.

முதலில் பார்த்த சினிமா - கோழிக் கூவுது.

முதல் முத்தம். - திருமணம் முடிந்து நாளைந்து நாள் இருக்கும்,குளியளறைக்குள் போகும் பொழுது எதிர் பாராமல் கிடைத்தது.

முதல் இரவு. - திருமணநாளிலிருந்து பத்து நாட்களுக்கு நல்ல நாள் இல்லை என்று பத்தாம் நாள் குறித்துக் கொடுத்திருந்ததால் அதன் படியே நடந்தது. ஆனால் அன்றைக்கு எங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. மீண்டும் அடுத்த நாள் நடத்தப் பட்டது. அன்றும் எதுவுமும் நடக்கவில்லை. பிறகு மூன்றாம் நாள் தான் எங்களுக்கு முதல் இரவு நடந்தது.இதை தெரிந்துக் கொண்டு ஊரில் இருந்த அரட்டை பேர்வழிகள் எங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் கணவரிடம் என்னடா தூங்கிட்டீங்களா என்று கலாட்டா செய்தார்கள். ஆனால் எண்ணி பத்தாம் மாசம் குழந்தை பெத்துட்டோமில்ல.

நாம் அனைவருமே வாழ்க்கையில் எத்தனையோ விசயங்களை மறந்து போனாலும் இவ்வாறு முதன் முதலில் கிடைத்த அனுபவங்களை மறக்கவே முடியாத காரணத்தால் கூட, வாழ்கையானது சுவாரசியமாக போகின்றது என்பதை மறுக்க முடியாது தானே. வாய்ப்பளித்த தங்கை ஹர்ஷினிக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றி.

எனக்கும் சொல்ல ஆசையாக இருக்கு. ஆனா இது போல எதுவும் நடக்குல. ரொம்ப பொறுமையாக எல்லாம் நடக்கும் என்று ஏழு வருடங்கள் ஆசையோடு காத்து இருந்தேன் ஆனால் என்ன நடந்தது யுகித்து பாருங்கள். சரி சரி அடிக்காதீர்கள் நானே சொல்லிவிடுக்குறேன். போன ஜுன் மாத்ம் தான் விவகாரத்து வாங்கினேன். நிஜமாகவே எதுவும் நடக்கவில்லை என்று ரொம்ப கவலையக இருக்கிறேன்.

ஜானகி

Friends can u tell whats mean ramalan

leemacyril

leemacyril

கவலைப்படாதீர்கள் ஜானகி. கடவுள் ஒரு கதவை அடைத்தால் மற்றொரு கதவைத்திறப்பார் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் சாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன். உங்கள் மனக்காயங்கள் ஆறி ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க அறுசுவை தோழர், தோழியர் சார்பில் வாழ்த்துகிறேன்
அன்புடன்
ஜெயந்தி

ஜெயந்தி அக்கா உங்கள் ஆறுதலான பதிலுக்கு ரொம்ப நன்றி. என் கவலைகளை அறுசுவை அரட்டை படிப்பதின் மூலம் மறந்து விடுகிறேன். அதற்காக பாபு அண்ணாவிற்கு நன்றி சொல்லி கொண்கிறேன். பாபு அண்ணாவிற்கு ஒரு ஓ போடுகிறேன்

பழைய இனிமையான அனுபவங்கள் தலைப்பை ஹர்ஷு போட்டது தான்...ரகசிய பிசினெஸ் பண்ரதால் நேரமில்லைன்னு சொன்ன மனோஹரியக்கா கூட பொறுக்க முடியாம அனுபவிச்சு எழுதியிருக்காங்க பாரு..

தளிகா:-)

இங்க வாங்க...சென்ற வார மன்றத்துல போய் பாத்துட்டு பரிசு வாங்கிட்டு வந்துட்டு சமத்தா இந்த லின்க்ல போய் படிங்க...நல்ல தெளிவா தோழிகள் எழுதி இருக்காங்க.

http://www.arusuvai.com/tamil/forum/no/5151

தளிகா:-)

// அவருடைய வேண்டுகோளுக்காக நீக்கப்படுகின்றது. //

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

சொல்ல மறந்துடன் எனக்கு பாத்த லன்டன் பையனுக்கு அங்க விசாவும் இல்லையாம்
hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

மேலும் சில பதிவுகள்