சுண்டைக்காய் குழம்பு

தேதி: September 24, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

சுண்டைக்காய் - 1 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
அரைப்பதற்கு:
தேங்காய்த்துருவல் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப கூட்ட அல்லது குறைக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


 

சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி நீரில் அலம்பவும். வாணலியில் தண்ணீர், புளிக்கரைசல், உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சுண்டைக்காயை போட்டு வேக விடவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மையாக அரைக்கவும். சுண்டைக்காய் வெந்தவுடன் அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, புளி, காரம் சரி பார்க்கவும். நன்கு கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்கவும். குழம்பு ரெடி.


இந்த குழம்பு அதிக கெட்டியாக இருக்க கூடாது. இதே முறையில் கத்தரிக்காய்,
முருங்கைக்காய், பலாக்காய், பலாக்கொட்டை போன்ற காய்களிலும் குழம்பை சிறிது கெட்டியாக செய்யலாம். குழம்பு தாளிக்கும் போது வெங்காயம் பிரவுன் நிறம் ஆக வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

it was very nice .now only did and saw.

செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தது மகிழ்ச்சி லாவண்யா ஷங்கர். நன்றி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!