மெரிச்சு - மிதித்து; தட்டு - மாடி; இன்னும் எத்தனையோ!!!!!!

வேலை நிமித்தம் நாம் எல்லா ஊர்களுக்கும் சென்று வருவதாலும், தொலைதொடர்பு பெருகி வருவதாலும் இந்த வட்டார சொற்கள் மருகி வருவது என்னவோ உண்மையே (இந்த logic எல்லா ஊருக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊருக்கு (குமரி) இது மிகவும் பொருந்தும்).

சில நமக்கே சிரிப்பை ஏற்படுத்தினாலும் கேட்பதற்கு இனிமையானவை அவை.

ஹர்ஷினியின் 'மெரிச்சு'ம் கவிசிவாவின் 'தட்டு'-ம் கேட்ட பிறகு, நம்மில் பலருக்கு தெரியாத (தெரிந்துகொள்ளவிருப்பமுள்ள) வட்டார சொற்கள் நிறைய இருக்குமென எண்ணுகிறேன்.

அடேங்கப்பா எங்கூரு பேச்ச கேட்டு எம்புட்டு நாளாச்சு.

இந்த துண்ட ( prescription) தட்டு (மாடி) ல வட்டு தர்றவர் (மருந்தாளுநர் - அட கம்பௌண்டர் தாங்க) கிட்ட குடு. அவர் இந்த குப்பி ( bottle) யில மருந்தும் எட்டு வட்டு (மாத்திரை) ம் தருவார்.

(நோயாளியிடம் மருத்துவர் சொல்லும் வசனம் இது). நிறைய மறந்துவிட்டேன்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

சமுட்டு - உதை
நுள்ளு - கிள்ளு
மாறி - அப்புறம், அடுத்து
உள்ளி - வெங்காயம்
முண்டு - துண்டு ( towel)
மரக்கறி - சைவ உணவு
பூச்சை - பூனை

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

பைய என்றால் மதுரை பாஷையில் மெதுவாக என்று அர்த்தம்

திருமணமான புதிதில் நானும் என் கணவரும் எங்காவது வெளியே செல்லப் புறப்பட்டால் என் மாமியார் கூறும் வாத்தைகள் இவை...

"பாத்து சூதானமா போய்ட்டு வாங்க,
கோளாறா பாத்து கூட்டிட்டு போய்ட்டு வாடா"(இது என் கணவருக்கு)

நெல்லைத் தமிழச்சியான நான் என்னடா இது புறப்படும்போதே கோளாறு, குழப்பம்ன்னு மதுரைத் தமிழில் பயமுறுத்துறாங்களே என்று நினைத்துக்கொள்வேன். ஆனால்
சூதானமாக=கவனமாக
கோளாறாக=எச்சரிக்கையாக
என்பது என் கணவர் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது

கல்லூரியில் படிக்கும் காலத்தில் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் இருந்ததால், நிறைய புதுப் புது வார்த்தைகளை கேட்க முடிந்தது.

கோவில்பட்டியை சேர்ந்த நண்பன் ஒருவன் கேட்டான்.
"என்ன பாபு, ஊருக்கு போவவா?"
நான் "போயேன், என்ன ஏன் கேக்குறே?"
"இல்லே நீ ஊருக்கு போவவா..?"
"!!!????"
ஊருக்கு போறீயா என்பதை அப்படி கேட்பார்களாம்.

அதேபோல் கைலியை சாரம் என்று சொல்வார்கள்.

ஒருநாள் நண்பன் ஒருத்தன் கால்ல இரத்த காயத்துக்கு மருந்து போட்டுக்கிட்டு இருந்தான். என்னடா ஆச்சுன்னு கேட்டா, சிரட்டை குத்திடுச்சுன்னான். அது என்னடா சிரட்டைன்னு கேட்டா என்னன்னு சொல்லாம, சிரட்டை தெரியாதா? சிரட்டைன்னா என்னன்னு தெரியாதா? இப்படியே திரும்பி திரும்பி கேட்டுகிட்டு இருந்தான். என் ரூம் மேட்ஸ்ம் என்னது சிரட்டை தெரியாதான்னு ஆச்சரியமா கேட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது அவங்க கொட்டாங்குச்சியைத்தான் சிரட்டைன்னு சொல்றாங்கன்னு. எனக்கு அது வரைக்கும் அப்படி ஒரு வார்த்தை தெரியலை. என்னடா பேரு சிரட்டை, பரட்டைன்னு நான் சிரிக்க, அவங்க எல்லாம் என்னடா அது பேரு கொட்டாங்குச்சி, ஒட்டடைகுச்சி ன்னு கிண்டல் பண்ண...

என் ப்ரெண்ட் சொன்னான். டி. ராஜேந்தரோட தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி பாட்டு வந்தப்பத்தான் எங்களுக்கு கொட்டாங்குச்சின்னு ஒரு வார்த்தையே தெரியும்.

இந்த கிண்டல் பண்றதுங்கிறதை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி சொல்வாங்க போல இருக்கு.

ரேக்கிறான் - கிண்டல் பண்றான்
வெடைக்காதே - கிண்டல் பண்ணாதே (இந்த வார்த்தையை ஒருத்தன் சொன்னப்பத்தான் அவன் எங்க ஊர்காரன்னு கண்டுபிடிச்சேன்.)
ஓட்டாதே (இது ரொம்ப காமனா சொல்றது.)
நக்கலடிக்காதே
குப்பியடிக்காதே

வேர்க்கடலையை, நிலக்கடலை, மணிலாக்கொட்டை, மல்லாக்கொட்டை, முத்துகொட்டை, கட(ல்)லைக்காய், இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பேர்ல சொல்வாங்க.

இப்ப நிறைய மறந்து போச்சு.

நிறைய வார்த்தைகள் மலயாளாம் தான் தமிழா இருக்கு.." ஒரு பாட்டு படிம்மா "அப்டின்னு என் சீனியர்ஸ்(நாகர்கோயிலை சேந்தவங்க கேப்பாங்க...பாட்டு சஹிக்கலன்னா "பாட்டை படிக்கிரான் பார்" நு நாம கின்டலா சொல்வோம்.

புளிச்சாறு மெத்தி மாஸ்டெர் நு ஒரு வாத்தியார் இருக்கார் கோவையில...அவர் பேர் வந்த கதை...அவர் ஊரில் புளிச்சாறுன்னா ரசம், மெத்தின்னா - எடுத்து .....அவர் சிறிவயதில் ஸ்கூலுக்கு போனப்ப வீங்கி சிவந்த கண்ணைப் பாத்துட்டு வாத்தியார் என்னப்பா கண் இப்படின்னு கேட்டாராம்...அப்ப அவர்"ஸார் என் தம்பி புளிச்சாறு மெத்தி கண்ணுல ஊத்திட்டான் ஸார்"ன்னு சொல்ல எல்லாரும் விழிக்க...அருகிலிருந்தவர் அதி விளக்க வகுப்பரையில் சிரிப்பலை..அன்றிலிருந்து அவர் பெயர் புளிச்சாறு மெத்தி..இன்னக்கி வாத்தியாராகியும் அந்த பேரில் தான் அறியப் படுரார்.

குமரி மாவட்டம் கேரளாவோடு இணைந்திருந்தது.பின்னர்தான் தமிழ் நாட்டில் சேர்ந்தது.அதனால் மலயாளம் கலந்த தமிழ்தான் பேசுவோம்.
சில வார்த்தைகள்
அயத்து போச்சு-மறந்து போச்சு
ஓர்ம இல்ல-ஞாபகம் இல்லை
கொத்த மல்லி-மல்லி(தனியா)
நல்ல மிளகு-மிளகு
வெளுத்துள்ளி-பூண்டு
வெள்ளாஞ்ஞம்-பூண்டு
கொல்ல மிளகு=மிளகாய் வற்றல்
சக்கா-பலா
ஏத்தம்பழம்-நேந்திரம்பழம்
சர்க்கரை-வெல்லம்
சாரம்-கைலி
துவர்த்து-டவல்
பஞ்ச சார-சீனி(சர்க்கரை)
குப்பி-பாட்டில்
சீலை=சேலை அல்லது துணி வகை
சமுட்டு-மிதி
மட்டுப்பா-மொட்டை மாடி
அடுக்களை-சமையலறை
குளிமுறி-பாத்ரூம்
ஆனால் நகரங்களில் இந்த பேச்சு வழக்கு குறைந்து விட்டது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்