இடுப்பு வலி நீக்க ஆலோசனைகள் தாருங்கள் சகோதரிகளே,

வணக்கம்.
நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன்.
எனக்கு மாத விலக்கில் எவ்வாறு இடுப்பு வலி இருக்குமோ அது போன்று உள்ளது.
எதனால் வலி இருக்கிறது என தெரிந்தவர்கள் கூறுங்கள் சகோதரிகளே
மேலும் வலி குறைய, வழி வகை தாருங்கள்.

தங்களின் விரிவான மற்றும் விரைவான பதிலுக்காக காத்திருக்கும் சகோதரி.
அம்மு.

வாழ்த்துக்கள் அம்முகுட்டி.

காலை வணக்கங்கள்.

கிழங்கு வகைகள் உண்வதை தவிர்த்து பூண்டு அதிகமாக சேர்த்து பாருங்க்கள். எனக்கு வாழைக்காய் சாப்பிட்டாலும் இடுப்பு வலிக்க ஆரம்பிச்சுடும். உடம்ப நல்லா பாத்துக்கோங்க. நல்லா தூங்கி, நல்லா சத்துள்ள உணவா சாப்பிடனும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மருத்துவரின் ஆலோசனையின்றி ஃபாலிக் ஆசிடு சாப்பிடலாமா?

நன்றி ஹர்ஷினி அவர்களே.

ஃபாலிக் ஆசிட் சாப்பிடலாம். அது குழந்தைக்கு நல்லது. டாக்டரின் அறிவுரையின் பேரில் எந்த அளவு சாப்பிடவேண்டும் என கேட்டறிந்து சாப்பிடவும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இஞ்சி பூண்டு சேர்த்துக் கொண்டால் எதாவது பாதிப்பு வருமா?

எத்தனை நாள் கழித்து மருத்துவரிடம் செல்வது?

இஞ்சி பூண்டு சேர்த்துக் கொண்டால் ஒரு பாதிப்பும் இல்லை. உண்மையில் இஞ்சி வாமிட்டிங்கை கண்ட்ரோல் பண்ணும்.

டாக்டரிடம் ஒன்றரை மாதம் ஆனவுடன் செல்லுங்கள். உங்களுக்கு தெரிந்தவுடனெயே செல்லலாம்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வணக்கம் அம்மு
இடுப்புவலி இருந்தால் முதலில் உடம்பை வருத்திக்க்காமல் அப்ப்டியே படுத்து ரெஸ்ட் எடுங்கள்.
இஞ்சி பூண்டு எதில் சேர்த்துக் கொண்டீர்கள்
ஜலீலா

Jaleelakamal

அம்மு
இது வாந்திக்கு

முழுதனியாவை ஊற வைத்து அரைத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து தேன் (அ) சர்க்கரை கலந்து குடிக்கவும்.

ரொம்ப சூடான ஐட்டம் சாப்பிட வேண்டாம்.

புதினா தொவையல் செய்து அப்ப அப்ப சப்பிடுங்கள்

ஜலீலா

Jaleelakamal

டியர் அம்முவுக்கு,
நான் மருத்துவரிடம் சென்றதே வயிற்று வலிக்காகத்தான்.
ஆனால் கர்பமாக இருக்கிறேன் என்று சொன்னார்கள்.
எப்படி இருக்கும்?
இந்த இடுப்பு வலி என்பது உங்கள் கர்பப்பை சற்று பெரிதாகி கொண்டு உள்ளது அல்லவா? அதுதான் வலிக்கு காரணம்.
தினமும் 1கிலோமீட்டராவது நடக்கவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.
ஆரங்சு பழம்,மாதுளை,ஆப்பிள் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.
ஃபோலிக் ஆசிட் என்பது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடலாம் .ஆனால் அவரை கலந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. வருங்கால சந்ததியினரின் உயிர் அல்லவா???
வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்