இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

ரோஸ் நான் நலம், நீங்களும் நலம் தானே?

சுபா,எல்லாரும் 20/20 மேட்ச் பார்த்துட்டு இருக்கிறதால தூங்கும் நேரம் இன்னும் வரல...தூக்கமெல்லாம் அப்புறம் தான். காலைல 5.30 க்கு எழுந்திரிக்கணும்னு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு

அழைப்பு வந்த இனி இங்க ஒரு வார்த்த் பேசக் கூடாது மூச்ச்...ஓடி போய் படுங்க

தளிகா:-)

வீட்டில் இரண்டும் தூங்க ஆரப்பித்துவிட்டாங்க.இப்போ பாசமாத்தான் அழைப்பு வந்துகிட்டு இருக்கு அது மோசமா ஆகுறதுக்கு முன்னால போகணும்.

சரி எல்லாரும் போங்க..நானும் போரேன்..சாப்டுடு வரேன்..இங்க அரடை அடிச்சா அப்ரம் குடல் கறுகிப் போயிரும்

தளிகா:-)

மூன்று நாளா ஆப்பிளை கட் பன்னி வைத்து வேஸ்ட் ஆகுது ஆகையால் மெல்லியதாக கட் பன்னி பஜ்ஜி பன்னிவிட்டேன்
இன்னும் நிரைய பேச இருக்கு முடியவில்லை கம்புட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு
முட்டை வட்லாபத்திற்கு, இடியாப்பம் அன்னப்பூரனாவில் வாங்கிக்கொன்டேன்

Jaleelakamal

சரி நளைக்கு பார்க்கலாம் அத்தான் வேறு சத்தம் போடுகிறர்

Jaleelakamal

இப்ப தான் நியூஸ்ல நாலை மதியம் முதல் குளிர் காலம் தொடங்கும்னு வானிலை அறிக்கை சொல்லியிருக்குன்னு சொன்னாங்க.....50 பக்கம் இருக்குற டெம்பெரேசர் இனி 35ஆ இந்த வாரம் மாறி அப்ரம் மெல்ல 15 க்கு மாறிடுமாம்.....ஒரே சந்தோஷம்

தளிகா:-)

உங்க பதிவை இப்ப தான் பாத்தேன்.
ரொம்ப தாங்க்ஸ் :)இனிமே அடுப்பை சிம்மல வச்சே செய்ரேன் :)

அனிதா

hi

எங்க வீட்டில் இன்று
சப்பாத்தி,வடக கார குருமா,முள்ளங்கி கீரை பொரியல்,சாதம், சாம்பார் ( திவாகருக்கு, என் ப்ரண்ட் கொடுத்தது), தயிர் , வடகம் அவ்ளோதான்

வியாழன் அன்று டின்னருக்கு ,
இட்லி,பொங்கல், சாம்பார்,சட்னி.
சப்பாத்தி,சிந்திபாஜி,கத்தரிக்காய் சாப்ஸ்
செய்தேன்.
சனிக்கிழமை அன்றும் (இன்றும்) டின்னர் உள்ளது.
இன்று காரபனியாரம்,இனிப்பு பனியாரம் , தேங்காய் சட்னி
சைவ கொத்து சப்பாத்தி , வெங்காய தக்காளி கறி...
மசாலா தோசை , வெங்கார சட்னி...
இவ்ளோதான்

மேலும் சில பதிவுகள்