இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

எங்க வீட்டுல இன்னிக்கு ஒரு புக்குல இருந்த குறிப்ப படிச்சுட்டு செஞ்ச முருங்கைக்காய் புளிகுழம்பு, வாழைக்காய் பெப்பர் ஃப்ரை. குழம்பு சுமாரா இருந்தது, எனக்கு கொஞ்சம் புடிச்சது, அவருக்கு சுத்தமா புடிக்கல. ஃப்ரையும் அப்படித்தான் ஆனாலும் ஓகே. இனிமேல் வழக்கம் போல அறுசுவை தான் நமக்கு பெஸ்ட் (காலை 9 மணிக்கே எந்திரிச்சா அதுக்கு மேலே என்ன செய்ய முடியும்).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்றைய மெனு
தோசை, தேங்காய் சட்னி - அவருக்கு மட்டும் காலை டிபன்

மோர்க்குழம்பு, உருளைக்கிழங்கு வறுவல், தக்காளி ரசம் மதிய சாப்பாட்டுக்கு.
மெனு எல்லாருக்கும் ஓகே

இரவு - அதை ட்ரெயின்ல போகும்போது யோசிச்சுக்கலாம்.

ஜெ

ஜெயந்திக்கா உங்க பதிவை பார்த்து ஒரு கணம் திகைச்சு போயிட்டென்.நீங்க 'ஜெ' அப்படீன்னு போட்டுருந்தீங்களா அட 'ஜெ(யலலிதா) அம்மா'வும் அருசுவை உறுப்பினராயிட்டாங்களான்னு நினைச்சேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செல்வி அக்கா ...சேம் பின்ச் :)
நானும் சொதப்பலோ சொதப்பல்...முட்டை குழம்பு , கபேஜ் பொரியல் செய்யலாம் னு நினச்சேன்
முட்டைகோஸ் பொரியல் அடுப்புல வச்சு...மெய்மறந்து அருசுவை படிச்சு...பாத்திரம் கருகி.. பாதிக்கு மேல கொட்டிட்டேன்.அதனால் மூட் அவுட்...

இன்னைக்கு எங்களுக்கு நேத்து வச்ச சாம்பார் , தீஞ்சு போன பொரியல். ஆம்லட் செய்யனும் . (அதயாவது உருப்படியா செய்னு சொல்றீங்களா...சரி போறேன் )

அனிதா

hi

ஹாய் அனி,
கொஞ்சம் மெல்லமா கிள்ளக் கூடாதா.. ரத்தமே(!) வந்திருச்சு. ஆம்லெட்டும் சரியா வரல்லேன்னா முட்டையில்லாத ஆம்லெட் போடு. நல்லா இருக்கும்.
நல்ல வேளயா காலை வேளைல அறுசுவை ஓப்பன் பண்றதில்ல. இல்லன்னா இங்கேயும் சேம் பின்ச் தான். இரவில அறுசுவைக்கு வந்தா எப்ப லாக் அவுட் ஆவேன்ன தெரியாது. எப்படியிருந்த செல்வி இப்படியாயிட்டாளேன்னு சொல்றாங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஆம்லெட் ஒழுங்கா போட்டுட்டேன் ....அது வரை தப்பிச்சேன் ...
என்னை அனி கூப்பிடீங்களா...? எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. யாரும் கூப்பிடதே இல்லை....

அனிதா

hi

அன்பு தங்கை ஹர்ஷினி எப்படி இருக்கீங்க? அறுசுவையின் பயனறிந்து இந்த நல்ல தலைப்பை கொடுத்துள்ளீர்கள். தங்களின் பதிவிளிருந்து நான் புரிந்துக் கொண்டது என்னவென்றால் அறுசுவையிலுள்ள சமையர் குறிப்புகளிலிருந்து யார் யார் வீட்டில் என்னென்ன சமைத்தார்கள், அதன் அனுபவங்கள் போன்ற விசயங்களை தான் தாங்கள் எதிர் பார்த்தீர்கள் என்று நினைத்தேன், சரியா. ஆனால் பதிவுகள் அனைத்தும் வீட்டில் அன்றைய தினம் என்ன சமைத்தார்கள் என்று மட்டும் இருக்கின்றது. ஆனால் அவை அறுசுவையின் குறிப்பா, என்று சொல்லப்படவில்லை.ஆகவே அதை உங்களிடமே கேட்டு விடலாமே என்று நினைத்தேன்.ஒரு வேளை நான் அவ்வாறு புரிந்துக் கொண்டேனா என்று தெரியவில்லை.

இந்த வாரம் என்ன செய்யலாம் என்று கூறவும், நிச்சயமாக அந்த குறிப்பிற்கு பின்னூட்டத்தையும் அங்கு கொடுத்துவிடலாம். இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாமா? நானும் சேர்ந்துக் கொள்கின்றேன், கூட்டாஞ்சோறு என்றால் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நன்றி.

டியர் அனி
எந்த வேலை செய்தாலும் நீங்கள் மற்றொரு வேலையை பார்க்கவெண்டும் என்றால் பிரச்சனையே இல்லை தீயை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள் ரொம்ப அடிபிடிப்பதை த்விர்க்களாம்.
ஜலீலா

Jaleelakamal

இன்று என் கைவண்ணம்
காலையில் தோசை அதற்கு கார சட்னி
மதியம் சாப்பாடு ,பருப்பு,ரசம்,வெண்டைக்காய் புளிகூட்டு,காலிபிளவர் வறுவல்,சப்பாத்தி,கத்தரிக்காய் சாப்ஸ்
இரவு தோசை , மீதி உள்ள அனைத்து பொருட்களையும் காலி செய்தாயிற்று.
ஓவர் டயர்ட்.
வேலையை முடித்து விட்டு அரங்கம் வந்தால் அரங்கமே காலி.

காலியில்லை சுபா நன இருக்கேன் இங்க.ஆனா எப்ப வேனா போயிடுவேன்..பதில் போட்டு ரெச்பொண்ட் பன்னாட்டி நான் இல்லன்னு அர்த்தம்

மேலும் சில பதிவுகள்