நம்பிக்கை

ரொம்ப நாள் இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இன்று தான் சந்தர்ப்பம் வாய்த்தது.நிறைய பேர் குழந்தை வேண்டி ,லேட்டாவதால் வருத்தப்படுவதை,டிப்ரெஷ்ன் ஆவதை அருசுவையில் படிக்கிறேன்.அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிரேன்

கல்யாணமாகி 7 வருடங்களில் 4 முறை கருகலைந்து விட்டது.ஒவ்வொரு முறை மன வருத்த முதல் உடம்பு முழுதுமாக கெட்டு விட்டது.என்ன காரணம் என்று இது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை.எல்லா டெஸ்ட் முடிவுகளும் நார்மல்.

அப்ப 5 முறையாக இப்ப கர்ப்பமானேன்.பிள்ளையார் அப்பாவிடம் வேண்டிக்கொண்டேன்.இப்ப நல்ல படியாக இதுவரை 3.5 மாதம் தாண்டி விட்டேன்.மீதியையும் நல்ல படியாக கடந்து விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

எனவே என்ன ஆனாலும் நம்பிக்கை மட்டும் கைவிடாதீர்கள்.கடவுள் நம்மை சோதிப்பார்.சோதனைகளே வேண்டாம் என்று வேண்டுவதை விட சோதனைகளை எதிர் கொண்டு முறியடிக்கும் மன பக்குவத்தை வேண்டுங்கள்.

உறவுகள் சொல்வதை பற்றி கவலைப்பட வேண்டாம்.கணவரின் ஆதரவும் அன்பும் புரிந்து கொள்ளுதலும் இருந்து விட்டால் மற்றவை வெறும் தூசு.

கடவுள் செய்வதெல்லாம் நன்மைக்கே.

Be happy and Enjoy life always

மேலும் சில பதிவுகள்