மளிகை சாமான்கள் லிஸ்ட்

மளிகை சாமான்கள் லிஸ்ட் தாருங்கள். வாரா வாரம் வாங்குவது, மாதம் ஒரு முறை வாங்குவது பற்றி லிஸ்ட் கொடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

டியர் வினோ,
லிஸ்ட் தேவை இல்லை. ஏனென்றால் லிஸ்ட் ஒவ்வொருத்தர் விருப்பத்திற்கேற்ப மாறுபடும்.
முதல் மாதம் எல்லா பொருட்களையும் தனித்தனியாக குறைந்த அளவு வாங்கி கொள்ளுங்கள். வாங்கும் பொழுதே, வாங்கும் அளவு, வாங்கும் நாள் , இவற்றை குறிபேட்டில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.
.பொருட்கள் தீரும் பொழுது அந்த நாளையும் குறித்து வைத்து பின் உங்களுக்கு தேவையான அளவு தேவையான நாட்களுக்கு
வாங்கிக் கொள்ளலாம்.

அன்புள்ள bavya

நலம். நலமறிய ஆவல்.

மிக்க நன்றி. யாரும் இன்னும் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கவில்லையே என வருந்தியிருந்தேன். உங்கள் யோசனை நன்றாக உள்ளது. உடனே செயல்படுத்துகிறேன்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சாமான் தீர்ந்து போகிறது. அதற்காக கடைக்கு போக வேண்டியதாக உள்ளது. மாதக்கணக்கில் வாங்கி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். சில பொருட்களை எப்போதாவதுதான் உபயோகப்படுத்துகிறேன். அது சில சமயம் வீணாகிவிடுகிறது.

இனி உங்கள் ஆலோசனைப்படி செய்துப் பார்க்கிறேன். நன்றி.

மாதத்தின் இறுதியில் அடுத்த மாதத்திற்க்கு என்ன என்ன பொருள் வேண்டும் என்று யோசித்து ஞாபகம் வரும் போது அப்பொழுதே ஒரு paperல் எழுதி வைத்து கொள்ளவும்.

lakshmi priya

டியர் வினோதா(பெயர் சரியா?)இப்பொழுதான் உங்கள் பதிவை பார்த்தேன்...ஒரு டைரி அல்லது நோட்டை எடுத்துக்கங்க அதில் பிரீ டமின் போது சமையலுக்கு என்னலாம் தேவைப்படுமோ அதைலாம் ஒன் பை ஒன்னா அனைத்தையும் எழுதி வைத்துக்கங்க....பின் மளிகை சாமான் வாங்கும் நேரம் வரும் பொழுது அதை பார்த்தாலே போதுமானது மறந்தவை இருந்தாலும் அதை பார்த்து தெரிஞ்சுக்கலாம் அப்புறம் என்ன பேப்பர்,பேனா எடுத்து தேவையானதை எழுதி கடையில் கொடுத்துடலாம்...

அடுத்து முக்கியமாக எப்பொழுதும் நம் கிச்சனுல் சிரிய பேப்பர் அடங்கிய ஒரு நோட்டு,ஒரு பேனா வைத்து இருக்கனும்...ஏற்கனவே மளிகை வாங்கி ஏதாவது இரு பொருள் முடியும் ஸ்டேஜ் வாரப்ப அதை அந்த பேப்பரில் நோட் பண்ணிட்டு வாங்கிக்கலாம்...மாதம் ஒரு முறைன்னு மொத்தமாக வாங்குவ்வதுதான் செலவு,அளைச்சல் மிச்சம் ஏற்படும்...வீண் டெங்ஷன் இருக்காது..இதுதான் நான் செய்வது டிரை பண்ணி பாருங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மளிகை சாமான்கள் லிஸ்ட்
இந்த வெப்சைட்டில் பார்க்கவும்

http://udtgeeth.blogspot.in/2010/12/blog-post_20.html

http://www.aarathy.org/res/requirements.html

மிக்க நன்றி தோழி

நான் நானாக இருப்பதில் கர்வம் கொள்கிறேன் :)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி :)

மேலும் சில பதிவுகள்