அறுசுவை குறிப்பில் சமையல் :-)

//அன்பு தங்கை ஹர்ஷினி எப்படி இருக்கீங்க? அறுசுவையின் பயனறிந்து இந்த நல்ல தலைப்பை கொடுத்துள்ளீர்கள். தங்களின் பதிவிளிருந்து நான் புரிந்துக் கொண்டது என்னவென்றால் அறுசுவையிலுள்ள சமையர் குறிப்புகளிலிருந்து யார் யார் வீட்டில் என்னென்ன சமைத்தார்கள், அதன் அனுபவங்கள் போன்ற விசயங்களை தான் தாங்கள் எதிர் பார்த்தீர்கள் என்று நினைத்தேன், சரியா. ஆனால் பதிவுகள் அனைத்தும் வீட்டில் அன்றைய தினம் என்ன சமைத்தார்கள் என்று மட்டும் இருக்கின்றது. ஆனால் அவை அறுசுவையின் குறிப்பா, என்று சொல்லப்படவில்லை.ஆகவே அதை உங்களிடமே கேட்டு விடலாமே என்று நினைத்தேன்.ஒரு வேளை நான் அவ்வாறு புரிந்துக் கொண்டேனா என்று தெரியவில்லை.

இந்த வாரம் என்ன செய்யலாம் என்று கூறவும், நிச்சயமாக அந்த குறிப்பிற்கு பின்னூட்டத்தையும் அங்கு கொடுத்துவிடலாம். இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாமா? நானும் சேர்ந்துக் கொள்கின்றேன், கூட்டாஞ்சோறு என்றால் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.நன்றி.

//

மேடம், நீங்க நினச்சது சரி தான். நான் அப்படி தான் எழுதினேன். அதேபோல அவர்கள் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து அது சூப்பராக வந்திருந்தால், அதையும் இங்கே பகிர்ந்துகொண்டு, அதன் குறிப்பையும் குடுக்கலாம் என கூறி இருந்தேன். எனக்கே நான் எழுதினதை படிச்சப்ப ஏதோ புரியாத மாதிரி புரிஞ்ச மாதிரி இருந்துச்சு.

நீங்க தானே இந்த வார ஜட்ஜ். அதனால நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க. நாம அனைவரும் சமைத்துபார்த்து இங்கே பீன்னூட்டம் அளீக்கலாம்.

மனோகரி மேடம்,

சொல்லுங்க என்ன இனிப்பு சமைக்கலாம், உடனே சமச்சு பாத்திடலாம்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹலோ டியர் அப்படீங்களா நானே தேர்ந்தெடுக்கவா!!!சரி, என்ன இனிப்பு தானே, நமக்கெல்லாம் சீனியர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களின் குறிப்பான காய்கறி கீரிலிருந்தே ஆரம்பிக்கலாம். எல்லோரும் ஒரு வாரம் டைம் எடுத்துக் கொள்ளலாம் சரியா.

இவ்வாறு ஒவ்வொறு வாரமும் தேர்வுச் செய்யும் குறிப்புகளை செய்துப் பார்த்தவர்கள் அதன் பின்னூட்டத்தை குறிப்பு கொடுத்தவருக்கு அனுப்பி விடலாம்.

இவ்வாறு தேர்வுச் செய்யும் குறிப்புகள் சமைக்க பிடித்திருந்தும் ஒரு வேளை முடியாமல் போன காரணங்களை அதாவது தேவைப்படும் பொருட்கள், அதன் தட்டுப்பாடு, அல்லது அதற்கு பயன்படுத்தும் பொருட்களின் உபகரணங்கள் போன்று, மற்றும் சமைத்தவர்கள் அதன் அனுபவத்தை இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம்.

ஒவ்வொறு வாரமும் அந்த வாரத்திற்கான ஜட்ஜே கூட குறிப்பை தேர்வுச் செய்து விடலாம்,இது உங்களுக்கு ஒகே என்றால் அதை அட்மினிடம் தெரிவித்துவிடலாம். அல்லது யார் வேண்டுமானாலும், முதலில் குறிப்பை தேர்வுச் செய்து இங்கு பதிவாகின்ற முதற் குறிப்பையே அந்த வாரம் சமைக்கலாம். இதில் உங்கள் கருத்தை எதிர்ப் பார்க்கின்றேன். இன்னும் வேறு ஏதாவது கூற வேண்டுமென்றால் அதையும் குறிப்பிடவும்.

அடுத்த அறுசுவை அரசி பட்டத்தை யார் தட்டிச் செல்வார்கள் என்று தெரியவில்லை. ஏகப்பட்ட பதிவுகளை கணக்கிட வேண்டும் போல் உள்ளது. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை விட, நமது கடந்த வார மன்றத்தினரின் பட்டமளிப்பு முடிவுகளின் எதிர்ப்பார்ப்புகள், அதிகமாக இருக்கும் போல் தோன்றுகின்றது, எனக்கே ஒரே திரில்லிங்காக உள்ளது. உங்களுக்கு எப்படி? ஒரே ஒரு க்ளூ உங்களுக்கு மட்டும் தருகின்றேன் அதாவது எனக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பாணி பிடித்திருக்கின்றது. ஒகே ஹர்ஷ் மீண்டும் சந்திக்கலாம் நன்றி.

மனோகரி மேடம், நான் ரெடி. நீங்கள் கூறியபடியே காய்கறி கீர் செய்யலாம், மேடம்.
அப்புறம் உங்க ஐடியா ரொம்ப சூப்பரா இருக்கு. நாம சமச்ச அந்த சூப்பர் குறிப்பு யாரும் சமைக்கலாம்ல அந்த வாரம் வந்த, இன்னும் பல பேர் அந்த குறிப்பை பாத்து பண்ணூவாங்க இல்ல. சுப்பர் ஐடியா. அப்படீயே பண்ணலாம்! இப்பவே ஜாலீயா இருக்கு!!!

ஹையா! எனக்கு தெரிஞ்சிடுச்சே.
உங்க க்ளு வெச்சு நானும் கண்டுபிடிச்சிட்டேன்.
இன்னமும் ஒரு நாள் இருக்கா, தேர்வு செய்ய. ஆமா, எங்களுக்கும் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு. இந்த வாரம் இன்னும் கொஞ்சம் புதுசா வேற தலைப்புகள் வரப்போவுது இல்ல. யார் அந்த அலட்டல் ராணியோ. நீங்க ஏதேனும் புதுசா பட்டம் தரப்போறீங்களா?
மேடம் இந்த வாரம் குறிப்பு கொடுத்தவங்கள்ல யார் குறிப்புக்கு அதிகமா நல்ல பின்னூட்டம் வந்திருக்கோ, அவங்களுக்கும் ஒரு பட்டம் கொடுங்க. சும்மா, ஒரு ஐடியா. நான் வரேன். போய் தூங்கனும். வூட்டுக்காரர், பொண்ணு கிட்ட இருந்து அழப்பு வந்தாச்சு.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு சகோதரி மனோஹரி,
நலமா? ரொம்ப நாளாச்சு உங்களோட பேசி. டைகர் எப்படியுள்ளான்? பிஸினெஸ் எப்படி போய்யிட்டிருக்கு?
ரொம்ப அருமையான ஐடியா சொல்லியிருக்கீங்க. ஒரு சின்ன திருத்தம். ஒரு வாரத்திற்கு ஒரு குறிப்புங்கிறது ரொம்ப குறைவா தோணுது. தம்பி பாபு வேற 6000 குறிப்புகளுக்கு மேலே வெச்சிருக்கேன்னு சொல்றாரு. அதனால வாரம் ஒருமுறை ஒரு இனிப்பு, ஒரு காரம், ஒரு சிற்றுண்டி, ஒரு குழம்பு, ஒரு பக்க உணவு என்று வைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் அதிகமான குறிப்புகளை நாம் செய்து பார்க்க முடியுமே. எப்படியும் தினமும் மேற்சொன்ன வகைகளில் ஏதேனுமொன்று செய்யத்தான் போகிறோம். எனவே இன்னமும் அதிகமான குறிப்புகளை சேர்த்துக் கொண்டோமானால் பல்வேறுபட்ட குறிப்புகளையும் சகோதரிகள் செய்து பார்க்க ஏதுவாகவிருக்குமென நினைக்கிறேன். அதுபோல் செய்து பார்க்கும் சகோதரிகள் அதன் குறிப்புக்கு பின்னோட்டம் கொடுக்கும் பொழுது குறிப்பு கொடுக்கும் சகோதரிகளுக்கும் உற்சாகமாகவிருக்கும். மாற்றுக் கருத்து ஏதேனுமிருந்தால் சொல்லுங்கள்.
பிஸினெஸ், வீட்டு வேலைக்கு நடுவே ஜட்ஜாவும் இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தங்கை ஹர்ஷினி, தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன். எனது ஆலோசனையை ஏற்றுக் கொண்டதற்கு மிக்க நன்றி. கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள், சகோதரி செல்வியிடமும் கலந்துரையாடி விட்டு முடிவெடுத்து விடலாம் ஒகே. காய்கறி கீருக்கான தேவையான பொருட்களை இன்னும் நான் தயார் செய்யவில்லை. நீங்கள்?

கூடிய மட்டும் யாரும் சமைக்கலாமில் இடம் பெரும் குறிப்புகளை தவிர்த்து விடலாம். அதில் இடம் பெரும் படங்களைப் பார்த்தாலே செய்து விடுவார்கள்.ஆகவே அதில் இடம்பெறாத ஏராளமான கூட்டாஞ்சோறு வல்லுனர்களின் குறிப்புகளை மட்டும் கருத்தில் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

அதுசரி....அடுத்த வாரத்திற்கான குறிப்பை யார் தேர்ந்தெடுப்பது என்று தாங்கள் குறிப்பிட வில்லையே. ஜட்ஜஸ்ஸிடமே ஒப்படைக்கலாம் என்றால் அட்மினின் உத்தரவு வேண்டும்.என்னைக் கேட்டால் ஏற்கெனவே டென்ஷனில் இருக்கும் ஜட்ஜஸ்க்கு இந்த வேலை கொடுக்க வேண்டாம் ஆகவே நேயர்கள் அனைவரையும் பங்கு பெற செய்வது நல்லது என்று நினைக்கின்றேன். இனி உங்கள் விருப்பபடி யார் என்று கூறவும் அதன் படியே செய்யலாம்,நன்றி.

அன்பு தோழி செல்வி, எப்படி இருக்கீங்க? ஆமாம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. அன்பு செல்லம் நன்றாக இருக்கின்றான். ஒபீடியன்ஸ் க்ளாசுக்கு போய் வந்த பின்பும் கூட என்னைத் தவிர வீட்டில் யார் சொல் பேச்சும் கேட்பதில்லை. எல்லாவற்றுக்கும் நான் வேண்டும் இல்லையென்றால் வீட்டில் யாருடனும் கோவாபரேட் செய்வதில்லை, இருந்தாலும் எல்லோருக்கும் அவன் என்றால் உயிர். வீட்டிலேயே வந்து சொல்லிக் கொடுக்கும் ஸ்பெஷல் டாக் டிரெய்னரை வரவழைக்கலாமா என்று யோசிக்கின்றோம். மற்றபடி சமீபத்தில் அறுசுவையில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் பிசினஸ் போன்ற சீரியஸ்ஸான பர்சனல்களை பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் மன்னிக்கவும். ஒரு வேளை உங்களை நேரில் சந்திக்க சந்தர்பம் கிடைத்தால் நிச்சயமாக அப்பொழுது அதைப் பற்றி பேசலாம் சரியா,விசாரிப்புக்கு நன்றி.

இனி கூட்டாஞ்சோறைப் பற்றி பேசுவோம். நீங்கள் கூறியது சரியே,வாரம் ஒரு குறிப்பு என்பது மிகவும் குறைவு தான். நான் கூட அதை நினைத்தேன், ஆனால் அதற்காக வாரம் ஐந்தாறு புதிய குறிப்பை செய்துப் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்குமா என்று சந்தேகமாக உள்ளது.அதை விட புதியதாக சமையலை கற்பவர்களால் ஆர்வமாக பங்கு கொள்ள முடியாது என்றே கருதுகின்றேன்.

அட்மின் 6000 குறிப்புகளுக்கு மேலே குறிப்புகள் வைத்திருந்தாலும் நாம் செய்யப்போவது கூட்டாஞ் சோறு பக்கத்திலுள்ள மிகவும் இலகுவான குறிப்புகளைத் தானே. இது கூட ஒரு விதத்தில் சமையலை கற்று தருவதற்கு சமம் என்றே நினைக்கின்றேன்.

முதலில் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கலாம், பிறகு கூட்டிக் கொண்டே போகலாம். மேலும் ஏதாவது கருத்து கூற வேண்டுமானால் கூறுங்கள், காய்கறி கீர் செய்து சுவைக்கும் ஆவலில் உள்ளேன்,நீங்கள்? நன்றி மீண்டும் சந்திப்போம்.

அக்கா,
செல்லப் பிராணியை வீடில் உள்ள ஒரு நபரைப் போல் நீங்க நேசிப்பது நினைத்தால் எனக்கு அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கு....எப்டி டிசிப்லின் சொல்லி கொடுபாங்க??அக்கா அற்சுவைல ஏற்பட்ட கசப்பு சம்பவம்னதும் எனக்கு திக் திக்குஙுது..நான் தான் எதுவோ ஒளறி இருக்கேன்னு தோனுது....ரகசியமா பிசினெச் பன்ரீங்கன்னு சொன்னாது உங்க மனசுக்கு வருத்தமா போச்சா??வேறு எடஹியும் மனசில வெக்கல..சும்ம உங்க வாயை கிளறி விடலாம்னு தான் அப்டி சொன்னேன்..அச்சசோ பொண்ணு இடஞ்சல் பன்ரா..அப்ரம் வரெண்

தளிகா:-)

மனோகரி, எங்கள் வீட்டு வால் பையன் (ஜாக்-ஜெர்மன் ஷெபர்ட்) ஒபீடியன்ஸ் க்ளாஸ் போகாமலே என் பெண்ணைத்தவிர யார் சொன்னாலும் கேட்பதில்லை. மெனக்கெட்டு சமைத்து, பிசைந்து நான் சாப்பாடு போட்டாலும் என் பெண் சொன்னால் தான் சாப்பிடுகிறான். அவளைக்கண்டு அவன் வாலை ஆட்டும் வேகத்தைப் பார்த்து எனக்கு பொறாமையாகக்கூட இருக்கும்.

ஒரு யோசனை - ஒரு வாரத்துக்கு 5 குறிப்பை செலெக்ட் செய்து அதை எல்லோரும் சமைத்து சிறந்தது எது என்று வரிசைப்படுத்தலாம். முந்தின வாரத்துக்கு விருதுகளைத் தேர்ந்தெடுப்பவர் 5 குறிப்பை செலெக்ட் செய்யலாம். சைவம் 5 அசைவம் 5. (அல்லது 3 - 3) சரியா. அதிக ஓட்டு வாங்கும் குறிப்பைக் கொடுத்தவர்களுக்கு சிறந்த சமையல் ராணிகள் (ஒரு சைவம், ஒரு அசைவம்) பட்டம் கொடுக்கலாம்.

நம்ம பாபுத் தம்பி என்ன சொல்றார்ன்னு கேப்போமா?
அன்புடன்
ஜெயந்தி

காய்கறி கீருக்கு தேவையான எல்லாம் நான் ரெடி பண்ணிட்டேன்:-). ஆனா பைனாப்பில் எஸ்ஸென்ஸ் மட்டும் இல்ல. அதான் வெயிட்டிங்:-(.

மேடம், எனக்கு கூட இந்த ஐடியா நல்லா வரும்னு தோணுது. "பல்சுவை"ல இனிப்பு ஒன்னு செலக்ட் பண்ணிட்டோம் இல்லையா:-). குழம்பு வகைகள்ல ஏதேனும் ஒரு குழம்பு, பக்க உணவுகள்ல ஏதேனும் ஒரு பக்க உணவுனு செலக்ட் பண்ணி சமச்சா, எல்லாமே கவர் ஆயிடும் இல்லயா. மற்ற அனைத்தும் இதில் அடங்கும் இல்லையா? இதர வகைகள் எல்லோரும் செய்யமாட்டாங்க. அதனால மத்த, இந்த மூனுலயும் ஒன்னு ஒவ்வொரு வாரமும் செலக்ட் பண்ணி பண்ணலாம்னு எனக்கு ஒரு யோசனை.
வாரம் ஒரு பல்சுவைகள், ஒரு குழம்பு வகைகள், ஒரு பக்க உணவுகள். அவ்ளவு தான். இதிலேயே மத்த எல்லாமே கவர் ஆயிடும்.
செலக்ஷன் நீங்க சொன்னா மாதிரி ஜட்ஜஸ்க்கு தந்தா பாவம், அவங்க. அதனால அந்த வாரம் யார் வந்து, இந்த தலைப்புல முதல்ல பதிவு போட்டு, இத சமைக்கலாம்னு சொல்றாங்கலோ, அவங்க சொல்ற அந்த குறிப்பையே மத்த அனைவரும் செய்து பார்க்கலாம். இதுலயும் ஒரு போட்டி. சும்மா ஒரு யோசனை:-)

நீங்க உங்க கருத்தையும் சொல்லுங்க மேடம்:-) Bye!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நன்றி ஹர்ஷினி, நீங்கள் கூறுவது போலவே,மற்றும் நமது சகோதரிகள் செல்வி&ஜெயிந்தி அவர்களின் ஆலோசனைகளைப் போல் தேர்ந்தெடுத்த குறிப்புகளையே சமைக்கலாம்.மற்றபடி இதில் போட்டி எதுவும் வேண்டாமே, மன்னிக்கவும் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.கட்டாயம் வேண்டும் என்றால் எந்த தடையும் இல்லை நடத்தலாம்.

நம்மைப் பொருத்தவரையில் கூட்டாஞ்சோறு குறிப்புகளை அனைவரும் செய்து பார்க்கும் சந்தர்ப்பமாக இது அமைந்தால் போதும். இன்னும் நமது நோக்கம் அனேகருக்கு சென்றடையவில்லை என்று தோன்றுகின்றது, ஆகவே நாம் முதலில் தேர்வுச் செய்த இனிப்பு மற்றும் நமது புதிய சென்சூரியனின் குறிப்பையும் எழுதியுள்ளேன் இந்த வாரத்துக்குள் செய்து விடலாம்.

குறிப்புகள் அனைத்தையும் ஒரே நாளிலிளோ, அல்லது அவரவரின் நேரத்திற்கேற்றபடி ஒவ்வொன்றாகவோ எப்படி சமைத்தாலும் சரி. இதற்குள் அடுத்த வாரம் என்னென்ன செய்யலாம் என்று நீங்களே இந்த வாரம் ஞாயிறுக்குள் தேர்வுச் செய்துவிடுங்கள். அதற்கடுத்த வாரத்திற்கு, நேயர்களின் விருப்பத்திற்கேற்றார் போல் முடிவுச் செய்யலாம் ஒகேவா.

மிகவும் சுலபமாகச் செய்யக் கூடிய இந்த வாரத்திற்கான சமையற் குறிப்பு:-

1.காய்கறி கீர்-#1565
2.கொத்தமல்லி சாதம்#1674
3.எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#4025
4.பொரிச்ச கூட்டு#4922
5.சிக்கன் பஞ்சாபி மசாலா.#5086, அவ்வளவுதான். மெனு காம்பினேஷன் எப்படி? நீங்க தான் சொல்லனும்.நன்றி.

மேலும் சில பதிவுகள்