குழந்தைக்கு 90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமா?

என் குழந்தைக்கு இப்போது இரண்டு மாதம் முடிந்து விட்டது.நாங்கள் இப்போது இந்தியாவுக்கு போக இருக்கிறோம்.அதாவது இந்த செவ்வாய் கிழமை(25-09-07).ஊரிலிருந்து திட உணவு கொடுக்கலாமுன்னு இருக்கிறேன்.90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமா?இல்லை 4 மாதம் ஆனவுடன் தான் திட உணவு கொடுக்க வேண்டுமா?ஏனென்றால் என் குழந்தை பால் குடித்தவுடன் தினமும் 3,4முறையாவது வாந்தி எடுக்குது.அதனால் தான் சீக்கிறம் திட உண்வு கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன்.எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.please help me.

அன்புள்ள ரம்பா,
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு திட உணவு கொடுப்பது தான் நல்லது..அட்லீஸ்ட் 4 மாதம் காத்திருக்கலாம்....குழந்தை அடிக்கடி வாந்தி எடுப்பது பற்றி அதிகம் கவலைப் பட வேன்டாம்...அது 6 மாதம் நெறுங்கும்போதே மெல்ல மாறிவிடும்..... சாதாரனமாக சாப்பிட்டதும் குழந்தை கக்கும்(posetting) அதைத் தான் வாந்தி என்று சொல்கிரீர்களா என்றும் தெரியவில்லை....பயங்கர வேகத்தில் வாந்தி எடுப்பதானால் குழந்தை அசௌகரியம் கான்பிக்குமானால் மருத்துவரிடம் கேட்கலாம்....ஒரு சில குழந்தைகளின் உடல் எடை,ஆரோகியத்தைப் பொருத்து மருத்துவரே 3 மாதத்தில் திட உணவு கொடுக்கச் சொல்வார்...உங்கள் குழந்தை சரியான எடையும்(பிறக்கும்போது இருந்த எடையிலிருந்து 1 கிலோ கூடியிருக்க வேன்டும் மூன்றாவது மாதத்தில்) ஆரோகியமும் இருந்தால் 6 மாதம் வரை காத்திருக்கவும்..அதுவரை தாய்ப்பாலே சிறந்தது..மன்றத்தில் குழந்தையின் ஆரோகியம் என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கு நிறைய விளக்கம் கிடைக்கும்.....அப்ரமா எழுதுரேன் ..சரியா?

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்