வாழைக்காய் புட்டுக் கறி

தேதி: September 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் -- 2 என்னம் (வேகவைத்து மசித்தது)
சிறிய வெங்காயம் -- 1 கப் (வட்டமாக அரிந்தது)
தேங்காய் துருவல் -- 1/2 கப்
பச்சை மிளகாய் -- 3 (பொடியாக் நறுக்கியது)
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 5 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தளித்து பச்சைமிளகாய் ,கறிவேப்பிலை போடவும்.
பின் வெங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
3 நிமிடத்திற்குப் பிறகு உப்பு ,வாழைக்காய் சேர்க்கவும்.
மீது உள்ள எண்ணைய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
மேலே தேங்காய்துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்