இளமை இதோ! இதோ!

என் அன்பு தோழிகளே.

இங்க நிறைய மக்கள் காதல் கல்யாணம் பண்ணி இருப்பாங்க. ஒரு சிலர் பெற்றோரை எதிர்த்து, ஒரு சிலர் பெற்றொர் அனுமதியோட. அப்புறம் பெற்றோர் முடிவு பண்ண கல்யாணம். ரெண்டுலேயும் காதல் இருக்கும் இல்லயா. அதனால உங்கள் காதல் அனுபவங்களை (தப்பா எடுத்துக்காதீங்க!!!) நான் சொல்ல வரர்து, கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ஹஸ் கூட பேசினதுக்கும் , இப்ப இருக்கறர்த்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் இல்ல. அப்ப நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இங்க உரையாடலாம்.

1. முதல் முதலில் சந்தித்த இடம்.
2. முதலில் பேசிய டயலாக்
3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள்.
4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள்.
5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது.
அப்புறம் எத்தனை மணி நேரம் பேசினீங்க. பில் எவ்வளவு வந்தது.
6. முதல் பரிசுப்பொருள் (பிடிச்சிருந்ததா, இல்லையா)
7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்.
8. முதல் வண்டி ரைடு.
9. தேனிலவு
10. முதல் முதலில் கணவ்ருக்காக சமைத்தது.
11. முதல் திட்டு (கோபம்), அடி.
12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்
13. முதல் குழந்தை (பிறந்த போது இருந்த அந்த நினைவுகள்)
குழந்தை பிறந்ததும் நிச்சயம் மகா சந்தோஷம் இருக்கும். எந்த குழந்தை எதிர்பார்த்தீர்கள் (ஆண், பெண்). எந்த குழந்தை பிறந்தது. உங்க ஃபீலிங் என்ன அப்பொ.
14. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்).
15. பேரன் பேத்திகள் எத்தனை(அடிக்காதீங்கோ, பாட்டிகளும் இருக்கலாம் இல்ல, நம்ம டீம்ல).

இப்படி இன்னும் நிறைய இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு புத்துணர்ச்சியோட இளமையா இருப்போம்.

கடைசில என்னப்போல சின்ன பசங்களுக்கு(???!!!), பெரியவங்க டிப்ஸ் கூட கொடுங்க, கொடுக்கலாம்.

உங்களின் நிலை ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது!உங்கள் குடும்பத்தினர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?உங்கள் அக்காவின் யோசனை?அச்சச்சோ இப்படியும் ஒரு சகோதரி,உங்களுக்கு உதவுவது போல் அங்கு யாரும் பெரியவர்கள்,உறவினர்கள் யாரும் இல்லையா?அவர்களிடம் சொல்லி உங்கள் பெற்றோருக்கு புரிய வைக்கலாமே!மாட்டிக்கொள்ளாதீர்கள்,என் தோழி ஒருத்தி இந்தியாவில் இன்டெர்னெட் மூலம் காதல் வளர்த்து பிறகு அலை பாயுதே மாதிரி திருமணமும் முடித்து பின்பு அவள் அப்பா அம்மாவிர்க்கு தெரிந்து வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு இப்பொழுது இங்கு (ஃபிரான்ஸ்) வந்துவிட்டாள் ஆனால் இப்ப்ழுது அவள் வேண்டாத மனைவியாகவும்,வேண்டாத மருகளாகவும் காலம் தள்ளுகிறாள்!ஆனால் இவளுடைய பெற்றோர் அவளுக்கு வெளினாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்றுதான் அறிவுரை சொன்னார்கள்,இவள் கேட்க்கவில்லை இப்பொழுது இந்தியா திரும்பிவிட்டால் போதும் என்று எண்ணுகிறாள்!

டியர் சிந்து,
தங்களின் பதிவைப் படித்து விட்டு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கடந்த 2 வாரமாக அதிக ஜுரம், கண்வலி என்று எல்லா வியாதிகளும் சேர்ந்து என்னைப் படுத்திக் கொண்டிருப்பதால் உடனே பதில் அடிக்க முடியவில்லை.

இத்தனை அழகான குறிப்புகளை அனைவருக்கும் கொடுத்து அசத்திய நீங்கள் மனதைத் தளர விடக் கூடாது. வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் தெளிவான சிந்தனையோடு , துணிச்சலோடு முடிவெடுக்கும் அவசியமுள்ள தருணங்கள் வரும். அப்போது குழப்பத்தோடு, பயமும் சேர்ந்துவிட்டால் நல்ல முடிவு ஏற்படாது.

அப்பா, அம்மா, அக்கா தங்களை புரிந்துக் கொள்ளாததை நினைத்து வருந்த வேண்டாம். எடை, உயரம், வேலை என்று ஆயிரம் காரணங்களை விட மனதிற்கு பிடிக்காத யாருடனும் வாழ்க்கையை நடத்த முடியாது என்பதே உண்மை. மேலும் மனைவியை மதிக்காத ஒருவருடன் தங்கள் வாழ்க்கை இணைந்தால் அது துன்பம்தான். ஆனால் ஒரு துன்பத்திற்கு பயந்து, அவசரப்பட்டு இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.

தங்களது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவரது குடும்பம், பழக்க வழக்கம் என்று அனைத்தும் தங்களுக்குத் தெரியுமா? தங்களது நிலையிலிருந்து தப்பிக்க மட்டுமே அவரது திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்திருந்தால் தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள். தாங்கள் அவரை திருமணம் செய்து கொண்டால் கடைசி வரை தங்களுக்கு உறுதுணையாக இருப்பாரா? அவரது குடும்பத்தினர் யாரும் அவரது மனதை மாற்ற இயலுமா என்பதெல்லாம் யோசியுங்கள். எதுவாக இருந்தாலும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். அப்படி அவர் மேல் தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தங்களை அந்த லண்டன் மாப்பிள்ளையிடமிருந்து காத்துக் கொள்ள நீங்கள் உங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள். சேர்ந்து வாழத்தான் பணம் தேவை. பதிவுத்திருமணம் செய்து விட்டு தங்கள் பொருளாதார நிலை உயரும் போது சேர்ந்து வாழ்க்கையை தொடங்குங்கள். ஆனால் சட்ட ரீதியாக இணைந்து விட்டால் தங்கள் வீட்டினராலோ, அல்லது அந்த லண்டன் பேர்வழியாலோ ஒன்றும் செய்ய இயலாது.

நீங்கள் மேஜராக இருக்கும் பட்சத்தில் இதனை தங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தில்கூட தெரியப்படுத்தி பாதுகாப்பு பெறலாம். படித்தவர்கள் காவல் நிலையம் செல்ல பயப்பட்டுக் கொண்டு இருப்பதால்தான் லண்டனில் உள்ள ஒருவர் துணிச்சலாக அடுத்தவர் வாழ்க்கையை குலைக்க நினைக்கிறார். அப்படி இப்போது திருமணம் செய்ய இயலாவிட்டாலும் நல்ல ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் மேலதிகாரியை சந்தித்து தங்களது நிலையை தெளிவாக சொல்லுங்கள். வேலை பறிபோகும் நிலை மாறலாம். நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள், தன்னம்பிக்கையோடு கஷ்டப்படாமல் வெற்றி கிடைக்காது.

கடைசியாக ஒன்று, தங்களைப் பெற்றவர்களுக்கு வெளிநாடு மோகம் ஏற்பட்டதால் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் அவர்கள் மனதில் தங்கள் மேல் பாசம் இல்லாமலா இருக்கும். இத்தனை நாள் தங்களுக்கு படிப்பு, வாழ்க்கை வசதி என்று அனைத்தும் கொடுத்தவர்களாயிற்றே. அதனால் கடைசியாக ஒரு முறை தங்களது நிலையை தெளிவாக, அழாமல் கூறுங்கள். நான் தான் வாழப்போகிறவள். என் விருப்பம் இல்லாமல் எனக்கு வாழ்க்கை அமைந்தால் சந்தோஷம் இருக்காது என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். எதற்கும் மசியவில்லை என்றால் மேலே சொன்ன விஷயங்களையும் யோசியுங்கள். நிச்சயம் நமது அறுசுவையில் இருக்கும் மற்ற சகோதரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். என்னைவிட அனுபவம் உள்ள நிறைய பேர் தங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு:
சிந்துவின் பிரச்சனைக்கு தெளிவான ஆலோசனை, ஊக்கம் சொல்வதே அவருக்கு சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

டியர் சிந்து எப்படி இருக்கீங்க? முதல் முறையாக உங்களுடன் பேச வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களின் பதிவைப் பார்த்தேன். அதில் உங்கள் பெற்றோர் பார்த்து வைத்துள்ள மாப்பிள்ளையை உங்களுக்கு பிடிக்காமல் போனதற்க்கான காரணங்களை மிகவும் விளக்கமாக எழுதியிருந்தீர்கள். அதற்கு என்னுடைய கண்ணோட்டத்தை உங்கள் வரிசைப் பட எழுதுகின்றேன்.

1. அந்த பையன் எங்க அக்காவ பாத்து புடிக்கலனு சொல்லி என்ன கேட்டவன்,- இதற்கு என்னுடைய விளக்கம், நீ விரும்புகின்றவரை விட உன்னை விரும்புகின்றவரை திருமணம் செய்துக் கொண்டால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

2. என்னை விட 7 வருடம் மூத்தவன் - பத்து வயது வித்தியாசம் வரை எந்த பயமில்லாமல் தாராளமாக கழுத்தை நீட்டலாம்.

3. நான் சரியான ஒல்லி உயரமும் சற்று குறைய, அவன் சரியான உயரமும் உடம்பும்( நான் 35 கிலோ, அவன் 86 கிலோவாம் - என்னுடைய கண்ணோட்டத்தில் ஆண் எடைக் கூடியும் பெண் எடைக் குறைந்தும் இருப்பது தவறு என்று எனக்கு தோன்றவில்லை.

4. லன்டன் பொய் 10 வருடம் ஆகியும் சேமிப்பு என்று ஒன்றும் இல்லை, ஒரு நிரந்தர நல்ல வேலையும் இல்லை( எங்காவது ஓட்டுனர் வேலைக்கு கூப்பிட்டால் போவாராம்.- பேங் பேலன்ஸ்ஸைப் பார்த்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஒரு பெண் மனது வைத்தால் எந்த பேலன்ஸ்ஸையும் உயர்த்த முடியும் தானே.

5. எனது பெற்றோரின் வற்புருதலின் பேரில் அவனுடன் தொலைபேசியில் பேசும் பொழுது பலதடவை நான் அவனுடைய சொல்லை கேட்பதில்லையாம் என்று மிகவும் கெட்ட வார்த்தைகலால் என்னை திட்டியது.- எனது வாழ்க்கையில் நான் வாங்காத திட்டா!!!!!!

6.சொல்ல மறந்துடன் எனக்கு பாத்த லன்டன் பையனுக்கு அங்க விசாவும் இல்லையாம். - இதை கூறியது லண்டன் அரசாங்கம் தானா? என்று அதன் பின்னனியை நன்றாக தெளிவுப் படுத்தி பாருங்கள்.

உங்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. முறையே

1. பெற்றோர் காட்டிய வழியில் சென்று உங்களை விரும்பிய ஆடவனின் கைப் பற்றுவது.
2. உங்களின் பரிதாப நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு கை கொடுக்க வந்த, காதலனாகிப் போன நண்பனின் கரம் பற்றுவது.
3. இரண்டுமே தேவையில்லை என்று ஏற்கெனவே எடுத்த முடிவுகளை கைவிடுவது.

இனி முடிவு உங்கள் கையில், என்னைக் கேட்டால் இதில் எந்த முடிவு எடுத்தாலும் அது நன்மையில் தான் இருக்கும். உங்களை நீங்கள் நம்பினால் எதையும் சாதிக்க முடியும் என்று உறுதியாக கூறுவேன்.எனவே நிதானமாக சிந்தித்து நல்ல உறுதியான முடிவாக எடுங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.

ஹாய் சிந்து.. பதில் போடக் கூடாதுனு கஷ்டப் பட்டு பல்லை கடிச்சிட்டு இருந்தா கூட விட மாட்டேங்கறீங்களேப்பா :-) உங்க பதிவு படிச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு! நான் ஏதாவது தப்பா பேசினாலோ இல்லை உங்களை புண்படுத்துவது போல பேசினாலோ மன்னிச்சுடுங்க என் எண்ணம் அது இல்ல)

அது எப்படி உங்க சகோதரி இப்படி ஒரு ஐடியா சொல்வாங்க?!!! விசா இல்லாம இருக்கார்னா எப்படி உங்க அப்பா-அம்மா பரவாயில்லைனு சொல்வாங்க?! உங்க அக்கா இருக்கும் போது உங்களுக்கு கல்யாணம் பண்ண என்ன அவசரம் உங்க பெற்றோருக்கு?!

எனக்கு ரொம்ப விநோதமா இருக்கு. அந்த லண்டன் பையன் உங்களை பிடிக்குதுனு சொன்னதுக்கு என்ன காரணம்னு உங்களுக்கு தெரியுமா? ஏதாவது ரோஜா மாதிரி உங்க அக்கா சொல்ல சொல்லிருக்க போறாங்க! அந்த காரணம் தெரிஞ்சா அவர் நல்லவரா கெட்டவரானு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

அப்புறம், வயசு பொறுத்த வரை 7 வயது சரியான வித்தியாசம் தான், நான் 4 வயசு வித்தியாசம் தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனா அமைஞ்சது 7 தான். இதனால் பிரச்சனை ஏதுமில்லை.

உங்களை திட்டினார்னா என்ன சூழ்நிலைல திட்டினார், உண்மையில் நீங்கள் என்ன தவறாக செய்தீர்கள், என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது எல்லாம் நன்கு யோசித்து பாருங்கள். யாராக இருந்தாலும் என்ன தவறாக இருந்தாலும் கண்டிக்கலாம், அதற்கு ஒரு எல்லை உண்டு. எல்லை தாண்டினாரா என்று யோசியுங்கள்.

பேங்கில் பணம் இல்லையென்றால் கவலை படாதீர்கள், அது ஆண்களுக்கு ஏனோ கை வருவதில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் செலவழித்து விட்டு தான் வருவார்கள். கட்டுக்குள் கொண்டு வருவது நம் வேலை தான், அட்லீஸ்ட் என் வீட்டில் அப்படி தான்.

உங்க நண்பர் பத்தி எனக்கு பெரிசா நல்ல அபிப்ராயம் வரவில்லை. உங்க சூழ்நிலையை பயன் படுத்திக்கறார்னு தோணுது. நீங்க எப்பவோ உங்களுக்கு என் வயசுனு சொன்ன மாதிரி ஞாபகம். அதனால் இன்னும் சில வருடம் பொறுத்து இருக்கலாம். பிறகும் இந்த நண்பருக்கு உங்கள் மேலும் உங்களுக்கு நண்பர் மேலும் காதல் இருந்தால் திருமணம் செய்யலாம்.

தேவா சொன்னது போல உங்கள் வீட்டில் தெளிவாக சொல்லி பாருங்கள். அவர்கள் உண்மையிலேயே புரிந்தும் கொள்ளலாம், அல்லது புரிந்து கொண்ட மாதிரி நடிக்கவும் செய்யலாம். எதற்கும் போலீஸ் ஸ்டேஷனிலும் மேலதிகாரியிடமும் சொல்லி வைப்பது நல்லது. ஹாஸ்டலில் தங்குவதும் நல்லதே. மேலதிகாரி ஆணாக இருந்தால் அதிலும் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.

ஆண்கள் எல்லோரும் கெட்டவர்னு சொல்ல வரலை, நல்லவர் கெட்டவருக்கு ஆண்-பெண் பாகுபாடு இல்லை. ஆனால், பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும் வாய்ப்பு தான் அதிகம், நாம் தான் அலெர்ட்டாக இருக்கணும்.

மனோஹரி ஆண்ட்டி, எனக்கு உங்க பதிவும் ஆச்சரியமாக இருக்கு- பணம் இல்லனா பரவாயில்லை, விசா இல்லனா எப்படி? நம்ம மேல இருக்கும் பாசத்தினால் ஒருத்தர் திட்டுவதற்கும், அப்யூசிவா திட்டுறதுக்கும் வித்தியாசம் இல்லியா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அன்பு மகள் சிந்து,
உங்கள் கதைய கேட்டு உண்மையிலேயே திகைத்து போயிட்டேன்.
உங்கள் சகோதரியைப் போல நிறைய பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். வீம்புக்காக திருமணம் செய்து வைத்து விட்டு, அதனால் பாதிப்படையும் பெண்ணின் நிலைப் பற்றி கவலைப்படாத பெற்றோரும் இருக்கவே செய்கிறார்கள். எனவே தனக்கு மட்டும் தான் இப்படியென்று கவலைப்படாதீர்கள்.
உங்க கையில அருமையான வேலைத்திறனுள்ளது, உங்களால் சுயமாக உங்கள் காலில் நிற்க முடியும், அது ஒன்று போதும், கோடி ரூபாய்க்கும், அதிகமான ஆள் பலத்திற்கும் சமம். கவலை வேண்டாம்.
உங்கள் சகோதரியை வேண்டாமென்று சொல்லி விட்டு, நீங்கள் தான் வேண்டுமென்பவர், கொஞ்ச நாளில் நீங்களும் வேண்டாமென்று சொல்ல மாட்டாரென்பது என்ன நிச்சயம். கையில் தொழிலிலும் இல்லாமல், விசாவும் இல்லாத ஒருவரை நம்பி, பெற்றோர் சொல்கிறார்களே என்பதற்காக உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். நல்ல பெற்றோர்களாக இருந்தால் உங்களை புரிந்துக் கொண்டு உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும், அப்படியில்லாத பெற்றோரை எதிர்ப்பதில் தவறொன்றுமில்லை.
உங்கள் நண்பரையும் இந்த சூழ்நிலையில் அதிகமாக நம்ப வேண்டாம். இப்போதிருக்கும் உங்கள் மனநிலையில் ஆதரவாக பேசும் யாருமே நல்லவர்கள் போல தான் தோன்றும், அதனால் உணர்ச்சிக்களுக்கு அடிமையாகாமல், தள்ளி நின்று யோசித்து பார்த்து முடிவெடுக்கவும். முடிவெடுத்தப் பின் அதன் பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் பின் வாங்காமல், தைரியமாக துணிந்து நில்லுங்கள் (அந்த முடிவு நல்ல முடிவாக இருக்கும் பட்சத்தில்).
மனசு சோர்ந்து போகும் போதெல்லாம், ஃபீனிக்ஸ் பறவையை நினத்துக் கொள்ளுங்கள், அது கற்பனையேயாயினும், மனதிற்கு நல்ல தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும்.
எதுவாகவிருந்தாலும் அது உங்க கையில் தானிருக்கின்றது. துணிந்து போராடுங்கள், ஜெயித்துக் காட்டுங்கள். உங்கள் வெற்றியைக் காண நாங்களெல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் சொன்ன கருத்துக்களில் ஏதேனும் தவறாகவோ, உங்கள் மனதைப் புண்படுத்தும் படியோ ஏதேனுமிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சிந்து,

செல்விம்மா, சொன்னதை தான் நானும் சொல்ல வந்தேன். அவங்க சொன்னதை கேளுங்க. உங்களோட நண்பரையும் நம்புவதூ, சரியாக படவில்லை. இப்ப யார் உங்களுக்கு சாதகமா பேசறாங்களோ, அவங்கெல்லாம் நிச்சயமா நல்லவங்களா தான் தெரிவாங்க. அதனால யாரையும் நம்பாம, நீங்களே நிதானமா யோசிச்சு, முடிவு பண்ணுங்க. இப்பத்தைக்கு திருமணத்தை தள்ளி போடுங்க. அவசரம் வேணாம்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

என் கல்யாணமும் காதல் கல்யாணம் தாங்க. திரைப்படம் போல் ஏகப்பட்ட மிரட்டல், கொலை முயற்சி, சேஸிங், இன்னப்பிற சுவையான நிகழ்வுகளுக்குப் பின் கல்யாணம் பண்ணிக்கொண்ட கதைய சொன்னா தனியா ஒரு த்ரெட்டே போடவேண்டி இருக்கும்.(அப்பறம் அட்மின் வந்து இடத்தைக் காலி பண்ணுன்னு சொல்லிருவார்) அதனாலேயே என்னவர் மீதுள்ள காதல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அவருக்கும் அப்படித்தான்(வேற வழி!).

1. முதல் முதலில் சந்தித்த இடம் : வேறெங்கே எங்கள் அலுவலகத்தில் தான், அதுவும் கேன்டீனில்!
அவர் என்னப்பார்க்கலே. நாந்தான் பார்த்தேன். அப்போ தெரியாது, இவரைத்தான் நாம் காதலிக்கப்போறோம்னு! அவர் என்னைப்பார்த்தது என்னுடைய செக்ஷனில் வைத்துத்தான்.

2. முதலில் பேசிய டயலாக் : (ஒரே ஆபீசில், ஒரே பிரிவில் இருந்தாலும் கூட 2 வருடம் ஆயிற்று நாங்க பேசிக்கவே! )
நான் - உங்களுக்கு எத்தனை குழந்தைங்க? (அப்பவாவது அவருக்கு கல்யாணம் ஆகல்லைங்கற உண்மைய சொல்ல மாட்டாரா என்பதை கேட்கத்தான்).
அவர் - 2 குழந்தைங்க! (அப்ப இருந்தே பொய்!).

3. முதல் முதலாய் சந்தித்த போது அணிந்த ஆடைகள், அவற்றின் நிறங்கள் : தினமுமே பார்த்து இருந்தாலும் அவருடைய மனதில் நின்றது நான் கட்டிய மைசூர் சில்க் நீலக்கலர் புடவை.
அவர் உடையணியும் பாங்கை தினமும் ரசித்தாலும் என் மனசில நின்றது கறுப்பு கலர் சர்ட், லைட் கிரே பேண்ட்(அலுவலகத்திலேயே என்னவரைப்போல நீட்டாக யாரும் டிரஸ் செய்ய மாட்டாங்க!).

4. முதல் முதலில் திருட்டு தனமாய் சந்தித்த இடங்கள் : தினமும் தான் ஆஃபீஸிலேயே சந்திக்கிறோமே, இதுல திருட்டுத் தனமா வேற சந்திக்கணுமா? சந்திச்சோம், ஆனா அதை முதன்முதலில் என்று எப்படி சொல்வது? பஸ் ஸ்டேண்டில், நான் ஊருக்கு போக பஸ் ஏற வர, இவர் அங்கே நிற்க.

5. முதல் முதலில் ஃபோன் பண்ணி பேசியது : இரவு மணி 12, அவரின் குரலைக் கேட்டவுடனேயே, கை, காலெல்லாம் உதற என்ன பேசுவதென்றே தெரியாமல், உடனே கட் செய்து விட்டேன். அடுத்த நாள் மறுபடியும் போன் செய்து "நான் யாருன்னு தெரியுதா"ன்னு நான் கேட்க, சொன்னாத்தானே தெரியும், போன்ல என்ன டிவியா இருக்கு என அவர் கேட்க (நாந்தான் பேசறேன்னு அவருக்கு தெரியும்) அதுக்கப்பறம் தினம் மணிக்கணக்காக பேசி போன் பில் எக்கச்சக்கமாக வர, பில் வீட்டுக்கே போகவிடாம, அங்கேயே எடுத்து வீட்டுக்கு தெரியாமல் கட்டியதும், ஆபீசில் இருப்பவர்களிடம் என்னன்னு தெரியல பில் ரெண்டு மாசமா ஜாஸ்தியா வருதுன்னு மழுப்பியதும் மறக்கமுடியாதவை. (அவரோட போன் பில்லையும் சேர்த்து என்னையே கட்ட வைச்சது வேற விஷயம்)

6. முதல் பரிசுப்பொருள் : நான் கொடுத்தது-பர்ஸ், அவர் கொடுத்தது- பைபிள் வாசகமுள்ள ஒரு புக்மார்க் (இதுக்கே ஊர்ப்பட்ட பீடிகை வேற), பஸ்ஸுக்கு சில்லறை வச்சுக்கோன்னு சொல்லி அவர் கொடுத்த அஞ்சு ரூபாய நான் இன்னமும் பத்திரமா வச்சிருக்கிருக்கேனே:-) (என்னையே நான் கொடுத்து இருக்கேனே, இதுக்கு மேலே வேறென்ன வேணும்னு கேட்பார்)

7. முதலில் மாட்டிக்கொண்ட அனுபவம்: நாங்க யாருக்குமே பயப்படல, அதனால நாங்க மாட்டிக்கிட்டதா நினைச்சதேயில்ல.

8. முதல் வண்டி ரைடு: யாருக்குத் தெரியும், எங்க போறோமுன்னு. ஊருக்கு வெளியே ரோடு எங்கெல்லாம் போகுதோ வண்டி அங்கெல்லாம் போச்சு.

9. தேனிலவு : கடந்த 8ந்தேதி (08.09.2007) திருமண நாளைக் கொண்டாட, கொடைக்கானல் சென்றதுதான், எங்களுக்கு தேனிலவு.

10. முதல் முதலில் கணவருக்காக சமைத்தது:. தேங்காய் சாதம். அதை அவரிடம் கொடுக்க நான் பட்டபாடு... அதன்பின் தினமும் நான் அவருக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துவந்து, மத்தவங்க வர்றதுக்குள்ள அவர்கிட்ட கொடுத்துவிடுவேன்(நாங்கதான் கரெக்ட் டைமுக்கு எல்லாருக்கும் முன்பே வந்துவிடுவோமே).

11. முதல் திட்டு (கோபம்), அடி:. ஞாபகமே இல்ல, உடம்ப கவனிச்சுக்கலேன்னா திட்டுவார். அடியா? அப்படின்னா? (நான் அவரை அடிக்காம இருந்தா போதாது)

12. முதலில் வாங்கி கொடுத்த ட்ரெஸ்: நியூ இயருக்காக நான் வாங்கிக்கொடுத்தது கிரீம் கலர் சர்ட்.
அவர் வாங்கிக்கொடுத்து பிரவுன் கலர் பட்டுப்புடவை கல்யாணத்திற்காக.

13. இப்ப எத்தனை குழந்தைகள்(ஆண், பெண் எத்தனை குழந்தைகள்). மூன்று.இரண்டு பெண், ஒரு ஆண்.

14. பேரன் பேத்திகள் எத்தனை? மகளும், மருமகனும் மனசு வைக்கனும் (அவங்களுக்கு என்னைப் பாட்டியாக்கறதுக்கு மனசே இல்லையாம்)

ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய பதிவு செய்துவிட்டு காத்திருக்க, என் பெற்றோரின் புண்ணியத்தால் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த முடியாதென்று தெரிந்ததும், அவசரம்,அவசரமாக கோவிலில் வைத்து திருமணம். அவருடைய மூன்று நண்பர்கள் சாட்சியுடன், பிள்ளையாரின் முன்னிலையில் யாராவது திருமணத்தை நிறுத்திடுவாங்களோங்கற பயத்தோட, அய்யர் கையில இருந்து தாலிய பிடுங்காத குறையா வாங்கி கட்டியதை இப்பவும் மறக்கமுடியாது. சரியா ஒரு மாசம் கழிச்சு ரிஜிஸ்டர் மேரேஜ்.
ம்ம்ம்... அதெல்லாம் அந்த காலம். இனிமையான வசந்த காலம் (கசப்பான காலமும் கூட). மலரும் நினைவுகளை அசை போட வைக்க வாய்ப்புக் கொடுத்த ஹர்ஷினிக்கு என்னோட நன்றி. (ஆனாக்க, இப்ப என்ர ஊட்டுக்காரருக்கு தான் தம்பி பாபுவ பார்த்து ஒரே பொறாம).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எங்க போனாலும் என் தலை உருளுதே.. (அக்கா, மாமாவோட பொறாமைக்கு காரணம் நான் சுதந்திரமா இருக்கிறதா..இல்லே வேற ஏதாச்சுமா?)

ஹய் சிந்து,

உங்களுக்கு என்ன யோசனை சொல்வது தெரியவில்லை, எனென்றால் எல்லோரும் அதற் கு முன்பே கொடுத்துவிட்டார்கள். ஆனால் எதை செய்வாதாக இருந்தாலும் பல முறை யோசித்து பின் இறங்கவும். இது உங்களுடைய வாழ்க்கை பிரச்னை. உங்களுக்கு நல்வாழ்க்கை அமைய அறுசுவை சகோதர, சகோதிரி சார்பில் வாழ்த்துகிறோம்

ஹய் தேவா,

உடம்பு சரில்லை என்று சொல்லி இருந்தீர்கள், இப்பொழுது எப்படி இருக்கிறது. அறுசுவை வேலை பளுவாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஜானகி

ஜானகி,

உங்களுக்கும் அழகான, உணமையான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள். நீங்களும் இங்க வந்து எங்களுடன் உங்க நினைவுகள கூடிய சீக்கிரம் சந்தோஷமா சொல்லப்போறீங்க பாருங்க!!!வாழ்த்துக்கள்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்