தீயல்

தேதி: September 21, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 100 கிராம்
முருங்கைக்காய் - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
மிளகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
தனியா - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


 

கத்தரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 5 சின்ன வெங்காயம், கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
புளிக்கரைசல் தண்ணீர் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். இன்னொரு வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மிளகை போட்டு வெடிக்க விடவும்.
மிளகு வெடித்ததும் மிளகாய் வற்றல், தனியா, கறிவேப்பிலை, 5 சின்ன வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
இப்போது தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் டார்க் பிரவுன் நிறமாகும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்களை தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். காய் வெந்ததும் அரைத்த கலவை சேர்த்து உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும்.
நன்றாக கொதித்ததும் மூடி வைத்து குறைந்த தனலில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தாளித்த கலவையை குழம்பில் கொட்டி இறக்கவும். சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சுவையாக இருக்கும்.


சேனை கிழங்கு, வெண்டைக்காய், பாகற்காய் பயன்படுத்தியும் செய்யலாம். கொண்டைக்கடலை (சன்னா) குக்கரில் வேக வைத்து சேர்த்தும் செய்யலாம். காய் எதுவும் இல்லாவிட்டாலும் சுண்டைக்காய் வற்றல் (எண்ணெயில் வறுத்து சேர்க்க வெண்டும்),கொண்டைக்கடலை சேர்த்து செய்யலாம். தனியே பூண்டு போட்டும் செய்யலாம். இந்த குழம்பு தினமும் சூடாக்கி வைத்தால் ஃப்ரிட்ஜ் இல்லாமலும் 1 வாரம் வரை வைத்திருக்கலாம். பயணத்திற்கு எடுத்து செல்ல ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

கவி,
நேற்று இரவு தீயல் குழம்பு செய்தேன்,நல்ல சுவையாக இருந்தது,சுலபமும் கூட.நன்றி கவி.

ஹாய் விஜி தீயல் செய்து சாப்பிட்டீங்களா?சுவையா இருந்தது கேட்டு ரொம்ப சந்தோஷம் பா.ரொம்ப நன்றி விஜி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா உங்கள் தீயல் குழம்பு செய்தேன்
நல்ல ருசியாக இருந்தது கவி.நன்றி:)

அன்புடன்,
ஜாஸ்மின்.

அன்பு ஜாஸ்மின் தீயல் செய்து பின்னூட்டம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.நன்றி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா

நம்ம ஊர் இஞ்சி தீயல் + நாரந்தி தீயல் சொல்லித் தாருங்கள், பிளீஸ்.

ஜெயா