இந்த நாள் இனிய நாள் - சமையல் பக்கம் :-)

ஹாய்,

எல்லாம் இங்க வந்து இன்னைக்கு என்ன சமையல் பண்ணீங்கன்னு போடுங்க. யார் யாரெல்லாம் சமைக்காம ஓபி அடிக்கறோம்னு தெரிஞ்சிப்போம்.
அருசுவையை பாத்து யாரெல்லாம் சமச்சாங்கன்னும் தெரியும். எந்த குறிப்பு,

இந்த வார பெஸ்ட் குறிப்புன்னு நாமலே தேர்ந்தெடுக்கலாம். அதாவது அட்லீஸ்ட் வாரம் ஒரு குறிப்பாவது நாம அருசுவை.காமில் இருந்து எடுத்து சமைத்து அதற்கு பின்னூட்டம் அளிக்கலாம். முடிஞ்சா எல்லோரும் ஏதாவது ஒரு நாள் முடிவு பண்ணி ஒரே டிஷ் பண்ணலாம். எங்கெங்கோ இருந்தாலும் நாமலும் ஒண்ணா சமச்சு கூட்டாஞ்சோறு சாப்பிடலாம். வாங்க மக்களே! வாங்க!!

நான் சொல்ல வரர்த ஒழுங்கா சொன்னேனான்னு தெரியல. ஆனாலும் ஓரளவுக்கு எல்லார்க்கும் புரிஞ்சிருக்கும்னு தான் நினக்கறேன்.

ஜெயந்தி
மோர் குழம்பு, உருளை வறுவல், தக்காளி ரசம் நான் கொடுத்துள்ள ரெசிபியை டிரை பண்ணி பாருங்களே,
நேற்று நைட் சஹருக்கு எங்க வீட்டில் மோர் குழம்பு, உருளை வறுவல், சிக்கன் பிரை.
ஜலீலா

Jaleelakamal

பானு, குறிப்புகளைப்பார்த்தேன். உருளைக்கிழங்கு கறி நான் செய்வது போல்தான். மோர்க்குழம்பு, ரசம் கொஞ்சம் வித்தியாசம். கண்டிப்பாக உங்க முறையில செய்துட்டு சொல்றேன். அப்புறம் நீங்கள் நல்ல முறையில் நோன்பு வைக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்