ஜட்ஜஸ்ஸின் புலம்பல்கள்

சென்ற வார மன்ற பதிவுகளை, தேர்வு செய்வதில் இருக்கின்ற ஒரு சில சங்கடங்களை இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்.ஆகவே மன்றத்தினர் பதிவுகளை பதிக்கும் பொழுது, கீழ்காணும் புலம்பல்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன், ஆடர்....ஆடர்....ஆடர்.

1. ஆங்கிலத்தில் எழுதும் பதிவுகள் எதுவும் தேர்வில் சேர்த்துக் கொள்ள பட மாட்டாது.இதனால் நல்ல சுவாரசியமான பதிவுகளை தவிர்க்கும் பொழுது வருத்தமாக உள்ளது.

2. தலைப்புகளையும் தமிழிலேயே எழுதுங்கள். கருத்துக்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதும் தலைப்புகளால் அவை பரிசீலனைகுட்படுத்த பட மாட்டாது.(ஜெயந்தி அக்கா நான் சொல்வது சரி தானே...)

3. பதிவுகளை முக்கியமாக ஆலோசனைகளை ஒரே பத்தியாக எழுதாமல், சிறு சிறு பத்தியாக இடைவெளி விட்டு எழுதுவதால் வாசிப்பவர்களுக்கு சுலபமாக புரிந்துக் கொள்ளவும், முடிவெடுக்கவும் உதவும்.

4. பெயர்களை தலைப்பாக போடுவதை தவிர்த்து, பதிவுகளின் சாராம்சத்தை குறிப்பிடும்படியான வார்த்தையாகவோ அல்லது வாக்கியமாகவோ தலைப்பாக போடுவதால் பல பட்டங்களை தட்டிச் செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே மன்றத்தினரே வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

5. ஒவ்வொறு இதழிலும் 90 பதிவுகள் ஆனவுடன் அத்ற்கடுத்த பதிவை போடுபவர் அதன் தொடர்ச்சியாக எண்கள் இடப்பட்டு, புதியதாக மற்றொறு புதிய இதழை தொடங்குவது நல்லது. இதனால் பக்கங்களை விரைவாக பார்வையிட ஜட்ஜஸ்க்கு வசதியாக இருக்கும்.

இன்னும் வரலாம்........

ஒரு ஸ்பெஷல் புலம்பல்: பக்கங்களை திறப்பதற்க்கு எவ்வளவு நேரமெடுத்தாலும் ,அட்மின் தம்பி..... நா புலம்ப மாட்டேன் ஆனா..... அலுதுருவேன்.

ஆங்கிலத்தில் பதிவு போடுபவர்களை "அலட்டல் ராணி" யாக தேர்ந்தெடுப்பதாக அட்மின் சொன்னங்க. அதனால ஒரு சிலர் ஆங்கிலத்தீல மட்டுமே பதிவு போடறாங்கன்னு நினைக்கறேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஆமாம் உண்மை தான்,அட்மின் அந்த பட்டத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஆனால் அது தமிழில் டைப் செய்யத் தெரிந்திருந்தும் ஆங்கிலத்தில் பதிவுகளை பதிப்பவர்களுக்காக ஏற்ப்படுத்திய பட்டம். ஆனால் நான் குறிப்பிட்டது தமிழில் முயற்ச்சி செய்யாமல் இருப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கட்டுமே என்று எழுதினேன். பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு நாள் தானேம்மா இருக்கின்றது. அதற்குள் ஏதாவது நல்லது செய்து விடலாமே என்று தான் எப்டி நம்ப புலம்பல் ?

வணக்கம் மனோகரி மேடம் ,நலமாக இருக்கிறீர்களா?(உங்க ஸ்டைல்???).

உங்கள் புதிய பதவிக்கும்,பதவிக்காலத்தில் நீங்கள் எற்படுத்த நினைக்கும் மாற்றங்களுக்கும் என் வாழ்த்துக்களும் வரவேற்பும் உண்டு.

அலட்டிக்காம ஆங்கிலத்தில் அரட்டை அடிக்கும் அக்கா,தங்கைகள்(அலட்டல் ராணிகள்) கொஞ்சமாவது மாறினா சந்தோஷம் தானே?

வணக்கம் விதுபா வாழ்த்தியமைக்கு நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க? நானா.... ஜட்ஜ் பதவி ஏற்கும் வரை நலமுடன் தான் இருந்தேன். அதன் பிறகு தான் மானிட்டரை முறைத்து முறைத்து பார்த்து வீட்டில் இருப்பவர்களை சும்மா பார்த்தால் கூட என்னம்மா அப்படி முறைக்கிரீங்க என்று பிள்ளைகளும், ஏன்டீ நான் என்ன சொல்லிட்டேன்னு அப்படி முறைக்கிரே என்று என்வூட்டுக்காரரும் என்னை முறைக்கின்றார்கள். ஆண்டவா இன்னும் இரண்டே நாள் தான், என்னை மட்டும் காப்பாத்துடா சாமி. சரி விது..... நா போய்ட்டு வரேன் வூட்ல நெரீய்ய..... வேலை இருக்குது.

யாரை இப்படி திட்டறீங்கனு பார்க்க அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்.. சே இவ்ளோ தானா விஷயம் சப்னு போச்சு. :-)

அன்புடன்,
ஹேமா.

பி.கு:ஆமா பேசணும்னு இருந்தாலும் பேசாம இருக்கற என்னை போல ஆட்களுக்கு பட்டம் கிடையாதா? :-(

அன்புடன்,
ஹேமா.

மனோகரி அக்கா, ஒரு பக்கத்தை ஓபன் பண்ணிட்டு போயி ஒரு தூக்கமே போட்டுட்டு வரலாம் போல இருக்கு. இதுல நீங்க எல்லா பக்கத்தையும் ஓபன் பண்ணி எல்லாருக்கும் பட்டம் வேற குடுக்கனுமா!! புடியுங்க இந்த 'பொறுமையின் சிகரம்' என்ற பட்டத்தை!

கனம் கோர்ட்டார் அவர்களே, என் கட்சிக்காரர் முறைக்காமலே முறைத்தார் என்று பொய் வழக்குப் போட்ட அவருடைய குடும்பத்தினருக்கு ஏற்ற சமாதானம் சொல்லி, என் கட்சிக்காரருக்கு "முறைக்காமலே முறைத்த மனைவி குல மாணிக்கம்" என்ற பட்டம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

ஹேமா, அடிக்கடி பேசாம உம்முன்னு இருந்தா ஊமைக்கோட்டான்,உம்மணாமூஞ்சின்னு பட்டம் கொடுத்துடப்போறாங்க...பார்த்தும்மா...

ஹா.. ஹா.. ஹா... ஹா.... சிரிப்பை அடக்க முடியவில்லை. காப்பி புரையேறி விட்டது.

மனோகரி மேடம்,
பாவம் அவங்களே வேலை செஞ்சு ,திட்டு வாங்கி வாங்கி திரைமறைவு வியாபாரம் (கம்ப்யூட்டர் திரைமறைவு தான்) செய்து டயர்டாக இருக்கிறார், அவரை வம்புக்கு இழுக்கிறார்களே சக தோழிகளே!!

மேலும் சில பதிவுகள்