சேமியா பாயசம் - 4

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சேமியா - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் - 4
வறுத்த முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - 5
பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - சிறிதளவு
நெய், உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வாணலியில் நெய்யும், வெண்ணெயும் ஊற்றி சேமியாவை வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை சேர்க்கவும்.
இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ சேர்த்து வேக வைக்கவும்.
சேமியா வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
இதை சூடாகவும், குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்