கூட்டாஞ்சோற்றில் பங்களிக்கும் உறுப்பினர்கள் கவனத்திற்கு ..

கூட்டாஞ்சோறு உறுப்பினர்களுக்கு,

நீண்ட நாட்களாக நான் குறிப்பிட நினைத்த விசயம். இரண்டு மூன்று உறுப்பினர்கள் அதைப் பற்றி மின்னஞ்சல் அனுப்பிவிட்டதால், இப்போது அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்கம் கொடுத்து, வேண்டுகோளும் முன் வைக்க விரும்புகின்றேன்.

முதலில் விளக்கம்:

கூட்டாஞ்சோறு பகுதியில் சமீபத்தில் இணைந்தவர்கள் என்று ஒரு பட்டியல் முதல் பக்கத்தில் இருக்கின்றது. அதை நீண்ட நாட்களாக மாற்றவில்லை. தவறு என்னுடையதுதான். அதிக உறுப்பினர்கள் சேர்ந்ததும் அத்தனை பெயர்களையும் முதல் பக்கத்தில் கொடுப்பது சிரமம் என்பதால், வேறு வழிகளை யோசித்து கொண்டிருந்தேன். அதுமட்டுமல்லாமல் கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் பக்கத்தினை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்கவும் திட்டமிட்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் எடுத்து செய்யவேண்டிய வேலை என்பதால், இயலாமை காரணமாக நாட்களை ஓட்டிவிட்டேன். மன்னிக்கவும்.

வேண்டுகோள்:

இப்போது கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் பக்கத்தை மாற்றியமைக்க உள்ளேன். ஒவ்வொரு உறுப்பினர்கள் பக்கத்திலும் அவர்களை பற்றின தகவல்கள், அவர்களின் படம்/படங்கள், அவர்களுது விருப்பு, வெறுப்பு, சமையல் கற்றுக்கொண்டது எப்படி என்பது போன்ற தகவல்கள்.. இப்படி இன்னும் நிறைய தகவல்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆகவே, கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் தங்களைப் பற்றின தகவல்கள், தாங்கள் என்னவெல்லாம் வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அவை எல்லாவற்றையும் தெரிவிக்கலாம். முக்கியமானவை, சமையல் அனுபவம், கற்றுக்கொண்டது யாரிடம், என்ன சிறப்பு திறன்கள், சமையல் தவிர வேறு என்ன தெரியும்..

profile பக்கத்தில் ஏற்கனவே கொஞ்சம் கொடுத்திருப்பீர்கள். அதையே கொடுக்க வேண்டாம். இது இன்னும் விளக்கமாக இருக்க வேண்டும்.

படங்கள் கொடுக்க விருப்பம் இல்லாதவர்கள், கொடுக்க கூடாதவர்கள், தங்களின் குழந்தைகளின் படம் அல்லது பிடித்த மனிதர்களின் படம், விலங்குகள், பூக்கள் இப்படி எதாவது ஒன்று (அல்லது பல படங்களை) அனுப்பி வைக்கவும். தங்களது படத்தை அனுப்புகின்றவர்கள் எப்போதோ பள்ளியில் படிக்கும் காலத்தில் எடுத்த படத்தை அனுப்பி ஏமாற்றாமல், சமீபத்தில் எடுத்த படத்தை அனுப்பினால் நன்றாக இருக்கும் :-)

அனைத்து உறுப்பினர்களுக்கும் தனி மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். இது அதை விட சிறந்த வழியாக பட்டது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்து, அவற்றுக்கு நான் தனித்தனியாக மின்னஞ்சலில் பதில் அனுப்புவதை விட இங்கே எல்லோருக்கும் சேர்த்து விளக்கம் கொடுக்கலாம். மின்னஞ்சல் போய் சேர்ந்ததா என்ற கவலை இருக்காது.

மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால் தெரிவிக்கவும்.

அட்மின் அண்ணா,
கூட்டாஞ்சோறில் போட்டோ போடுவது எப்படி?

சுபா படத்தையும் விவரத்தையும் அவருக்கு மெயிலில் அனுப்பனும்னு நெனக்கிரேன்.,...அனுப்புங்க சீக்ரம்
தளிகா:-)

சுபா படத்தையும் விவரத்தையும் அவருக்கு மெயிலில் அனுப்பனும்னு நெனக்கிரேன்.,...அனுப்புங்க சீக்ரம்
தளிகா:-)

ரூபி?
ஆன் லைன்?
ஹஸ்பண்ட் தூங்கியாச்சா?
பாப்பா என்ன பண்றா?
போட்டோ அனுப்ப ஒரு தடவைதான் ப்ரவுஸ் பட்டன் இருக்கு அதான் சந்தேகத்தில் கேட்டேன்.இன்னும் க்ளியரா தெரியலை. பார்ப்போம். ட்ரம்ஸ்டிக் ஜோக் அருமை. என்னால் கண்ட்ரோல் பண்ணவே முடியலை.. ரொம்ப நாளுக்குப் பிறகு சந்தோஷம்.
உங்க கஷ்டம் சந்தோசம் என்கிறீர்களா?
ஆனாலும் உங்கள் கணவருக்கு மிகவும் குசும்பு.. மற்றவர் முன்னும் ட்ரம்ஸ்டிக்கை காண்பிப்பது.. எனக்கு மீண்டும் சிரிப்பை வரவழைத்தது.நன்றிகள் கோடி...

எந்த போட்டோ பத்தி கேக்குறீங்கன்னு தெரியல. குறிப்புக்கான உணவோட படமா? இல்ல உங்களோட படமா?

உணவு படத்தை சரியான அளவுல இருந்தா நீங்களே சேர்க்க முடியும். அதுக்கு லிங்க் கொடுத்து இருக்கேன். உங்க படங்கள்னா, அதை எனக்கு அனுப்பி வைங்க. (அதை சொல்ல மறந்துட்டேனோ?) உங்க டீட்டெய்ல்ஸ், படங்கள் எல்லாத்தையும் எனக்கு மெயில் பண்ணிடுங்க.. (பிரச்சனையே வேண்டாம். எந்த படமா இருந்தாலும் எனக்கு அனுப்பிடுங்க. நான் சேத்துடுறேன்.)

முகவரி பாபு இல்லேன்னா feedback அப்புறம் @ அதுக்கப்புறம் அருசுவை டாட் காம். (ச்சே. spamers கிட்டே இருந்து தப்பிக்க எப்படியெல்லாம் மெயில் ஐடியை கொடுக்க வேண்டியதா இருக்கு..)

உங்க எல்லோரோட கல்யாண அனுபங்களுக்கு(இளமை இதோ இதோ..) பதில் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இருங்க, அதை முடிச்சுட்டு வந்துடுறேன். (எனக்கும் அப்பப்ப வாங்கி கட்டிக்கலேன்னா பொழுது போகாது..)

மன்றத்தில் இன்றுல இந்த தலைப்பு காணாமப் போயிடுச்சு. அதனால, இப்படி ஒரு பதிவு கொடுத்து அதை கொண்டு வர வேண்டியிருக்கு. இல்லேன்னா நாங்க பாக்கவே இல்லேன்னு சொல்லிடுவாங்க.

கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வேண்டுகோள். தயவுசெய்து உங்களின் பயோடேட்டா(நல்ல விளக்கமாக), பிடித்தவை, பிடிக்காதவை, படங்கள் (விரும்பினால் குடும்பத்தினர் படங்கள்) நீங்கள் என்னவெல்லாம் வெளியிட நினைக்கின்றீர்களோ அனைத்தையும் அனுப்பி வைக்கவும். மேலே உள்ள பதிவில் மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளேன். அதற்கே அனுப்பிவிடவும்.

திரும்பவும் கீழ போச்சுன்னு இங்க கொண்டு வந்தேன்.
எல்லாரும் இத படிச்சவுடனே, அட்மின் அண்ணாவுக்க்கு ஒரு பதிலை பதிவு பண்ணீடுங்க. இல்லனா பாவம், திரும்ப திரும்ப இந்த பதிவ மேல கொண்டு வர வேண்டி இருக்குமே:-( .

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

//ஆகவே, கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள் தங்களைப் பற்றின தகவல்கள், தாங்கள் என்னவெல்லாம் வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அவை எல்லாவற்றையும் தெரிவிக்கலாம். முக்கியமானவை, சமையல் அனுபவம், கற்றுக்கொண்டது யாரிடம், என்ன சிறப்பு திறன்கள், சமையல் தவிர வேறு என்ன தெரியும்..

profile பக்கத்தில் ஏற்கனவே கொஞ்சம் கொடுத்திருப்பீர்கள். அதையே கொடுக்க வேண்டாம். இது இன்னும் விளக்கமாக இருக்க வேண்டும். //

இந்த தகவல்களை எப்படி , எங்கே கொடுப்பது.
உங்களுக்கு இ-மெயில் செய்யவா??

அனிதா

hi

மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரியும் விளக்கமும் மேலே உள்ள எனது பதிவுகளில் கொடுத்து இருக்கின்றேன்.

அண்ணா,

வாங்க வந்து இன்னைக்கு என்ன சமைச்சீங்கன்னு பதிவு பண்ணூங்க சீக்கிரம்.
சமைக்கலேன்னா என்ன சாப்டீங்கன்னாவது பதிவு பண்ணுங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்