மலாய் குல்பி

தேதி: September 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் -- 1 லிட்டர்
கார்ன் ப்ளார் -- 50 கிராம்
சர்க்கரை -- 1கப் (பொடித்துக் கொள்ளவும்)
க்ரீம் -- 1கப்
ரோஸ் எசன்ஸ் -- 6 துளி
ஏலக்காய் பொடி -- சிறிதளவு
முந்திரி, பாதாம்,பிஸ்தா -- 2 டேபிள்ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)


 

பாலை காய்ச்சி பாதி அளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃப்ளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.
மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.
அரைத்த விழுதுடன் க்ரீம்,எசன்ஸ்,ஏலக்காய் தூள்,பருப்பு வகைகள் கலந்து குல்பி மோல்டில் நிரப்பி ப்ரீசரில் வைக்கவும்.
கெட்டியானதும் எடுத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்